5/28/2010

அன்பானவர்களே சகோதரர்களே!
இந்த இனையத்தைப் பார்க்கும் ஆலிம்களே!
இது போன்ற இனையங்களில் செய்திகளுடன்
புகைப்படங்கள் எடுத்து வெளியிடுகிறோம்.
அதாவது உருவ படங்கள்?
அது கூடுமா? கூடாதா?
நேரம் கிடைத்தால் கருத்துரைகள் எழுதுங்கள்
அல்லது அருகே உங்கள் எண்ணங்களை வாக்கெடுப்பில் தெரிவிக்கவும்.

செய்திகள்

இறையின் பெயரால்..

எல்லாம் வல்ல இறைவன் உதவியால்
சென்ற வாரம் குத்பா மற்றும் 'அல்ஹம்துலில்லாஹ்'
நிகழ்ச்சி இரண்டும் இனிதே நிறைவேறியது.
நிகழ்ச்சி மஹ்ரிப் தொழுகைக்குப்பின் துவங்கியது..
நேரம் ஆக.. ஆக.. கூட்டம் நிரம்பியது..
அர் ரஹ்மான் அரங்கம் முழுவதும் நிரம்பியது.
ஏராளனமான பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இன்றைய குத்பா சிறப்பாக அமைந்தது.
இன்றைய முதலாவது உரையில்
குர் ஆன் மட்டும் போதும் என்ற கூட்டம்
எப்படி? எப்போது உருவானது?
என வரலாற்றை எடுத்து வைத்து,
அவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டை
அழகாக விளக்கினார்.

அதே போல இரண்டாவது அமர்வில்
நவ நாகரீக உலகில் மேற்கத்திய கலாச்சாரத்தின் அடிச்சுவட்டில்,
திருமணத்திற்கு முன், நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம்
தொலைபேசி அல்லது அலைபேசியில் உரையாடுவது,
நேரில் பார்த்து உரையாடுவது போன்றவைகள் கூடாது,
இவை அனைத்தும் ஹராமான செயல்களாகும் என
நல்ல ஒரு கருத்தை வலியுறுத்திச் சொன்னார்.
இது போன்ற செயல்களை பெற்றோர்கள் ஆதரிக்கக்கூடாது
எனவும் வலியுறுத்திச் சொன்னார்.
வழக்கம் போல பள்ளி நிரம்பியது...

5/15/2010

வெள்ளிக்கிழமை குத்பா பேரூரை

அல்லாஹ்வின் பேரருளால் நேற்றைய ஜூம்மாவுக்கு
இலங்கையிலிருந்து வருகை தந்த மெளலவி அப்துல் நாஸர் இஸ்லாமி அவர்கள்
ஓர் அழகிய குர் ஆன் விரிவுரை நிகழ்த்தினார்கள்.

நாமும் இதுவரை எத்தனையோ ஜூம்மா மேடை பார்த்து இருக்கிறோம்.
ஆனால் ஜூம்மா மேடையில் என்ன செய்ய வேண்டுமோ அதை
சிறப்பாக செய்து முடித்தார் சகோ. நாஸர் அவர்கள்.
அதாவது இறைமறையிலிருந்து ஓர் வசனத்தை எடுத்தார்.
அதை விரிவாக்கம் செய்தார்.. அதாவது தப்ஸீர்..
சுமார் நாற்பது நிமிடங்களுக்கு மேலாக ...சுப்ஹானல்லாஹ்.


நல்ல ஒரு அழகான் சொற்பொழிவு..
இது தான் இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கு அழகு..
இதுதான் குத்பா பேரூரையை அலங்கரிக்கும் விதம்.
என்ன தான் உலக விஷயங்களை பேசி மக்களுக்கு எடுத்துச் சொன்னாலும்,
அல்லாஹ்வின் வேத வசனங்களை கியாம நாள் வரும் வரை மக்களுக்கு வந்த
ஓர் ஒப்பற்ற மறையை விளக்குவது தான் ஜூம்மா மேடைகளின் சிறப்பு.
அல்ஹம்துலில்லாஹ்.. அல்ஹம்துலில்லாஹ்
இதன் வீடியோ பதிவுகள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

அவர் எடுத்துக்கொண்ட வசனம் இது தான்.
' திருக்குர் ஆனின் 13வது அத்தியாத்தில்
17வது வசனம் ஆகும்.

5/08/2010

வெள்ளிக்கிழமை குத்பா உரை

இலங்கையிலிருந்து வருகை தந்த
மெளலவி அப்துல் ஹமீது ஷரயீ
அவர்களின் குத்பா உரை வீடியோ பதிவுகளாக







5/07/2010

இன்றைய பாங்கின் ஓசை

இன்றைய குத்பா உரை


இன்றைய குத்பா பேரூரையை
இலங்கையிலிருந்து வருகை தந்த
மெளலவி அப்துல் ஹமீது ஷரபி அவர்கள் நிகழ்த்தினார்கள்.



இன்றைய உரையில்
இன்றைய நாகரீக மோகத்தில்
மூழ்கியுள்ள நமது மக்களிடம்
அலைபேசிகள் (செல்போன்)
ஏற்படுத்தும் தீங்குகளை மிகவும் அழகாக,
இலங்கை தமிழில்
இறைவேதத்தில் இருந்தும்,
அண்ணலாரின் பொன்மொழிகளில் இருந்தும்
அழகாக எடுத்துக் காட்டி மிக நல்ல சொற்பொழிவாக அமைந்தது.
இந்த உரையின் வீடியோ பதிவு இன்ஷால்லாஹ் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.




கண் பரிசோதனை முகாம்









5/03/2010

இலவச கண் சிகிச்சை

அன்பான அனைவருக்கும்
நலம் நலமறிய பேராவல்...
நமது அறக்கட்டளை நடத்திய
முதலாவது இலவச கண் சிகிச்சை ஆலோசனை முகாம்
ஏக இறைவனின் கிருபையால் சிறப்பாக நடந்து முடிந்தது..
அல்ஹம்துலில்லாஹ்....
இது முதல் முயற்சி என்றாலும் சிறப்பாக அமைந்தது.
இந்த முகாமில் இரு நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு
பயனடைந்தார்கள்... நமது அடுத்து வரும் முகாம்கள்
இனிதே நடைபெற எல்லாம் வல்ல இறைவனின் பிரார்த்திப்போம்! ஆமின்

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...