

எல்லா புகழும் இறைவனுக்கே!
சனிக்கிழமை மாலை நமது பள்ளியில்
ரமலான் மாதம் நடந்த இஸ்லாமிய கேள்வி பதில்
நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
அஸர் தொழுகைக்குப்பின் நல்ல மழை என்பதால்
கூட்டம் தாமதமாகத்தான் வந்தது.
தலைமையை தலைவர் யாக்கூப் அத்தா அவர்கள் நடத்த
சகோதரர் முஸ்தபா அவர்கள் இறைமறையை ஓதி விளக்கம் அளித்தார்.
அதன் பின் சிறப்புரையை நமது பள்ளி இமாம் ஆஷிக் பிர்தெளசி அவர்கள் ஆற்றினார்கள்


விழாவில் ஆண்களுக்கான முதல் மூன்று பரிசுகள்
பெண்களுக்கான முதல் மூன்று பரிசுகள்
என கொடுத்து அதற்கு பின்
ஆறுதல் பரிசுகள், மற்றும் தினமும் கலந்துக்கொண்டவர்கள்
என பரிசுகள் வழங்கப்பட்டது.
வந்த அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது.
இறுதியில் சகோ.காஸிம் நன்றியுரை ஆற்றினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக