1/21/2014

நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ”பரிந்துரை” செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

மீலாதும் மவ்லூதும்

ரபியுல் அவ்வல் மாதம் ஊர் எல்லாம் ஒரே விழாக்கோலம் தான்! தெருவெங்கும் மீலாது விழா! (இறை) இல்லங்களில் மவ்லீதுகள்….. கொண்டாட்டங்களுக்கு குறையே இருக்காது. மீலாதுகளையும் மவ்லீதுகளையும் செயல்படுத்தினால் இறை திருப்தியும், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பரிந்துரையும் கிட்டும் என்பது இன்றைய பல முஸ்லிம்களின் நம்பிக்கை. இவை இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தராத புதிய கலாச்சாரம், (பித்அத்) இறைத்தூதரும், அவர் தம் தோழர்களும் நடைமுறைப் படுத்தாத இந்த மீலாது – மவ்லீது ஹிஜ்ரி 600-ல் எகிப்து அரசன் இர்பல்’ என்பவரால் சில மூட முஸ்லிம்களின் கோரிக்கை மூலம் உருவானது.
இயேசு நாதருக்கு பிறந்த நாள் கொண்டாடும் போது, நமது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏன் பிறந்த நாள் கொண்டாடக் கூடாது? என்ற எண்ணத்தில் பிறந்ததே இந்த மீலாத் விழா! மவ்லீது பாடல்கள்!!!
நாம் உமது புகழை உயர்த்தி விட்டோம்! திருக்குர்ஆன் 94:4
இப்னு மர்யம் (இயேசு)வை கிறித்தவர்கள் மிகைபடப் புகழ்ந்தது போல் நீங்கள் என்னை மிகைப்பட புகழாதீர்கள்! எனினும் (என்னை) இறைவனுடைய அடியார் என்றும் இறைவனின் தூதர் என்றும் கூறுங்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதை உமர்(ர) அவர்கள் கேட்டதாக கூறியதை நான் கேட்டேன்! அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : ரஜீன்
தோழர்கள் : “இறைத்தூதரே! தங்களுக்கு நாங்கள் எவ்வாறு சலவாத் கூறுவது?”
இறைத்தூதர்(ஸல்) : “அல்லாஹும்ம ஸல் அலா முஹம்மதிவ்வ அலா ஆ முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதிவ்வ அலா ஆ முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள்.
அறிவிப்பவர் : கஃபு இப்னு உஜ்ரா(ரலி) நூல்கள் : புகாரி, முஸ்ம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் புகழை இறைவன் எந்த அளவுக்கு உயர்த்த வேண்டுமோ, அந்த அளவு உயர்த்தி விட்டான். இதற்கும், மேலாக இறைத்தூதர்(ஸல்) அவர்களின் புகழை யாராலும் உயர்த்திட இயலாது. இறைத்தூதரின் தோழர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் புகழ்ந்திட தடை செய்தார்கள். இன்றைய முஸ்லிம்கள் இறைத்தூதரைப் புகழ்வதாகக் கருதி, மீலாத், மவ்லூத் என்று பாடி கேவலப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கி விட்டனர். அரபியில் மவ்லீது என்ற பெயரில் கவிதைகளைப் பாடி விட்டால், பரக்கத் இறையரும் வளம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்று நம்புகின்றனர். ஆண்டாண்டு காலமாக பெரும்பாலும் முஸ்லிம்கள் மீலாத் மவ்லீத், ஓதுவதால் இன்று உலகப் பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்து விட வில்லை.
இது வழிபாடு அல்ல, வழிகேடு! என்று முஸ்லிம்கள் உணர வில்லை, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத்தராத சலவாத்தோ, புகழ்கவிதைகளோ, இறைவனால் நிராகரிக்கப்பட்டு விடும். யூதர்களும், கிறித்தவர்களும் தங்கள் இறைத்தூதர்களை அளவுக்கு மீறி புகழ்ந்து அழிந்து விட்டனர். முஸ்லிம்களும் அதே குற்றத்தையே செய்து வருகின்றனர்.
(தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானது அல்ல. திருக்குர்ஆன் 36:69
கவிஞர்களை வீணர்களே (வழிகேடர்களே) பின்பற்றுவார்கள். நிச்சயமாக அவர்கள் பள்ளத்தாக்குகளில் அலைந்து திரிவதை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் செய்யாததைச் சொல்வார்கள்.
திருக்குர்ஆன் 26:224, 225, 226
பள்ளியில் பழிக்குப்பழி கொலை செய்வதையும், அதில் கவிஞர் பாடுவதையும் (இறைவனுடைய) தண்டனைகளை நிறை வேற்றுவதையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை செய்தனர்.
அறிவிப்பவர் : ஹகீமுப்னு ஹிஸாம்(ரலி) நூல் : அபூதாவூத்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளியில் விற்பதையும், வாங்குவதையும் தவறி விட்டதைத் தேடுவதையும், கவிபாடுவதையும், வெள்ளிக் கிழமை ஜும்ஆவுக்கு முன்னர் அங்கு கூட்டமாகக் கூடுவதையும் தடை செய்தனர். அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஷுஐப்(ரலி) நூல் : ஸுனன்
கவிகள் பாட இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை, இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்தம் தோழர்களும் யுத்தக்களத்தில் சிரமத்தை மறந்து உற்சாகமாக இருக்க கவிதை பாடப்பட்டது. பாரம் சுமக்கும் ஒட்டகம் சுமையை மறந்து வேகமாகப் பாலைவனத்தில் செல்லவும் கவிகள் பாடப்பட்டது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தராத செயல்கள் யாவும் பித்அத் ஆகும். பித்அத் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் யாவும் நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற நபிமொழியை சிந்தியுங்கள்.
முஹம்மது(ஸல்) ஆகிய என்னை மூஸா(அலை) அவர்களுக்கு மேல் மேன்மைப் படுத்தாதீர்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) நூல்கள் : புகாரி, முஸ்ம், அபூதாவூத், திர்மிதி

1/09/2014

நபி மொழிகள்

“இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக   இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்.” என இறைத்தூதர்   (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); ஆதாரம்: புகாரி.
‘உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர்   மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்:   முஸ்லிம்

குர்ஆனின் நற்போதனைகள்

  நாவைப் பேணுக!
உண்மை பேசுக! அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119
 நேர்மையாக பேசுக! ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அழகானதைப் பேசுக! பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83
கனிவாகப் பேசுக! உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8
நியாயமாகப் பேசுக! நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் – நியாயமே பேசுங்கள். 6:152
அன்பாகப் பேசுக! அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36
வீண் பேச்சை தவிர்த்துடுக! நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68
பொய் பேசாதீர்! உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் – நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116
புறம் பேசாதீர்! உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12
ஆதாரமின்றி பேசாதீர்! யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35
அவதூறு பேசாதீர்! எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...