1/25/2012

வாசகர்களே!

அன்பானவர்களே

சென்ற மாதம் பரிசுப்போட்டிக்கான விடைகள்
இதுவரை எழுதவில்லை.
இன்ஷால்லாஹ் விரைவில் வெளிவரும்.
அதாவது முஹர்ரம் மாதத்திற்கான விடைகள்.
ஸபர் மாதத்திற்கான விடைகள் அனுப்பும் தேதி இன்றோடு முடிவடைகிறது
என்பதையும் ஞாபக படுத்துகிறேன்.

வாசகர்களே! மாதா மாதம் தவறாமல் சில நிமிடங்கள்
பதில் அனுப்பி பரிசுகளை வெல்லுங்கள்.

புரட்சி மின்னல்கள்

ஏகத்துவ பிரச்சாரம் துவங்கிய காலத்தில்
அங்கே இங்கே என ஒரு சிலர் இருந்தார்கள்.
அதாவது நாம் சொல்வது 1990க்கும் முன்னர்,
நம்மிடம் அந்த அளவுக்கு பொருளாதாரம் இல்லாத காலம்,
5க்கும் 10க்கும் பலரிடம் தேவைக்கு சென்ற காலம்,
ஒட்டு மொத்த தமிழகத்திலேயே அன்று சொன்னால்,
இந்த ஏகத்துவ கொள்கையிலே 500 பேர் கூட இருக்க மாட்டார்கள்.
அந்த மாதிரி காலத்தில் ஏகத்துவத்தில் வளந்தவர்களை
சொல்ல வேண்டுமானால் புத்தகம் படித்து வந்தவர்கள் எனலாம்.
அதில் அன்று 1985வாக்கில் ஏகத்துவ பணிக்காக பாடுபட்ட
ஒரு சகோதரர் நமது அருகே உள்ள ஊரான திருப்பந்துருத்தியைச் சேர்ந்த
'அப்துஸ் ஸ்லாம் மஸ்தூக்கா'

அன்றைய காலத்தில் அனைவருடன் ஒன்றி பணியாற்றியவர்.
புரட்சி மின்னல் புத்தகம் வெளிவர முக்கிய பங்காற்றியவர்.
அல்லாஹ் இரு உலகிலும் இவருக்கு நற்பாக்கியம் தர துவா செய்வோமாக!
இந்த சகோதரரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.
சில மணி நேரங்கள் உரையாடினோம்.
அன்றைய அழைப்பு பணி பற்றியும் பேசினோம்.
சந்திக்க வேண்டிய மணிதர்.
பதவியோ புகழோ எதிர்பார்க்கவில்லை.
இன்று வளைகுடா நாடுகளில் வாழ்ந்து வருகிறார்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை நமது இனையத்தில்
எழுத அனுமதி வழங்கினார்.
கண்மூடி பழக்கங்கள் மண்மூடி போகட்டும்
இன்ஷால்லாஹ் எழுதுவோம்.

site tips

அன்பானவர்களே

நமது வலைத்தளத்தில் வலது புறத்தில்
இஸ்லாமிய உலக செய்திகள் என்று
ஒரு இனைப்பு கொடுத்துள்ளோம்.
இதில் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வெளியாகும்
அனைத்து செய்திகளும் நீங்கள் வாசிக்கலாம்.
இதை பயன் படுத்தி அந்த நாடுகளின் செய்தி தாள்களை வாசிக்கலாம்.

அன்பான சகோதரர்களே!

நமது பரிசுப்போட்டியில்
விடைகள் வாசகர்கள் அனுப்பினாலும்
நாம் தேதி மாதாமாதம் தவறாமல் குறிப்பிடுகிறோம்.
கடந்த மாதமும் இந்த மாதமும் கடைசி தேதி 25 என குறிப்பிட்டு இருந்தோம்.
இதற்கு பின்னர் வரும் மின்னஞ்சல்கள் ஏற்கப்படாது..

மேலும் ஒரு சில சகோதரர்கள் தொடர்ந்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்
என நினைக்கலாம்.
விடைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படுகிறது.
ஒருவரே மாதாமாதம் வெல்லலாம். இதற்காக நேரம் ஒதுக்கி விடைகள் தேடி மின்னஞ்சல் செய்து
மார்க்க கல்வியில் ஆர்வமாக இருக்கிறார்களே .. அல்ஹம்துலில்லாஹ்.

1/14/2012

எல்லா புகழும் இறைவனுக்கே!


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால்
நமது பள்ளியின் மேல்மாடி வேலைகள்
நடைபெற்று வருகிறது. அதன் ஒரு அங்கமான
காங்கிரீட் சென்ற வியாழக்கிழமை நடைபெற்றது.
அதன் சில பதிவுகள்






அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாராக்கன் பீஹி

1/04/2012

ஸபர் மாதம் கேள்விகள்

ஸபர் மாதம் கேள்விகள்


பரிசுப்போட்டி எண் 6

1) ஸபர் மாதம் குறித்த நபிமொழி ஏதாவது ஒன்று?
2) குர் ஆனில் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடுவது?
3) காற்று வீசும் போது கூற வேண்டிய துஆ?
4) சுபுஹ்வுடைய முன் சுன்னத் பற்றிய நபிமொழி என்ன சொல்கிறது?
5) லுஸாகா என்ற நகரம் எந்த நாட்டில் உள்ளது?

விடைகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி
25.01.2012
email - 'mkranwar@gmail.com'

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...