11/28/2009

சிறப்பு புகைப்படங்கள்









பெருநாள் தொழுகை



நபிவழியில் நம் தொழுகை
சரியாக காலை 7.15மணிக்கு
களப்பணிகளில் சகோதரர்கள்
பெரு நாளை கொண்டாட தயாரான மக்கள்








பெருநாள் தொழுகை



இறையின் கிருபையால் நமது பள்ளி வளாகத்தில் இனிதே பெரு நாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..அல்ஹம்துலில்லாஹ்.. காலை சரியாக 7.15 மணிக்கு தொழுகை என அறிவித்து இருந்தோம். 6.45முதலே பெண்கள் வரத்துவங்கி விட்டனர்.. அதிலிருந்து பெண்களும் ஆண்களும் கொஞ்சம் கொஞ்சமாக வர..



சரியாக 7.18முதல் பெரு நாள் தொழுகை எப்படி தொழவேண்டும் என விளக்கி விட்டு பெரு நாள் தொழுகை நடைபெற்றது. தொழுகையின் போது நமது மைதானம் நிரம்பியது. காலையில் இருந்த பனிப்பொழிவையும் பாராமல் மக்கள் குளித்து, புத்தாடை அணிந்து, நறுமணத்துடன் அல்லாஹ்வை அதிகம் புகழ்ந்தவர்களாக வந்தனர்.

11/27/2009

இஷா தொழுகைக்குப்பின்
சகோதரர்கள் ஆலோசனையில்..

செய்திகள்

இன்ஷால்லாஹ் நாளை காலை
தொழுகைக்கு உள்ள ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இன்று மாலை ஆட்டோ விளம்பரமும் செய்யப்பட்டது.
அதனுடன் பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது.




இன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின்
நமது வளாகத்தில் மழையால் ஒரு சில பகுதிகள் பாதிக்கப்பட்டு இருந்தது.
அது நமது சகோதரர்களால் செப்பனிப்பட்டது.
இடையில் சகோதரர்களுக்கு தேனீர் வழங்கப்பட்டது.
அனைவருக்கும்
எமது இனிய
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

இன்றைய குத்பா உரை

இன்று வெள்ளிக்கிழமை குத்பாவை
நமது பள்ளியின் இமாம் முனிர்ஸ்லாஹி அவர்கள் உரையாற்றினார்கள்.
இன்றைய உரையில் இப்றாஹிம் நபி அவர்களின் தியாகத்தில்
தனது மகனை அறுக்க சென்ற சம்பவத்தை நினைவு கூர்ந்து,
அந்த சம்பவங்களை எடுத்துச் சொல்லியும், அதிலிருந்து,
அந்த தியாகத்தை நினைவு கூர்ந்து நாம் அனைவரும் குர்பானி
(animal sacrifice)கொடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

குர்பானி தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து
கொடுக்கலாம் என கூறினார்.
கூட்டாக சேர்ந்து கொடுப்பவர்கள் மாடு அல்லது ஒட்டகம்
கொடுக்கலாம் என கூறினார்.. குர்பானியின் தோலை, கயிறை
அதை அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது, அதேபோல
அதன் இறைச்சியை குடும்பத்தார்களுக்கும் , உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும்,
கொடுக்கவேண்டும் என கூறினார். அதே போலே இறைச்சியை
மூன்று நாட்களுக்கும் மேலேயும் வைத்து உபயோகிக்கலாம் என கூறினார்.




பெருனாளைக்கு அடுத்து வரும் மூன்று நாட்களும் அய்யாமுல் தஷ்ரீக் என
சொல்லப்படும் நாட்களாகும் .. இந்த நாட்களில் எந்த நோன்பும் வைக்கக்கூடாது.
(கூடுதல் விபரங்கள் தடை செய்யப்பட்ட நாட்கள் என்ற கட்டுரையை பார்க்கவும்)

குர்பானி கொடுக்க இருப்பவர்கள்
பிறை 13 சூரியன் மறையும் வரை கொடுக்கலாம்.
அதன் பின்னர் கொடுக்கக்கூடாது
குர்பானிக்காக பிராணியை அறுக்கக்கூடாது.
நல்ல அழகான உரை.
பயணத்தில் இருந்து வந்த பலரும்
இன்றைய ஜும்மாவில் ஆஜரானார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்.

11/26/2009

குர்பானி (உழ்ஹிய்யா) தோல் வசூல்

அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கடந்த சில வருடங்களாக குர்பானி பிராணியின் தோலை வசூல் செய்து
அதனை விற்று நமதூர் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருகிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்.

அதே போல் இந்த வருடமும் தாங்களுடைய குர்பானி பிராணியின் தோலை
எங்களுக்கு கொடுத்து நமதூர் ஏழைகளுக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தோலை கொடுக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள..
முஹம்மது யாக்கூப் ; 90421 21925
காசிம் ; 90033 85399
கபார் ; 98658 51693
ஹாஜா மைதீன் ; 99437 59280
இன்ஷால்லாஹ் ஹஜ் பெரு நாள் தொழுகை
சரியாக 7.15 மணிக்கு நமது வளாகத்தில் நடைபெறும்

11/25/2009

11/24/2009

என்சபை (மெய்ஞானம்)

வலைத்தளம் ஒன்றில் படித்தது உங்கள் பார்வைக்கு..


சகோதரர்களே! இலங்கையைச் சேர்ந்த ஒரு சேஹு டம் பையத் வாங்கி ஏமாந்த ஒரு நண்பர், அந்த செய்கின் குணநலன்கள் எப்படி இருக்கிறது என்பதை நமக்கு அனுப்பித்தந்திருந்தார்

அதனை உங்களின் பார்வைக்காக இங்கே பதிவு செய்கிறேன். இதனை பதிவு செய்வதற்கு முன்பாக பலரிடம் விசாரித்து அறிந்துகொண்ட பின்பே இங்கே இடுகிறேன்.

1. நானே முஹம்மதுநபி (ஸல்) அவர்களின் உள்ரங்க வெளிரங்க வாரிசு என்று சொல்வது.
2. இந்த காலத்தின் குத்பு என்று பறைசாற்றிக்கொள்வது.
3. இந்த உலகமே இவருடைய பார்வையில் தான் நடைபெறுகிறது என்று கூறுவது.
4. இனி வரக்கூடிய காலங்களும் இவருடைய பார்வையிலேயே நடைபெறும் என்று கூறுவது.
5. இவரின் பெயரைச் சொல்லி அழைத்தால் ஓடோடி வந்து கப்பாற்றுவேன் என்று கூறுவது.
6. இவரைப்போன்ற சக்தி படைத்தவர்கள் இனிமேல் யாரும் தோன்றமாட்டார்கள் என்று கூறுவது.
7. 500 ஆண்டுகளுக்கு முன்வரை இவரைப்போன்று சக்தி படைத்தவர்கள் யாரும் தோன்றவில்லை என்று கூறுவது.
8. நானே கிப்லாவாகவே இருக்கின்றேன் என்று சொல்வது.
9. ஹஜ்ஜுக்கு செல்கிறேன் என்று இவரின் வீட்டிற்கு செல்லும் இவரின் முரீதீன்களை ஊக்குவிப்பது.
10. இவரின் பக்தர்களை நாய் பேய் என்று திட்டுவது.
11. தனது செய்கு என நினைத்து இவரிடம் கூறிய ரகசியங்களை மற்ற பக்தர்களிடம் பகிர்ந்து கொள்வது.
12. ஒருவர் ஏதாவது சிறிய தவறுகள் செய்துவிட்டால், அந்த தவறுகளை மற்ற பக்தர்களிடம் பகிர்ந்துகொண்டு சிரித்து மகிழ்வது
13. சுவர்க்கம் நரகம் என்பதெல்லாம் இந்த உலகத்தில் மட்டும் தான் என்று கூறுவது
14. பக்தர்களை ஆட்டம் ஆட சொல்லி ரசிப்பது.
15. இவர் உணவருந்தி கை கழுவிய தண்ணீரை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு குடிப்பதை ரசித்து பார்ப்பது.
16. இன்று சொன்னதை மறுநாள் மாற்றிச் சொல்வது.
17. சொத்துக்கள் வாங்கி குவிப்பது.
18. வட்டி வாங்கும் பக்தர்களை கண்டுக்காமல் இருப்பது. இவர்கள் கொடுக்கும் காணிக்கையை சந்தோசமாக ஏற்றுக்கொண்டு ஆசிர்வதிப்பது.
19. காலில் விழும் பக்தர்களை ஊக்குவிப்பது.
20. ஷரியத்தை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்றுகூறும் இவரின் பக்தர்கள் பெரும்பாலும் ஷரியத்தை கடைபிடிக்காமல் இருப்பதை கண்டுக்கொள்ளாமல் இருப்பது.
21. நானே எல்லாம் என்று கூறுவது.
22. எளிய ஆடை அணிந்து தான் மிகவும் ஏழ்மையானவன் என மற்றவர்களை நம்ப வைப்பது.
23. மார்க்க அறிஞர்கள், படித்த பண்பாளர்களை தன் காலில் விழவைத்து சாதித்துக்கொண்டிருப்பது.
24. நீதி நியாயம் இன்றி தீர்ப்பு வழங்கி நீதிபதியாய் காட்டிக்கொள்வது.
25. புதிய புதிய காரணங்களைக்கூறி பக்தர்களிடம் கோடிக்கணக்கில் பணம்பறிப்பது.
26. குர் ஆனுக்கு வேறு உள் அர்த்தங்கள் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே அந்த உள் அர்த்தத்தை இதுவரையிலும் சொல்லாமல் இருப்பது.
27. இறைவனின் உண்மைத்தத்துவத்தைக் கூறுகிறேன் என்று ஒன்றுமே இல்லை என்று கூறுவது.
28. அல்லாஹ் என்கிற பெயரைவிட இவரின் பெயரையே அதிகம் பக்தர்களை உச்சரிக்க வைத்தது.
29. தொழாமல் இருக்கும் பக்தர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது.
30. ஜும்மால்லாம் சும்மா என்று கூறி ஜும்மா தொழுகைக்கு புதிய விளக்கம் கொடுத்தது.
31. நானே பக்தர்களை தேடி வருகிறேன் என்று கூறி வருடம் முழுவதும் இந்தியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா என்று சொகுசுப்பயணம் மேற்கொள்வது.
32. பக்தர்கள் படும் கஷ்டங்களை எல்லாம் அறிந்துகொள்ளாமல், வசூல் வேட்டையாடுவது.
33. பாவம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை, தன்னை அறியாமல் இருப்பது தான் பாவம் என்று கூறுவது.
34. இறைவனிடம் ஒன்றித்தல் தான் சுவர்க்கம் என்று சுவர்க்கத்திற்கு புதிய விளக்கம் கொடுத்தது.
35. ஒருவருக்கொருவர் போட்டி பொறாமைகளை வளர்ப்பது.
36. நானே சிவன், நானே ஏசு, நானே அல்லா என்று தன்னைத்தானே பறைசாற்றிக்கொள்வது.
37. உறவுகளைப் பிரிப்பது.
38. சகோதரர்களிடையே பிணக்கத்தை ஏற்படுத்துவது.
39. கணவன் மனைவியை பிரித்து வைத்து சாதித்தது.
40. பலவிதமான சாபங்கள் விட்டு பக்தர்களை பயமுறுத்துவது.
41. பக்தர்களின் மனதின் ஓட்டத்தை அறிவேன் என்று ஏமாற்றிக்கொண்டிருப்பது.
42. அவர் வீட்டில் வரும் முனிசிபாலிட்டி தண்ணீரைப் பாட்டிலில் பிடித்து ஜம்ஜம் நீர் என்று கூறும் பக்தர்களை கண்டிக்காமல் இருப்பது.
43. இவரை பின்பற்றக்கூடிய புதிய சமுதாயத்தை உருவாக்க முனைவது.
44. பெரிய ஞானிகள் யாராக இருப்பினும் துச்சமாக மதிப்பது.
45. ஆயிரம் வருடம் ஆனாலும் என்னைப்பற்றி யாராலும் அறிந்துகொள்ள முடியாது என்று புதிர் போடுவது.
46. என்னைப்பற்றி அறிந்து கொள்ள யாரேனும் முயலுவானேயானால் அவன் மதிக்கெட்ட மூடனாவான் என்று பறைசாற்றியது.
47. தனது இளமைப்பருவத்தில் தனது தந்தையின் ஜியாரத்திற்காக இந்தியா வந்து, இங்கே உள்ள சொத்துக்களைக் கண்டு தன்னை செய்காக நிலைநிறுத்திக்கொண்டது.
48. கீழக்கரைக்கரையச் சேர்ந்த ஒரு வலியுல்லா அவர்களின் பாடல்களை படித்து ஞானம் கற்றுக்கொண்டது.
49. அந்த வலியுல்லாவின் ஞானப்பாடல்களைத் தழுவியே தன்னுடைய பாடல்களில் சற்று திருத்தி எழுதியது.
50. தன்னை ஆளாக்கிய ஒரு பெரியவரை மற்ற பக்தர்களின் முன்னிலையில் அல்லாட வைத்து ரசித்தது.
51. பல ஞான புத்தகங்களை படித்து அதன் தழுவலில் நூற்களை எழுதுவது.
52. பக்தர்கள் மற்ற செய்குகளைப்பார்த்து அவர்களின் பால் சென்றுவிடுவார்கள் என்று பயந்து மற்ற செய்குகளை தனது பக்தர்கள் பார்க்கக்கூடாது என கட்டளையிட்டது.
53. பிடிக்காத பக்தர்களை பட்டப்பெயர்கள் கொண்டு அழைத்து ரசித்து கேலி செய்வது.
54. தன்னை ஆளாக்கிய ஒரு பெரியவர் நிறைவேற்றிய ஹஜ்ஜை, காபிர் செய்த ஹஜ்ஜு என்று பத்வா கொடுத்தது.
55. இவர் பெயரில் கஸீதா இயற்றி அதனை பக்தர்கள் ஓதிவருமாறு கட்டளை இடுவது.
56. பயமுறுத்தியே பக்தர்களை அடிமையாக்கிக்கொள்வது.
57. குர் ஆன் மற்றைய கிரந்தங்களிலிருந்து ஏதேனும் விளக்கம் கேட்டால், அவர்களை முறைத்து பயமுறுத்துவது.
58. வேறு அவ்லியாக்களையோ, நாதாக்களையோ கனவில் கண்டு அதை செய்குவிடம் தெரிவித்தால், அந்த பக்தரை தலைக்கணம் பிடித்தவன் என்று கூறுவது.
59. குடிகாரனிடமிருந்து வருமானம் வருவதால், அவனை முஸ்லீமைவிட சிறந்தவன் என்று கூறுவது.
60. செய்யது வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் குடிகாரராக இருந்தாலும், அவருக்கு மரியாதையும் கண்ணியமும் செய்ய வேண்டும் என்று கூறுவது.
61. மீலாது விழா என்கிற பெயரில் வருடா வருடம் பக்தர்களின் கஷ்டத்தைக்கூட அறியாமல், அவரின் வீட்டிற்கு கட்டாயமாக வரவழைப்பது.
62. "தானே தன்னில் தானானான்" என்று ஒன்றுமே புரியாத சுலோகத்தை பக்தர்களுக்கு வழங்கியது.
63. ஞான விளக்கத்தில் பக்தர்களை உயர வைக்கிறேன் என்று அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள பயத்தைப் போக்கியது.
64. பாராட்டு முகஸ்துதியை விரும்பி ரசிப்பது.
65. ஞானத்தைப்பற்றி பேசச்சொன்னால், கேலியும் கிண்டலும் செய்து பக்தர்களை பரவசமூட்டுவது.
66. பெருமானார் (ஸல்) அவர்களின் மீது நேசம் வைப்பதை விட தன் மீதே பக்தர்கள் அதிகநேசம் வைப்பதை மிகவும் விரும்புவது.
67. வஹ்ஹாபிகளை எதிர்க்கிறேன் என்று அடியாட்களை தம்முடன் அமர்த்திக்கொள்வது.
68. நோய்களை நீக்கக்கூடியவர் என்று பக்தர்கள் கூறுவதை அமைதியாக ஏற்றுக்கொள்வது.
69. ஆபத்துகளிலிருந்து காப்பாற்றக்கூடியவர் என்று பக்தர்கள் புகழ்வதை புன்முறுவலுடன் ரசிப்பது.
70. பெருமானார் (ஸல்) அவர்களின் அவதாரமே நான் தான் என்று பறைசாற்றிக்கொள்வது.
71. இவரே கிப்லா என்று கூறி இவரைச் சுற்றிவரும் பக்தர்களை ஊக்குவிப்பது.
72. இவரின் வீட்டிற்கு சென்றுவிட்டு வந்தாலே ஹஜ்ஜுக்கடமை முடிந்து விட்டது என்று கூறுமளவிற்கு பக்தர்களை மடமையின்பால் இழுத்துச்செல்வது.
73. பகுதாதில், பாரதத்தில் மாறி மாறி தோன்றுவேன் என்று கூறி பக்தர்களுக்கு பக்திப்பெருக்கூட்டுவது.
74. இவரிடம் பையத் பெற்றால் பாவங்கள் நீங்கும் என பகர்வது.


சகோதரர்களே! மேற்கண்ட இந்த செய்திகளை தீர விசாரித்த பின்புதான் இங்கே பதிவு செய்திருக்கின்றேன். இது குறித்த உங்களின் கருத்துகள் மிகவும் வரவேற்கப்படுகிறன.

வலைத்தளம் செல்ல

http://ensabai.blogspot.com

11/23/2009

பாவம் பொருத்தருள...

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவர்

"அஸ்த;.க் ;.பிருல்லாஹல் அழீமல்லதீ லாயிலாஹ
இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூமு வ அதூபு இலைஹி"


என்று கூறுகிறாரோ, அவர் போர்க்களத்திலிருந்து
வெருண்டு ஓடியிருப்பினும் அவருக்காக அல்லாஹ்
பாவம் பொருத்தருளுகிறான் என்று கூறினார்கள்..

நூல்கள்; அபூதாவூது, திர்மிதீ, ஹாகிம்.

கூட்டுக்குர்பானி

அன்பான கொள்கை சகோதரர்களே!

இன்ஷால்லாஹ் இந்த வருடம் சென்ற வருடம் போல
நமது அமைப்பின் சார்பில் கூட்டுக்குர்பானி செய்ய ஏற்பாடு செய்கிறோம்.
கூட்டு குர்பானியில் விருப்பம் உள்ளவர்கள்
நமது நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.
ஒரு குர்பானி ரூபாய் 750.00

(இன்ஷால்லாஹ் குர்பானி எதிர் வரும்
ஞாயிற்றுக்கிழமை கொடுக்கப்படுகிறது.)

11/21/2009

அல்ஹம்துலில்லாஹ்!

அன்பான கொள்கை சகோதரர்களே!

அனைவருக்கும் முதலாக இஸ்லாம் சொல்லித்தந்த
இனிய ஸலாத்தினை சொல்கிறோம்.

நமது செய்திகள் பரிமாற்றத்திற்காக
நமது இனையத்தில் இதுவரை & இதோடு சேர்த்து
நூறு இடுகைகள் செய்துவிட்டோம்.
அல்லாஹ்விற்கு இதற்கு மிகப்பெரும் நன்றியை சொல்லவேண்டும்.

இன்ஷால்லாஹ் இனையம் மேலும் நல்ல செய்திகளுடன் உலாவர,
எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள்.
முதன் முதலாக உங்களிடம் கருத்துக்கணிப்பையும் கேட்கிறோம்.
ஏதாவது கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்.
எல்லாம் வல்ல இறைவன்
நம்மை இரு உலகிலும் கண்ணியப்படுத்த பிரார்த்திவர்களாக!
இந்த மடலை முடிக்கிறோம்.

அரபா நோன்பு

அரபா தினத்தில் நோன்பு நோற்பது
அதற்கு முந்திய வருடம், பிந்திய வருடம்
ஆகிய இரு வருடங்களின் பாவங்களுக்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான்
என்று நான் நம்பிக்கை வைக்கிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் ; திர்மிதீ <680>

சவூதி அரேபியாவில் அரஃபா தினம்

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சவூதி அரேபியாவில் உள்ள இரு புனித தலங்களான மக்கா & மதீனாவை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் நாள்தோறும் சவூதிக்கு வந்து கொண்டு உள்ளனர்.

இந்நிலையில், ஹஜ் கிரியையின் மிக முக்கிய அம்சமான, பிறை 9 ஆம் நாள் (அரஃபா தினம்) வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி வியாழக்கிழமை என்பதாக, சவூதி சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

17.11.2009 செவ்வாய் மாலை, சவூதியின் பல பகுதிகளில் பிறை பார்த்ததின் அடிப்படையில், சவுதியில் (உலகம் முழுவதும் அல்ல) துல்ஹஜ் முதல் பிறை நவம்பர் 18 புதன் கிழமை என்றும், அரஃபா தினம் நவம்பர் 26 வியாழக்கிழமை என்றும், ஹஜ் பெருநாள் நவம்பர் 27 வெள்ளிகிழமை என்றும், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி அப்துர்ரஹ்மான் அல்-கெல்யா அறிவித்தார்.

இந்நிலையில், ஜம்ராத்தில் கல் எறியும் பகுதியான மினாவில் உள்ள “ஜம்ராத் பாலம்”, ஐந்தடுக்குகளாக ஹை-டெக் வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு இவ்வருட ஹஜ் கிரியைகளுக்காக தயாராகி உள்ளது. கிட்டத்தட்ட 4.5 பில்லியன் சவூதி ரியால் பட்ஜெட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த 5 அடுக்கு ஜம்ராத் பாலம், ஒரு மணி நேரத்தில், 3 லட்சம் பேர்கள் கல்லெறிய வசதியாக அமையும். கல்லெறியும் இடத்தில் ஹாஜிகளுக்கு பாதுகாவலாகவும், கூட்டத்தை ஒழுங்கு படுத்தவும், 12000 காவல்துறையினர் தயாராக இருப்பார்கள் என்று ஹஜ் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

10 நுழைவாயில்களும், 12 வெளியேறும் வாயில்களும் உள்ளதாக அமைக்கப்பட்டுள்ள இந்த் பாலம், கூட்ட நெரிசலை தவிர்த்து, உயிர்ச்சேதம் ஏற்படுவதை தவிர்க்க உதவுவதாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

தகவல் உதவி;
சவுதியில் இருந்து
நமது அமைப்பின் மூத்த உறுப்பினர்
அஜ்மல்கான் அவர்கள்.

11/17/2009

மோதினார் தேவை

அன்பானவர்களே!

தவ்ஹீத் பள்ளிக்கு
ஒரு மோதினார் தேவைப்படுகிறது.
இதை பார்ப்பவர்கள்
தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்.
நல்ல சம்பளமும், வசதிகளும் செய்து தரப்படும்.

தொடர்புகளுக்கு
கபார்கான் ; 98658 51693

பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள்

பிரார்த்தனைகள் ஏற்கப்படும் நேரங்கள்
ஹதீஸ்களின் தொகுப்பில் இருந்து..

கடமையான தொழுகைக்குப் பின்..

கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.

''எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''இரவில் கடைசியிலும் கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும்'' என்று பதிலளித்தார்கள். அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதீ 3499

ஸஜ்தாவின் போது...

ஓர் அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகின்றது.

''ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன்னுடைய இறைவனை நெருங்குகின்றான். எனவே ஸஜ்தாவில் துஆவை அதிகப்படுத்துங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 482

இரவின் கடைசி நேரத்தில்...

இரவின் கடைசிப் பகுதியில் செய்யும் துஆவும் பதிலளிக்கப்படும் துஆக்களில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவை மூன்றாகப் பிரித்து, கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்திற்கு தினமும் இறங்குகின்றான். ''என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால் நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுகின்றான். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6321

தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ பிரயாணத்தின் போது...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3. தந்தை தனது மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை. அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 3908

நோன்பாளி நோன்பு துறக்கும் போது...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரின் பிரார்த்தனை மறுக்கப்படாது. நீதியான அரசன், நோன்பாளி நோன்பு துறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை, பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை. அதை அல்லாஹ் புழுதிகளை விட்டும் உயர்த்துவான். அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 175

பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்...

''பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 521

போர்க்களத்தில்...

''பாங்கின் போதும், சிலர் சிலருடன் மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள் மறுக்கப் படுவதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) நூல்: அபூதாவூத் 2540

ஜும்ஆ நாளில்...

''வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ் விடம் எதையேனும் கேட்டால் அதை அல்லாஹ் அவருக்குக் கொடுக்காமல் இருப்பதில்லை'' என்று அபுல்காஸிம் (நபிலிஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை செய்து காட்டினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6400

எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது, நம்மைப் படைத்த ஏகனாகிய அல்லாஹ்விடத்தில் மட்டுமே முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல், பிரார்த்தனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைக் கடைப்பிடித்து பிரார்த்திப்போமாக!

11/14/2009

'ஜம்உ' என்னும் சேர்த்து தொழுதல்

அன்பானவர்களே!
இன்று காலை முதலே
நமதூரில் பெய்து வரும் அடமழையின் காரனமாக,
நமது பள்ளியில் இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின்,
முடிவு செய்யப்பட்டு இஷாத் தொழுகையும் சேர்த்து தொழவைக்கப்பட்டது.
அல்லாஹ் அக்பர்.

குர்பானி சிறப்பும் செய்முறைகளும்

அல்லாஹ்விடத்தில் கண்ணியத்தையும், சிறப்பையும் பெற்ற,
தியாகச் செம்மல் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின்
தியாகத்தை நினைத்துப் பார்த்து நாமும் படைத்த இறைவனுக்காக
ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து அல்லாஹ்விற்கு அர்பணித்து
ஏழை எளியவர்களுக்கு கொடுத்து மகிழும் மகத்தான ஒரு வழிபாடுதான் குர்பானி.
இறையச்சம் ஒன்றை மட்டுமே இலட்சியமாக கொண்டு செயல்படும் வழிபாடகும்.

"குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை.
எனினும் உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது. (அல்குர் ஆன் 22;37)"

*குர்பானி ஹஜ்ஜுப் பெருனாள் தொழுகை தொழுத பின்னர்தான் கொடுக்கப்படவேண்டும்
*குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜூ மாதத்தின் ஆரம்ப நாள் முதல்
குர்பானி கொடுக்கும் வரை நகம் ,முடி, எதையும் களையக்கூடாது.
*குர்பானி பிராணி நல்ல கொழுத்ததாகவும், குறையில்லாததாகவும் இருக்கவேண்டும்.
*குர்பானி கொடுக்கும் பிராணி கொம்புடையதாக இருப்பது நல்லது.
*குர்பானி பிராணியை கொடுப்பவர் அறுப்பது சிறந்தது.
*பிராணியை அறுக்கும்போது ' பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்
என்று கூறவேண்டும்.
*குர்பானியை ஹஜ்ஜுப் பெருனாள் அன்றும், அதைத் தொடர்ந்து வரும்
மூன்று நாட்களிலும் கொடுக்கலாம்.
*இறைச்சியை இத்தனை பங்குதான் வைக்கவேண்டும்
என்ற எந்த நிபந்தனையும் இல்லை.
*தோலை ஏழை எளியவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
*குர்பானி பிராணியை கிப்லாவை முன்னோக்கி வைத்துத் தான்
அறுக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது.
*குர்பானி மாமிசத்தை அண்டை வீட்டு மாற்று மதத்தவர்களுக்கு கொடுப்பதில் தவறில்லை.
* தோலை உரித்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.

11/13/2009

வெள்ளிக்கிழமை

இன்றைய உரையில் சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக
இப்றாஹிம் (அலை) அவர்களின் தியாக வாழ்க்கை,
சாரா(அலை) அவர்களுக்கு துனையாக வந்த ஹாஜர்(அலை),
அவர்களுடைய வாழ்க்கை மக்கா நகரில் வந்து குடியேறியது,
அந்த புனித நகருக்காக இப்றாஹிம் (அலை) அவர்கள் துவா செய்தது,
ஜம் ஜம் தண்ணீர் ஊற்று வந்தது என அனைத்தையும் சொற்பொழிவாற்றினார்.
மிக நீண்ட அழகான உரை..
நாம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய செய்திகள்

இறையில்லம் நிறைவடைய..




இந்த இறையில்லம் நிறைவடைய
உங்கள் பங்களிப்ப்பை செய்திடுங்கள்




மேலதிக விபரங்கட்கும்.. தொடர்புகளுக்கும்..

முஹம்மது யாக்கூப்.
அப்துல் காஸிம்.
கபார் கான்.

'மின்னஞ்சல் வழியே தொடர்பு கொள்ள
"anwaronline@in.com"


அல்லாஹ் இரு உலகிலும் நற்பாக்கியங்களை தருவானாக!

11/07/2009

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை குத்பா உரையை
நமது பள்ளியின் இமாம் முனிர் ஸலாஹி அவர்கள்
உரையாற்றினார்கள் . இந்த உரையில்
அடுத்து நம்மை நோக்கி வருவது




துல்ஹஜ் மாதமாக இருப்பதால்
நபி இப்றாஹிம் அவர்களின் தியாகத்தை தொகுத்து சொன்னார்.
மழை நேரமாக இருந்ததால் கூட்டம் குறைவாக இருந்தது..

உணவை உண்டு முடித்தபின் து ஆ



அல்ஹம்து லில்லாஹில்லதீ அத் அமனீ
ஹாதா வரஜகனீஹி, மின் ;.கைரி ஹவ்லின்
மின்னீ வலா குவ்வதின்.

என்னிலிருந்துள்ள முயற்சி மற்றும் என் பலமின்றி
எனக்கு இதை உண்ணக்கொடுத்து, அதை வழங்கவும்
செய்தவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகுக!

நூல்; அபூதாவுது, இப்னுமாஜா

11/06/2009

அர் ரஹ்மான் செய்திகள்

அர் ரஹ்மான் பள்ளியில்
சென்ற வாரம் அனைத்து மாணவ - மாணவிகளுக்கும்
அடையாள அட்டை வழங்கப்பட்டது..
அதன் ஒரு புகைப்படம்

மழை பெய்யும் நாட்களில்!

மழை தொடரும் நாட்களில் ( நினைவிற்காக)
நாயகம்(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகள்

காற்று புயல் வீசுகின்ற போது

அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக கைரஹா,
வ அஊது பிக மின் ஷர்ரிஹா.

யா அல்லாஹ் நிச்சயமாக அதன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன்.
அதன் தீமையிலிருந்தும் உன்னைக்கொண்டு நான் காவல் தேடுகிறேன்.
நூல்கள் : அபூதாவுது, இப்னுமாஜா

இடி இடிக்கின்ற போது

ஸுப்ஹானல்லதீ யுஸப்பிஹுர் ர;.து பிஹம்திஹி
வல் மலாயிகத்து மின் கீ;.பதிஹி

அவன் தூயவன் அவன் எத்தகையவனென்றால்
அவனின் புகழைக் கொண்டு இடி துதிக்கிறது.
மற்றும் மலக்குகள் அவனது பயத்தால் துதிக்கின்றனர்.
நூல் ; முஅத்தா.





மழை பெய்து விடும்போது

அல்லாஹும்ம ஸய்யிபன் நா;.பிஅன்

பயன் தரக்கூடிய மழையாக யாஅல்லாஹ் நீ ஆக்கி வைப்பாயாக!
நூல்; புகாரி

மழை பெய்த பிறகு

முதிர்னா பி ;.பளில்லாஹி வரஹ்மதிஹி

அல்லாஹ்வின் பேரருள் மற்றும் அவனது அருளால்
நாங்கள் மழை பெற்றோம்.
நூல் ; புகாரி

ரமலான் பரிசுப்போட்டி

ரமலான் மாதம் நமது அறக்கட்டளை சார்பாக
ரமலான் பரிசுப்போட்டி ஒன்று நடத்தினோம்.
இதில் மொத்தம் 18 வினாக்கள் மக்களிடம் தொடுக்கப்பட்டு,
அந்த வினாக்களுக்கு பதிலை நமது பள்ளியில்
அமைக்கப்பட்டு இருந்த ஒரு பெட்டியில் ஒட்டப்பட்ட
கவர்களில் மக்களிடமிருந்து வாங்கப்பட்டது.
இதில் பலரும் சரியாக விடை எழுதி இருந்தனர்.
குலுக்கல் முறையில் நாம் அதிர்ஷ்ட சாலியை தேர்ந்து எடுக்க
முதல் பரிசை தட்டிச்சென்றவர்
நத்தர் பாதுஷா இடையக்காடு
இரன்டாம் பரிசை வென்றவர்
சஹானா பேகம் சூர்யதோட்டம்
மூன்றாம் பரிசை பெற்றவர்
ஆய்ஷா பீவி இடையக்காடு.

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...