பரிந்துரை அல்லாஹ்வுக்கே சொந்தம் :
1. அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா?
(நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்தாலுமா? பரிந்துரை எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள். (39:43,44)
2. அன்றியும். அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர். (43:86)
3. அவர்களுக்கு, ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. (6:70)
4. (நபியே!) அண்மையில் வரும் (கியாமத்) நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக; இதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக் குழிக்கு வரும் (அவ்) வேளையில் அநியாயக் காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ; அல்லது ஏற்றுக் கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான். (40:18)
5. இன்னும் ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்குச் சிறிதும் பயன்படமுடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக; (அந்நாளில்) எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அதற்காக எந்த பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (2:48,123)
6. அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப் பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா? (32:4)
7. (மறுமையில்) அவனைத் தவிர அவர்களுக்கு பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. (6:51)
8. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே (அல்லாஹ்வுக்கே) உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (2:255)
9. அவன் எவருக்கு அனுமதிக் கொடுக்கிறானோ அவருக்குத் தவிர அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது. (34:23)
10. அவனது அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சி பொருந்திய) அல்லாஹ்வே உங்களைப் படைத்து பரிபக்குவப் படுத்துபவன். (10:3)
பரிந்துரைக்க அனுமதிப் பெறுபவர்கள்.
11. இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த்தகைய)வருக்கின்றி – அவர் (நபி)கள் பரிந்து பேச மாட்டார்கள். இன்னும் அவர்கள் அவன் பால் உள்ளச்சத்தால் நடுங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள். (21:28)
12. அர்-ரஹ்மானிடம் உடன்படிக்கை செய்துக் கொண்டோரைத் தவிர – எவரும் பரிந்துரை செய்ய அதிகாரம் பெற மாட்டார்கள். (19 :87)
13. அந்நாளில் அர்-ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவரது பரிந்துரை (ஷஃபாஅத்து)யும் பயனளிக்காது. (20:109)
14. அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதிக் கொடுக்கிறானோ – அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்த பயனுமளிக்காது. (53:26)
15. …………எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்களாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (இறை அனுமதியுடன் பரிந்து பேசுவர்) (43 : 86)
பாவிகளின் கூற்றும் பிதற்றலும்
16. தங்களுக்கு (யாதொரு) நன்மையோ, தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவர்களை (இணை வைப்போர்) வணங்குகிறார்கள். இன்னும் அவர்கள்;
இவர்கள் எங்களுக்கு அல்லாஹ்விடம் சிபாரிசு செய்பவர்கள் என்றும் கூறுகிறார்கள். (10:18)
17. அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). (39:3)
18. மேலும் (இறுதி) நேரம் நிலைபெறும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழப்பார்கள். அப்போது அவர் இணை வைத்தவர்களில் எவரும் அவர்களுக்காகப் பரிந்து பேசுவதாக இராது; (இணை வைத்த) அவர்களும், தாங்கள் இணை வைத்தவர்களை நிராகரிப்போராகி விடுவார்கள். (30:12,13)
19. அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்; உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமானமுள்ளவராக ஆக்கி வைத்தோம்; (அப்போது) இந்த குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்; ஆகவே எங்களுக்காகப் பரிந்து பேசவோர் (இன்று) எவருமில்லை; அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை. நாங்கள் (உலகத்துக்கு) திரும்பிச் செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் முஃமின் (இறை விசுவாசி)களாகி விடுவோமே. (எனப் பரிதவித்து புலம்புவார்கள்) (26:97-102)
20. குற்றவாளிகளைக் குறித்து-
உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது? (என்று கேட்கப்படும்) அவர்கள் (பதில்) கூறுவார்கள் :
நாங்கள் தொழுகையாளிகளில் நின்றும் இருக்கவில்லை; மேலும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை; (வீணானவற்றில்) மூழ்கிக் கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்; இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்; உறுதியான (மரணம்) எங்களிடம் வரும் வரையில் (இவ்வாறாக இருந்தோம் எனக் கூறுவர்).
ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது. (74:41-48)
21. (மறுமையில் அல்லாஹ் பாவிகளை நோக்கி)
நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுப்போன்று நீங்கள் (ஏதுமின்றி) தனியே எம்மிடம் வந்து விட்டீர்கள்; இன்னும், நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களது கூட்டாளிகள், (என்றும்) உங்களுக்கு பரிந்து பேசுபவர் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்தத் தொடர்பும் அறுந்து விட்டது; உங்கள் நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன. (என்று கூறுவான்) (6:94)
22. நம்பிக்கைக் கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த (இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர்… நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்யுங்கள். (2:254)
23. அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்-ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால் இவர்கள் என்னை (அக்கெடுதியிலிருந்து) விடுவிக்கவும் முடியா! (36:23)
24. எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு பரிந்துரை செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கும் உண்டு; (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு பரிந்துரை செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகம் உண்டு. (4:85)
9/28/2011
அல் அஸ்ரு-காலம்
﴿١﴾إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ ﴿٢﴾إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ﴿٣﴾
1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).
மனிதன் வயதையெல்லாம் அழிந்துபோகும் பொருளைத் தேடுவதிலும், தன்னை விட்டுப்பிரியும் மனைவி, மக்கள், சுற்றத்தார், சிநேகிதரோடு உல்லாசமாக இருந்து கொண்டு சந்தோச வாழ்க்கை நடத்துவதிலுமே செலவு செய்கிறான். விலை மதிக்க முடியாத ஒவ்வொரு மூச்சையும் இந்த முறையில்தான் வீணாக்குகின்றானே தவிர தான் பிறந்ததின் உண்மை நோக்கத்தைப் பற்றிக் சிறிதுகூட சிந்திப்பது கிடையாது. அவனது நோக்கம் தவறானது என்பதைக் காட்டுவதற்காகவே தான் இந்த சிறிய அத்தியாயம் இறக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில் அவனுடைய தவறான நோக்கமானது முடிவில் பெரும் நஸ்டத்தைத்தான் உண்டாக்கும் என இந்த சிறிய அத்தியாயத்தில் இறைவன் தெளிவுபட கூறுகிறான்.
இறக்கப்பட்ட வரலாறு
கல்தாபின் உஸைத் என்ற நபர் அபூபக்கர் ஸித்தீக் (ரலி)அவர்களின் பழைய நண்பராக இருந்தார். இஸ்லாம் தோன்றிய பின்பு அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள். கல்தா என்பவர் நிராகரிப்பவராகவே இருந்தார்.
ஒருநாள் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களை கண்ட கல்தாபின் உஸைத் ஸித்தீக்கை நோக்கி, அபூபக்கரே! உமது அறிவின் திறமையாலும் சுறுசுறுப்பாலும் வர்த்தகத்தில் பெருத்த லாபத்தைப் பெற்று வந்தீரே! இப்பொழுது உமக்கு என்ன நேர்ந்துவிட்டது? நஷ்டத்தில் வீழ்ந்து விட்டீர்: மேலும் உமது மூதாதையரின் மார்க்கத்தையும் புறக்கணித்து விட்டீர்; லாத், உஜ்ஜா வை வணங்குவதையும் விட்டொழித்து விட்டீர். எனவே, அவற்றின் அன்பையும் இழந்து விட்டீர் எனக் கூறினார்.
கல்தாவின் கடுஞ்சொற்களைச் கேட்ட அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் சத்தியத்தை ஏற்று நற்கிரியைகள் புரிந்து வரும் ஒருவன் எப்பொழுதும் நஷ்டத்தில் விழமாட்டான் என பதிலளித்தார்கள். இதை உறுதிப்படுத்தவே இவ்வத்தியாயத்தை அல்லாஹ் அருளினான்.
அஸ்ரு என்னும் பதத்திற்கு காலம் என்பது பொருள். இவ்விடத்தில் ஒரு மனிதன் இருக்கும் காலம் அதாவது வாழ்நாளைக் குறிக்கிறது. மனிதனுடைய வாழ்நாள் அதிலுள்ள ஒவ்வொரு மூச்சும் விலை மதிக்க முடியாதது . சென்று போன காலத்தை என்ன ஈடு கொடுத்தாலும் திரும்பப் பெறமுடியாது.வாழ்நாள் மிக அருமையானது என்பதை காட்டவே அல்லாஹ் காலத்தின் மீது சத்தியம் செய்து கூறியிருக்கிறான். ஒரு மனிதன் என்ன நோக்கத்திற்காக படைக்கப்பட்டிருக்கின்றானோ அந்த நோக்கத்தை நிறைவேற்றினால் தான் ஈடேற்றம் உண்டு. அவ்வாறு இல்லாதவரை அவன் நஷ்டமடைந்தவன் தான். இந்த நஷ்டத்தை விட்டுத் தப்பவேண்டுமானால், ஈமான் (நம்பிக்கை) கொண்டு நற்கருமங்களை செய்து பிறரும் நற்கருமங்களைச் செய்யும்படி தூண்டவேண்டும்.
ஈமான்: அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய உண்மையான இலட்சணங்களைப் பற்றியும் மறுமையைப் பற்றியும் அவன் அனுப்பிய நபிமார்களைப் பற்றியும் பூரணமாக நம்பிக்கை கொள்வதே ஈமானாகும். நற்கருமங்கள்: என்ற பதம் விரிவான பொருள் தரக்கூடியது. அல்லாஹ்வை மனதால் தியானிப்பது, நாவல் துதிப்பது, சரீரத்தால் வணங்குவது, பொருளினால் அவன் கட்டளைப்படி தருமம் செய்வது, பிறருக்கு உபகாரம் செய்வது, படைப்புகளின்மீது இரக்கம் காட்டுவது பெற்றோருக்கு பணிவிடை செய்வது, நீதியும் நேர்மையும் நிலைக்க பாடுபடுவது, ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும் உழைப்பது ஆகிய இவையெல்லாம் நற்கருமங்களில் சேர்ந்தவையாகும்.
தான் எதை நன்மையென்றும் உண்மையென்றும் உணர்ந்திருக்கின்றானோ அதை தன்னோடு மட்டும் வைத்துக் கொள்ளாமல் பிறருக்கும் போதித்து அந்த உண்மையின் பக்கம் கொண்டு வர பாடு படவேண்டும். அதற்கு எதிர்ப்பிருந்த போதிலும் பொருமையுடன் சகித்துக் கொண்டு லட்சியத்தை கைவிடாமல் அது மக்களின் மத்தியில் பரவ முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் அந்த உண்மையானது பிறருக்கு கசப்பாக தோன்றலாம். அதனால் மனம் குன்றிவிடக் கூடாது. “உண்மை கசப்பாயினும் அதைச் சொல்லிக் கொண்டே யிரு” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியில் உள்ளது. நபி (ஸல்) அவர்களின் வாக்குப்படி ஒருவன் நடந்து கொண்டால் நாளடைவில் அந்தச் சத்திய கொள்கையானது மக்களின் மத்தியில் வேறூன்றித் தழைக்க ஆரம்பித்துவிடும்.
நபி (ஸல்)அவர்கள் “ஒருவன் மற்றொருவனை நற்கருமங்களைச் செய்யும்படி தூண்டினால் நற்கருமங்கள் செய்தவனுக்கு எவ்வளவு நற்கூலி கிடைக்கிமோ அவ்வளவு நற்கூலி தூண்டியவனுக்கும் கிடைக்கும். ஒருவனைக் மற்றொருவன் கெட்ட காரியம் செய்யும்படி தூண்டினால் கெட்ட கரியம் செய்தவனுக்கு எவ்வளவு தண்டனை உண்டோ அவ்வளவு தூண்டியவனுக்கும் உண்டு. அதில் கொஞ்சமும் குறையாது. (முஸ்லிம்)
சத்தியத்தை போதித்தல்: ஹக் என்ற பதத்திற்கு உண்மை, உரிமை என்பது பொருளாகும். இவ்விடத்தில் உண்மையான மார்க்கத்தையும் உண்மை பேசுவதையும் பிறருடைய உரிமயைப் பாதுகாப்பதையும் குறிக்கும். ஒருவருக்கொருவர் பொருமையைப் போத்தித்தல்: ஸப்ரு என்ற பதத்திற்கு பொருமை என்பது பொருள். ஒருவருக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள், பிறரால் உண்டாகும் வசைகள் துன்பங்கள் முதலியவற்றைப் பொருத்துக் கொள்வதே பொறுமையாகும். முதலில் மனிதன் தன்னைச் சீர்திருத்திக்கொண்டு மற்றவர்களைச் சீர்திருத்த முயற்சிக்க வேண்டும். ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்து பிறரையும் நன்மை செய்யும்படியும் கெட்ட காரியங்களை விட்டு விலகும்படியும் தூண்டவேண்டுமென்று இதில் கூறப்படுகிறது.

நினைவுபடுத்துகிறோம்.
அன்பான வாசகர்களே
ஷவ்வால் மாத பரிசுப் போட்டிக்கான
பதில்கள் அனுப்பாதவர்கள் சீக்கிரமாக அனுப்புமாறு
கேட்டுக்கொள்கிறோம். அதற்கான முடிவு தேதிகள்
நாளையுடன் முடிவடைகிறது.
ஷவ்வால் மாத பரிசுப் போட்டிக்கான
பதில்கள் அனுப்பாதவர்கள் சீக்கிரமாக அனுப்புமாறு
கேட்டுக்கொள்கிறோம். அதற்கான முடிவு தேதிகள்
நாளையுடன் முடிவடைகிறது.
9/17/2011
அழகிய கடன் திட்டம்
அன்பானவர்களே!
அழகிய கடன் திட்டம் ஒன்றை துவங்குவதற்கான
ஒரு திட்டம் ஒன்றை உங்களிடம் வைக்கிறோம்.
நமது இளைஞர்கள் சிலர் இளனிலை(UG) முடித்துவிட்டு
ஏதாவது கல்வி பயிலும் போது அவர்களுக்கு பண உதவிகள் தேவைப்படுகிறது.
(For Example IATA, CCNA, software or hardware, technical courses etc...)
அது போன்ற நேரங்களில் அழகிய கடனாக கேட்டு
நம்மை வந்து அனுகிறார்கள்.
அது போன்ற கல்விக்காக அழகிய கடன் வசதி நம்மிடம் இல்லை.
இது போன்ற கல்வி பயில்பவர்களுக்கு குறிப்பிட்ட காலத்தவனையில்
அழகிய கடன் கொடுத்து உதவலாம்.
இத் திட்டம் ( ஸதக்கத்துல் ஜாரியா )துவங்க விருப்பம் உள்ள சகோதரர்கள்,
அழகிய கடனாக ஒரு தொகை கொடுக்க விரும்பும் சகோதரர்கள்,
நம்மை தொடர்பு கொள்ளுமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

இலங்கை வாசகர்கள்
அன்பான சிலோனில் இருந்து வாசிக்கும் வாசகர்களே!
நமது வலைத்தளம் வழியே
மாதந்தோறும் வரும்
இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியில்
நீங்களும் பங்கு பெறலாம்.
பதில்களை மின்னஞ்சலில் அனுப்பவும்.
மின்னஞ்சல் முகவரி நாம் கொடுத்து இருக்கிறோம்.
பதில்கள் எழுதும் போது மறவாமல்
உங்கள் வீட்டு முகவரி ஆங்கிலத்தில் எழுதவும்.
அதனுடன் தொலைபேசி அல்லது அலைபேசி நம்பரையும் சேர்த்து எழுதவும்.
பரிசினை வென்றால் துரித தபால் சேவை மூலம்
உங்கள் இல்லங்களில் பரிசுகள் சேர்க்கப்படும்.

இல்லங்களை தேடி
9/12/2011
பரிசுப்போட்டி
பரிசுப்போட்டியில்
நமது வலைத்தளம் படிக்கும்
அனைத்து வாசகர்களும் பங்கேற்கலாம்.
பல வாசகர்கள் சரியான பதிலை எழுதினால்
குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படும்.
சரியான பதிலை எழுதும் மூவருக்கு மட்டும் பரிசுகள் அனுப்பப்படும்.
வெளியூர் வாசகர்களாக இருந்தால் துரித தபால் சேவை மூலம்
பரிசுப்பொதிகள் அனுப்பி வைக்கப்படும்.

9/07/2011
ஷவ்வால் மாத பரிசுப் போட்டி
1>திருக்குர் ஆனில் இடம் பெற்ற கிழமைகள் என்ன? என்ன?
2> தயம்மும் செய்து கொள்ள அனுமதி வழங்குகிற வசனம் எது?
3> ஷவ்வால் மாத நோன்பு சம்பந்தமான நபிமொழி என்ன?
4> நாயகம் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் எத்தனை பேர்?
5>ஸிஹாஹ் ஸித்தா என்றால் என்ன?
பதில்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 29.09.2011
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி 'mkranwar@gmail.com'
இந்த மாதம் முதல் பரிசுப்போட்டியில் நமது வாசகர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம். தவறாமல் வீட்டு முகவரியும் சேர்த்து அனுப்பவும்.

பரிசுப் போட்டி முடிவுகள்
ரமலான் மாத பரிசுப் போட்டி
1) முதன் முதலில் இறங்கிய வஹி என்ன?
2) நோன்பிலிருந்து சலுகை பெற்றவர்கள் யார்? யார்?
3) மக்கத்து காபிர்கள் வணங்கிய நட்சத்திரத்தின் பெயர் என்ன?
4) நாயகம் (ஸல்) அவர்களின் செவிலித்தாய் பெயர் என்ன?
5) நாயகம்(ஸல்) அவர்களுக்கு வந்த தூதுச் செய்தியை இது இறைச்செய்திதான் என விளக்கிச்சொன்னவர் யார்?
1) 96வது அத்தியாம்
யாவற்றையும் படைத்த உமது
இறைவனின் திரு நாமத்தை கொண்டு ஓதுவீராக.
2) பிராயானிகள், நோயாளிகள், கர்ப்பினிகள்
பாலூட்டும் தாய்மார்கள்.
3)ஷி;.ரா
4) ஹலீமா
5) வரகா பின் நெளபல்
சரியான விடையை எழுதியவர்கள்
சிராஜ்தீன் துபாய்
முகமது பாதில் சென்னை
நான்கு கேள்விகளுக்கு சரியான பதில் எழுதியவர்கள்
அமீனுதீன் துபாய்
அயூப்கான் துபாய்
இவர்களுக்கான பரிசுப்பொதிகள்
காலக்கிரமத்தில் அவர்களது இல்லங்களில் சேர்க்கப்படும்.

9/02/2011
நோன்பு பெருநாள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...