4/18/2011

ஜும்மா பிரசங்கம்

சென்ற வெள்ளி ஜும்மா உரை
நன்றாக இருந்தது. இந்த உரையில்
நமது ஆடைகள் குறித்து உரையாற்றினார்.
இதற்கு குர் ஆனின் 7:26 வசனத்தை மேற்கோள் காட்டி
உரையை துவங்கினார்.
இந்த சொற்பொழிவில்
மறுமை நாளில் அல்லாஹ் மூன்று மனிதர்களிடம் இரக்கம் காட்டமாட்டான்
அந்த மூவரில் ஒருவர் தனது கனுக்காலுக்கு கீழ் பெருமையாக ஆடை அணிந்த அந்த
மனிதன் என்ற அந்த பெருமானாரின் பொன்மொழியை ஞாபக படுத்தினார்.
அதே போல ஒரு காலம் வரும் அந்த காலத்தில் பெண்கள் ஆடையனிந்தும் நிர்வானமாக இருப்பார்கள்
என்ற பொன்மொழியையும் நினைவூட்டினார். காரனம் இன்றைய

உலகில் நாகரீக மோகம் கொண்டு
மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம்
நமது பெண்களின் உடைகளிலும் இருக்கிறது என்றால் மிகையல்ல.
இது இல்லாமல் மானத்தை மறைக்கக்கூடிய பர்தாவும்
மெல்லிய ஆடையாக இருக்கிறது... சுப்ஹானல்லாஹ்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எனது உம்மத்தில் பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்த நிர்வாணிகளாக இருப்பார்கள். அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை (தலைமுடி வைக்கப்பட்டு) இருக்கும். அவர்களைச் சபியுங்கள்.

அதே போல இன்று பல பெண்கள் ஆண்களின் ஆடைகளை
அணிகின்றனர். இதையும் அண்ணலார்(ஸல்)கண்டித்துள்ளார்கள்.

'ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.' (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)

இன்ஷால்லாஹ் இனிவரும் காலங்கள் இது போன்ற
நல்ல அமல்களை நமது வாழ்வில் பேணி,
இரு உலகிலும் வெற்றி பெற அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தியவர்களாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...