4/22/2011

கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்

பிஸ்மில்லாஹ்.....

இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு
கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்

இன்ஷால்லாஹ் 25.04.2011 முதல் 15.05.2011 வரை
இஸ்லாமிய மார்க்க விளக்க வகுப்புகள் நடைபெறும்.

மாணவர்களுக்கு : காலை 10.00 மணிமுதல் 12.30 மணி வரை
மாணவிகளுக்கு : மாலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரை
தகுதி : பத்து வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்.
பயிற்சிக்கட்டணம் : ரூபாய் 100.00 மட்டும்.

பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு
சான்றிதழும் பரிசுப்பொருட்களும் வழங்கப்படும்.

நடைபெறும் பாடங்கள்

1) குர் ஆன் விளக்க வகுப்புகள்
2) ஹதீஸ் விளக்க வகுப்புகள்
3) இஸ்லாமிய கொள்கை விளக்கம்
4) அன்றாட துஆக்கள் மனனம்.
5) சூராக்கள் மனனம்.
6) நபி( ஸல்) அவர்கள் வாழ்க்கை வரலாறு
7) தொழுகைப்பயிற்சி


சேர்க்கை ;
23.04.2011 & 24.04.2011 இரன்டு நாட்கள் மட்டும்
அர் ரஹ்மான் மழலையர் & தொடக்கப்பள்ளியில்
காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறும்.

மேலதிக தொடர்புகளுக்கு :
98658 51693
90952 49489
90033 85399

4/18/2011

ஜும்மா பிரசங்கம்

சென்ற வெள்ளி ஜும்மா உரை
நன்றாக இருந்தது. இந்த உரையில்
நமது ஆடைகள் குறித்து உரையாற்றினார்.
இதற்கு குர் ஆனின் 7:26 வசனத்தை மேற்கோள் காட்டி
உரையை துவங்கினார்.
இந்த சொற்பொழிவில்
மறுமை நாளில் அல்லாஹ் மூன்று மனிதர்களிடம் இரக்கம் காட்டமாட்டான்
அந்த மூவரில் ஒருவர் தனது கனுக்காலுக்கு கீழ் பெருமையாக ஆடை அணிந்த அந்த
மனிதன் என்ற அந்த பெருமானாரின் பொன்மொழியை ஞாபக படுத்தினார்.
அதே போல ஒரு காலம் வரும் அந்த காலத்தில் பெண்கள் ஆடையனிந்தும் நிர்வானமாக இருப்பார்கள்
என்ற பொன்மொழியையும் நினைவூட்டினார். காரனம் இன்றைய

உலகில் நாகரீக மோகம் கொண்டு
மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம்
நமது பெண்களின் உடைகளிலும் இருக்கிறது என்றால் மிகையல்ல.
இது இல்லாமல் மானத்தை மறைக்கக்கூடிய பர்தாவும்
மெல்லிய ஆடையாக இருக்கிறது... சுப்ஹானல்லாஹ்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எனது உம்மத்தில் பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்த நிர்வாணிகளாக இருப்பார்கள். அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை (தலைமுடி வைக்கப்பட்டு) இருக்கும். அவர்களைச் சபியுங்கள்.

அதே போல இன்று பல பெண்கள் ஆண்களின் ஆடைகளை
அணிகின்றனர். இதையும் அண்ணலார்(ஸல்)கண்டித்துள்ளார்கள்.

'ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.' (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)

இன்ஷால்லாஹ் இனிவரும் காலங்கள் இது போன்ற
நல்ல அமல்களை நமது வாழ்வில் பேணி,
இரு உலகிலும் வெற்றி பெற அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தியவர்களாக!

4/10/2011

அர் ரஹ்மான் செய்திகள்

நமது பள்ளியில் ஆண்டுத்தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வுகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
12ம் தேதி முதல் இன்ஷால்லாஹ் கோடை விடுமுறை
தொடங்குகிறது. இன்ஷால்லாஹ் மீன்டும் பள்ளி திறப்பு
ஜுன் மாதம் முதல் தேதி ஆகும்.
20/04/2011 முதல் LKG -
நான்காம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெறும்.
அலுவலக நேரம் காலை 10.00 முதல் 2.00 மணி வரை.
தொடர்புகளுக்கு...90033 85399


குத்பா உரை

இந்த வார குத்பா உரையை
நமது பள்ளி இமாம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இந்த உரையில் நாவைப்பேணுவது,
அது போல புறம்பேசுவது, அவதூறு
ஆகியவற்றைப்பற்றி மிகவும் எச்சரித்து நல்ல ஒரு
ஜும்மா உரையை கொடுத்தார்.
குறிப்பாக இன்றைய நவீன உலகில்
நமது பெண்கள் வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்டுள்ள
மாற்றங்களினால் வீணான அவச்சொற்கள் , சந்தேகங்கள்
நமது ஊரில் மட்டுமல்லாது பரவலாக தமிழகம் முழுவதும்
நமது மக்கள் பேசுவது பார்க்கிறோம்.

இறைமறையும், நபிகளாரின் பொன்மொழிகளும்
இது போன்ற அவதூறுகளுக்கு
எவ்வளவு எச்சரித்துள்ளது என்பதை
இதுபோன்ற உரைகளில் கேட்க முடிந்தது.
சுப்ஹானல்லாஹ்.
அல்லாஹ் நம் எல்லோருடைய
நல்ல அமல்கள் அனைத்தையும் ஏற்று
இரு உலகிலும் வெற்றியை தருவானாக! ஆமின்.

4/04/2011

பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நபி(ஸல்) அனுமதித்தார்கள்

‘உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 5238, முஸ்லிம் 666

முஃமினான பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ள முடியாது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 578, முஸ்லிம் 1021

‘நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: புகாரீ 707

காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ என்று துவங்கும் அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்களின் நாவிலிருந்து தான் மனனம் செய்தேன். அதை அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)
நூல்: முஸ்லிம் 1442

உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ் மற்றும் இஷாத் தொழுகைகளில் பள்ளியில் ஜமாஅத்தில் கலந்து கொள்வார். அவரிடம், ‘(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்பெண்மணி, ‘அவர் என்னைத் தடுக்கக் முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் சொல் (என்னைத் தடுப்பதை விட்டும்) அவரைத் தடுத்து விடும்’ என்று கூறினார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 900

பெண்கள் பள்ளிக்கு வரலாம் என்றாலும் இரவில் பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது.

‘நறுமணம் பூசிக்கொண்ட பெண் நம்முடன் இஷாத் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 675

ஜப்பான் ஆழிப்பேரலைகள்


அவர்கள் இந்தக்குர் ஆனில்
என்ன இருக்கிறது என்று
ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
அல்லது அவர்களின் இதயங்களின் மீது
பூட்டுக்களா போடப்பட்டிருக்கு?இறைவேதத்தில் இதுபோல
ஏராளனமான அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வேதவரிகள் உள்ளது.
எல்லாம் வல்ல இறைவனுக்கு இனைவைப்பு என்ற காரியத்தை விட்டு,
அனைவரும் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவோம்.


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...