11/08/2011

ஹஜ்ஜூப் பெரு நாள்

ஹஜ்ஜூப் பெரு நாள் வாழ்த்துக்கள்


அன்பான சகோதர,சகோதரிகளே!

நமது முக்கிய பெருநாளில் ஒன்றான
ஹஜ்ஜூப் பெரு நாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை 7.15மணிக்கு தொழுகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு
தொழுகை பத்து நிமிடம் தாமதமாக தொழுகை வைக்கப்பட்டது.
தொழுகைக்குப்பின் சிறப்பு சொற்பொழிவான குத்பா உரை
சுமார் பத்து நிமிடம் நடந்தது. தொழுகையையும், குத்பா உரையையும்
நமது முனிர் ஸலாஹி அவர்கள் நடத்தினார்கள்.






குத்பா உரையில்
நல்ல பல நாயகம் (ஸல்) ஆற்றிய
உரையில் இருந்து எடுத்து சொற்பொழிவாற்றினார்.
நமது பள்ளி வளாகம் திடல் முழுவதும்
நிறைந்து இருந்தது. வானம் மழை இல்லாமல் இருந்ததால்
தொழுகை சிறப்பாக இருந்தது.
பெண்களும் ஆர்வமாக குழந்தைகளுடன்
தொழுகையில் பங்கேற்றனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே!




தஷ்ரீக்குடைய நாட்கள்

துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13 ஆகிய நாட்களில்
நோன்பு நோற்கக்கூடாது. இந் நாட்களும் பெருனாளைப்போன்று
மகிழ்வோடு இருக்க வேண்டிய நாட்களாகும்.
'தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11,12,13) சாப்பிடுவதற்கும்
குடிப்பதற்கும், அல்லாஹ்வை நினைவு கூர்வதற்கும் உரிய நாட்களாகும்'
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : நுபைஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (ஹதீஸ் எண்: 2099)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...