7/28/2013

பள்ளியின் ஒழுக்கங்கள்


பாங்கு சப்தம் கேட்ட பின்னர் தக்க காரணமின்றி பள்ளியிலிருந்து வெளியேறுவது

நாங்கள் அபூஹுரைரா(ரலி)யுடன் பள்ளியில் அமர்ந்திருந்தோம் அப்போது முஅத்தின் பாங்கு கூறினார், ஒரு மனிதர் பள்ளியிலிருந்து எழுந்து நடந்து சென்றார், அபூஹுரைரா (ரலி) அவரின் பக்கமாக தனது பார்வை செலுத்தினார்கள், அவர் பள்ளியிலிருந்து வெளியேறி விட்டார், அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவர் அபுல் காசிம் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார் என்று கூறியதாக அபூ ஷஅதா(ரலி) கூறினார்கள். நூல்: முஸ்லிம், 1521

பள்ளியில் சப்தமிட்டு பேசாமலிருப்பது, அங்கு தர்க்கித்துக் கொள்ளாமலிருப்பது

நான் பள்ளியில் நின்றுகொண்டிருந்தேன் அப்போது ஒருவர் என்னை கல்லால் அடித்தார், அப்போது உமர் பின் கத்தாப் அவர்களை அங்கு கண்டேன், நீ சென்று அந்த இருவரையும் என்னிடம் கொண்டு வா என்று என்னிடம் கூறினார்கள், அவர்கள் இருவரையும் அவரிடம் கொண்டு வந்தேன், அவர், அவர்கள் அவ்விருவரிடமும் நீங்கள் இருவரும் யார்? அல்லது எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார், அவர்கள் இரு வரும் நாங்கள் தாயிபில் இருந்து வருகிறோம் என்று கூறினார், நீங்கள் இருவரும் இந்த ஊர்வாசிகளாக இருந்திருந்தால் உங்கள் இருவரையும் காயப்படுத்தியிருப்பேன், அல்லாஹ்வின் தூதருடைய பள்ளியில் உங்கள் இருவரின் சப்தத்தை உயர்த்துகிறீர்களா?! என்று யஸீத் பின் சாயிப் கூறினார். புகாரி 470 .

விற்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பள்ளியில் விற்பதையும் வாங்குவதையும், தவறிப் போனவற்றைத் தேடுவதையும், ஜூம்ஆ தொழுகைக்கு முன்னர் வட்டமாக அமர்வதையும் தடை செய்துள்ளார்கள் என்று ஷூஐப் பின் அம்ர் கூறினார், நூல்: அபூ தாவூத் 1081.

பள்ளிக்குச் செல்லும் முன்னர் தொழுகையாளிகளுக்கு தொல்லை ஏற்படும் பூண்டு, வெங்காயம் போன்ற வாசம் உள்ள பொருள்களை உண்ணாமல் இருப்பது.

இந்த பூண்டுக் கீரையை யாரேனும் தின்றால் என்றும் மற்றோரு தடவை இந்த வெங்காயம், பூண்டு, வெங்காயக் கீரை போன்றவற்றை யாரேனும் தின்றால் அவர் நமது பள்ளியை நெருங்க வேண்டாம், ஏனெனில் ஆதமுடய மக்கள் எதிலிருந்து நோவினை அடைவார்களோ அதனால் மலக்குகளும் நோவினை அடைகிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் ஜாபிர் கூறினார்கள். முஸ்லிம் 1282.

பள்ளிக்குள் செல்பவர் பள்ளியின் காணிக்கையான இரண்டு ரகஅத்துகளை தொழுது விட்டு அமர்வது சுன்னத்தாகும்

உங்களில் ஒருவர் பள்ளியினுள் நுழைந்தால் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரகஅத்துகள் தொழுது கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ கதாதா அஸ்ஸலமிய்யி கூறினார்கள். புகாரி 415.

பள்ளிக்குச் செல்பவர் ஓத வேண்டிய துஆ:

…..اَللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي بَصَرِي نُورًا وَفِي سَمْعِي نُورًا وَعَنْ يَمِينِي نُورًا وَعَنْ يَسَارِي نُورًا وَفَوْقِي نُورًا وَتَحْتِي نُورًا وَأَمَامِي نُورًا وَخَلْفِي نُورًا وَاجْعَلْ لِي نُورًا….بخاري. ……..இறைவா! எனது உள்ளத்திலும், எனது பார்வையிலும், எனது செவியிலும், எனது வலது, இடது புறத்திலும். எனது மேலும், கீழும், எனக்கு முன்னும், பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். நூல்: புகாரி6316.

பள்ளி வலது இடது காலை முற்படுத்தி நுழைவது :நீ பள்ளிக்குள் நுழைவதாக இருந்தால் வலது காலை முற்படுத்தி நுழைவதும் வெளி யேறுவதாக இருந்தால் இடது காலை முற்படுத்தி வெளியேறுவதும் சுன்னத்தைச் சார்ந்ததாகும் என அனஸ் பின் மாலிக் (ரலி) கூறுகிறார்கள், நூல்: ஹாகிம் 791

اللَّهُمَّ افْتَحْ لِى أَبْوَابَ رَحْمَتِكَ (இறைவா! உனது அருள் வாயல்களை திறந்தருள்வாயாக!) என்றும், உங்களில் ஒருவர் பள்ளியிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ (இறைவா! உனது அருளை வேண்டுகிறேன்) என்றும், கூற வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ உசைத் (ரலி) கூறினார், நூல்கள்:அபூதாவூத்465, முஸ்லிம் 1685.

பள்ளிக்குச் செல்பவர் தனது உடலையும் ஆடைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

: ஆதமுடைய மக்களே! மஸ்ஜிதிலும் தொழுகைகளில் உங்களை ஆடைகளால் அழகாகிக் கொள்ளுங்கள்…………7:31. :உங்களில் ஒருவர் ஜூம்ஆவுக்கு வருவதாக இருந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள். நூல்: புகாரி6316

7/21/2013

மழைக்காக சிறப்புத்தொழுகை


அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி,
அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்;
அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான்.
அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்;
பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" (அல் குஆன் 39:21)
"மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி,
அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்,
நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்" (அல் குஆன் 23:18)

7/17/2013

ரமலான் மாதம்


எல்லா புகழும் இறைவனுக்கே!
புனித இந்த ரமலான் மாதத்தில் நமது அருகாமையில் உள்ள நாடுகளின் சில நகரங்களில் நோன்பு திறக்கும் நேரத்தையும், அங்கே இப்போது உள்ள தட்ப வெப்ப நிலையையும் பார்ப்போம்.
kandy iftar time 6.29pm temp 30.
serangoon iftar time 7.17pm temp 32.
kuala lumpur iftar time 7.28pm temp 33.
penang iftar time 7.38pm temp 32.
bandar seru bagawan iftar time 6.38pm temp 32.
bangkok iftar time 6.50pm temp 33.
hoch minh city ifter time 6.21pm temp 31.
சிலோன் கண்டியில் உள்ள பெரிய பள்ளிவாசல்

7/12/2013

இனிய தமிழில் குர் ஆன் ஒலிக்க


சங்கைமிகு இந்த ரமலான் மாதத்தில்
இஸ்லாத்தின் ஒளியாகிய
குர் ஆனை கேட்க ஆசைப்படுகிறீர்களா?
திருவை அப்துர் ரஹ்மான் அவர்கள் உரைமொழியில்...
சுத்தமான இலக்கிய தமிழில்....
நமது வலைத்தளத்தில் வலது புறத்தில் இனைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

நமது வலைத்தளம் வாசகர்களின் விபரங்கள் முதல் ஏழு இடங்கள் மட்டும் தருகிறோம்.
1) அமீரகம்
2) இந்தியா
3) அமெரிக்கா
4) கத்தார்
5) இலங்கை
6) சவுதி அரேபியா
7) தைவான்

7/05/2013

அழகிய ஓடைகள்


dua


உளூ செய்து முடித்த பின்
அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹ் லா ஷரீக்கலஹு,

வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரசூலுஹு
முஸ்லிம், திர்மிதீ

7/03/2013

ரமழானை வரவேற்கும் ஷாபான்நபி ஸல் அவர்களால் கண்ணியப்படுத்தப்பட்ட மாதாம் ஷஃபான் மாதமாகும். இந்த மாதத்தில் உபரியான நோன்புகளை நோற்றார்கள். அதன் சிறப்பினையும் எடுத்துரைத்தார்கள். ஆயிரம் மாதங்களைவிட சிறப்புமிக்க “லைலத்துல்கத்ர்” இரவைக்கொண்ட தொடரும் ரமழான் மாதத்தை வரவேற்கும் வழிமுறைகளை வகுத்தளித்தார்கள். ஷஃபான் மாதத்தின் சிறப்புகளை கூறினார்களேயன்றி அம்மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளுக்கோ இரவுக்கோ மகிமையிருப்பதாக கூறவில்லை. அதற்கான உண்மையான ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இல்லை. ஷஃபே பராஅத் அரபி சொல்லல்ல இது உருது சொல்லாகும்.
அடுத்து ஷஃபான் பிறை 15ன் இரவைப்பற்றி “நிஸ்ஃப் ஷஃபான்” என இப்னு மாஜ்ஜாவில் வரும் நான்கு ஹதீஸ்களும் திர்மிதியில் இடம்பெற்றுள்ள ஹதீஸும் இவ்விரு நூல்களிலிருந்து அறிவிப்பாளர் வரிசையின்றி மிஷ்காத் ஹதீஸும் ஆதாரப்பூர்வமானவையல்ல. எனவே உண்மையான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் வெளிச்சத்தில் காண்போம்.
உஸாமா பிப் ஜைது (ரலி) அறிவிக்கிறார்கள். ரமழானைத்தவிர வேறு எந்த மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அதிகமாக நோன்பு வைத்தார்கள் என்பதை அறிய ஆசைப்பட்டேன். ஷஃபான் மாதத்தில் அம்மாதத்தின் சிறப்பை விளக்கும் விதமாக நோன்பு வைத்தார்கள் என்பதை அறிந்தேன். ஷஃபான் மாதத்தின் சிறப்பை குறிப்பிட்ட நபி (ஸல்) அவர்கள் இம்மாதத்தில் அனைவரின் செயல்(அமல்)கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனது செயல்கள் நான் நோன்பு வைத்த நிலையில் சமர்ப்பிக்கப்படுவதை ஆசிக்கிறேன் (எனவே நோன்பு வைக்கிறேன்) எனக்கூறினார்கள். (ஆதாரம்: அபூதாவூத் நஸயீ, அஹ்மத்)
இதனை உண்மைப்படுத்தும் விதமாக நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவி உம்மு சலமா(ரலி) தெரிவிக்கிறார்கள்.
ஷஃபான், ரமழான் என்ற இரு மாதங்களைத்தவிர வேறு இரு மாதங்களில் தொடர்ந்து நோன்பு வைத்ததை நான் கண்டதேயில்லை. (ஆதாரம்: ஆபூதாவூத், நஸயீ)
உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது நபியவர்கள்: மனிதர்கள் ரஜப் ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ அஹ்மத்)
மேற்கண்ட நபிமொழிகள் மூலம் ஷஃபான் மாதத்தில் நமது அமல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுவதாக அறிகிறோம். நபி (ஸல்) அவர்கள் தனது அமல்கள் நோன்பு வைத்த நிலையில் சமர்ப்பிக்கப்படுவதை விரும்பியுள்ளார்கள். அதற்காக நோன்பு வைத்துள்ளார்கள். மேலும் இம்மாதத்தில் ஒரு குறிப்பிட்ட பகலையோ இரவையோ சிறப்பித்து நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதற்கு நம்பகமான ஹதீஸ்கள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை (மட்டும் சிறப்பான நாளென) நோன்பு வைக்கவேண்டாம். (அப்படி வெள்ளியன்று நோன்பு வைக்க நாடினால்) அதற்கு முந்திய பிந்திய (சனிக்கிழமை) நாளிலும் நோன்பு வைக்கவும். (அபூஹுரைரா ரலி நூல்: முஸ்லிம், அஹமத்)
மேற்படி நபிமொழியை நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்வில் செயல்படுத்தியுள்ளதை கீழ்காணும் நிகழ்ச்சி உண்மைப்படுத்துகிறது.
நபி (ஸல்) மனவியரில் ஒருவரான ஜுவைரியா ரலி அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை (சிறப்பென) நோன்பு வைத்திருந்தார்கள். இதனையறிந்த நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது மனைவிக்கும் நடந்த உரையாடலைப் பாரீர்.
நபி(ஸல்): நீ நேற்று (வியாழன்) நோன்பு நோற்றாயா?
ஜுவைரியா (ரலி): இல்லை
நபி(ஸல்): நாளை (சனிக்கிழமை) நோன்பு வைக்கும் நாட்டமுண்டா?
ஜுவைரியா (ரலி): இல்லை
நபி(ஸல்): அப்படியானால் இன்றைய நோன்பை விட்டு விடுவாயாக! (அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ, முஸ்னத் அஹ்மத்)
ஒரு குறிப்பிட்ட நாளுக்கோ பகலுக்கோ இரவுக்கோ அல்லாஹ்வும் அவனது தூதரும் முக்கியத்துவம் கொடுத்திருந்தாலேயொழிய நாமாக கொடுக்க நமக்கு உரிமையில்லை.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:36)
தொடர் நோன்பு வைத்து வந்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களை, அவ்விதம் வைக்க வேண்டாம்; மாதத்தில் மூன்று நாட்கள் வை, அது முழு மாதம் வைப்பதற்குச் சமம் என அறிவுரை கூறினார்கள். (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)
மாதா மாதம் மூன்று நோன்புகள் வைப்பது நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையாகும். (அறிவிப்பு: இப்னு மஸ்வூது ரலி நூல்: அபூதவூத் நஸயீ
எந்தெந்த நாட்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தின் பிறை 13,14,15 வைப்பதே மிகைத்து காணப்படுகிறது.
இவ்விதம் மாதா மாதம் நோன்புகளை வைப்பதற்கு வழிகாட்டித்தந்த நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தின் மத்தியில் (பிறை 15ல்) நோன்பு வைக்காதீர்கள் என தடுக்கவும் செய்தார்கள். (ஆனால் வழக்கமாக மாதா மாதம் அந்நாட்களில் நோன்பு வைப்பவர்களைத் தவிர) ஆதாரம்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத், தாரமி, இப்னுமாஜ்ஜா, அஹமத்.
இந்த உண்மையான நபிமொழிக்கு மாற்றமாகவே இன்று நம்மிடையே பலர் “ஷபே பராஅத்” என்ற பெயரில் பிறை 15ல் நோன்பு வைக்கிறார்கள்.
ரமழானின் ஆரம்பத்தை அறிந்துகொள்ள ஷஃபான் முதல் பிறையிலிருந்து கணக்கிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி, அஹ்மத்.
‘ரமளானுக்காக ஷஃபான் பிறையைக் கணக்கிட்டு வாருங்கள்’ என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதி)
‘ரமளானுக்கு முதல் நாளும், அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது. அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாட்களில் நோன்பு நோற்கலாம்!’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, திர்மிதி)
ஷஃபான் மாதத்தை நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்ததுபோல் நாமும் சிறப்பித்து நபி (ஸல்) அவர்கள் அங்கீகரிக்காத காட்டித்தராத வழியிலோ பலஹீனமான இட்டுக்கட்டப்பட்ட கதைகளின் அடிப்படையிலோ மார்க்கத்தில் புதுமைகளை (பித்அத்) புகுத்தாமல் நபி வழி வாழும் உம்மத்தாக (சமுதாயமாக) அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக! ஆமீன்.

mtct


தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...