
நண்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும்
நல்ல ஒரு அழகான தலைப்பை எடுத்து
நமது இமாம் அவர்கள் இதை நிகழ்த்தினார்கள்.
அதாவது அவர் சொற்பொழிவில் சொன்னதை நான் சொல்லாமல்
அவர் சொன்ன விதத்தின் தொகுப்பை சொல்கிறேன்
என்ன என்றால, நம்மில் பலருக்கு இன்று
அது தீமை, அது ஹராம், அது தப்பு என ,
ஆரம்ப கால தவ்ஹீத் சகோதரர்கள் சொல்லும் மனம் இல்லை என்றார்.
நாம் முழுபூசனிக்காயை சோற்றில் மறைக்கவில்லை.
அன்றைய கால துவக்கத்தில்
ஏகத்துவ பிரச்சாரத்தில் ஆரம்பத்தில்
தமிழகத்திலேயே மொத்தமாக பார்த்தால்
ஒரு ஆயிரம் பேர் கூட இருக்கமாட்டோம்.
ஆனால், அனைவரிடம் தூய்மையான எண்ணம் இருந்தது.
இந்த சத்திய மார்க்கத்தை தூய்மையான வடிவில்
அதன் யதார்த்த நிலையில் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த ஏகத்துவ ராஜபாட்டையில் அனைவரும் வரவேண்டும்.
இஸ்லாம் இவ்வளவு தெளிவாக இருந்தும்
இந்த மக்கள் இப்படி இருக்கிறார்களே!
ஏராளனமான நமது சகோதரர்கள் தனது பிரார்த்தனையில்
அழது.. அழுது... செய்த துவாக்கள் இறைவன் அங்கீகரிக்க..
இன்று பெருமையாக இல்லாமல் சொல்லப்போனால்,
தமிழகத்தில் பத்து லட்சம் பேருக்கு குறையாமல்
இஸ்லாத்தை புரிந்துக்கொண்டார்கள் என்பது உண்மை.
இதற்கு அடிப்படை என்ன காரனம்.
அன்று புத்தகம் படித்து தவ்ஹீதிற்கு வந்த சகோதரர்களிடம்
தூய்மையான எண்ணம் இருந்தது,
பதவி ஆசை இல்லை,
பதவி சுகம் இல்லை,
பெருமை இல்லை,
உலக ஆசாபாசம் இல்லை,
இஸ்லாமிய கல்வியை கற்றார்கள்..
பிரச்சாரம் செய்தார்கள்
அதற்காக கடுமையாக கஷ்டப்பட்டார்கள்.
அடி உதை வாங்கினார்கள்.
அவர்கள் சொல்லும் செயலும் ஒருங்கே அமைந்தது.
இன்று நமது சகோதரர்கள் இது போல
வாழ்க்கை அமைத்தால் அல்லாஹ்வின் இந்த தூயமார்க்கம்
இன்னும் லட்சக்கணக்கான மக்களிடம் செல்லும் என்பதில்
எள் அழவு கூட சந்தேகமில்லை.
சமீபத்தில் திருச்சி அருகே நடைபெற்ற
ஜமாத்தே இஸ்லாமி முதல் மாநில மாநாட்டில்
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட மாநாட்டில்
இறைவன் நமக்கு வழங்கிய அழகிய சலுகையான
இரு தொழுகைகளை இனைத்து சுருக்கி தொழுதல்
இதை அரபியில் நாம் 'ஜம்உ-கஸ்ர்' என்போம்.

இனைத்து தொழுகை அங்கே நடத்தப்படவில்லை
மாறாக லுஹர் தனியாக நடத்தப்பட்டது.
அஸர் தனியாக நடத்தப்பட்டது.
ஏன் இந்த தயக்கம்?
யாருக்கு அச்சம்?
இறைவனின் சலுகைகளை நடைமுறைபடுத்த?
இன்னும் சொல்லப்போனால்
திருச்சியில் இருந்து அந்த மாநாடு நடைபெற்ற இடம் 39.கி.மீ.
திருச்சியில் இருந்து வந்தவர்கள் கூட
சந்தேகமே இல்லாமல் கஸ்ர் செய்யலாம்.

அன்பானவர்களே
இதை தான் நமது இமாம் தொகுத்து
அழகாக விளக்கினார். அதன் நண்மை தீமைகளை விளக்கினார்.
நமக்கு அருகே நடக்கும் தீமையை கண்டிக்காமல் இருந்தால்
அதன் பாதகத்தையும் சொன்னார்.
இனியும் தாமதம் இல்லாமல்
நண்மையை ஏவுவோம்
தீமையை தடுப்போம்.
அல்லாஹ் நமக்கு எல்லா வகையிலும் உதவி செய்வானாக! ஆமின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக