8/08/2011

தைவானில் இருந்து...


அன்பான வாசகர்களே

நமது வலைத்தளம் வந்து பார்க்க
பல நகரங்களில் இருந்தும் வாசகர்கள் வருகிறார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
முதல் சில இடங்களில் அமீரகம், இந்தியா, கத்தார்,
அமெரிக்கா, சவுதி, இலங்கை,

என்ற வரிசையில் நம்மை ஆச்சர்ய பட வைக்கும்
ஒரு நாட்டில் இருந்து
நமது ஒரு சகோதரர் வந்து இஸ்லாமிய செய்திகள் படிக்கிறார் என்றால்
எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்..
ஆம் தைவான் நாட்டில் இருந்து
நமது வலைத்தளத்திற்கு ஒரு வாசகர் (சகோதரர்) வந்து செல்கிறார்.
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் பெற துவா செய்கிறோம்.

Ramadan Mubarak


அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்

அன்பானவர்களே!


ரமலான் நோன்பு பார்க்கும்போது
அனைவரும் ஊரில் பேசியது அரபு பாலைவனங்களில் நிலவும்
இப்போதைய பருவ நிலைதான்.. வெயில் வெயில்..
ஊரில் பருவ நிலை பரவாயில்லை.
மழை இல்லை என்றாலும்.. வெயிலின் தாக்கம் இல்லை.
இது இப்படி இருக்க..
உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களிம் ரமலான் எப்படி இருக்கும்
என பார்த்தோமானால்.. ஒவ்வொரு நகரங்களிலும்
பஜ்ர் நேரமும், அதே போல நோன்பு திறக்கும் நேரங்களும்
நமக்கே மிக ஆச்சர்யமாக இருக்கிறது.
இன்னும் பல நகரங்களில் பகல் பொழுது மிக நீண்டதாக இருக்கிறது.
இதுக்கு நம்ம இருக்கும் இடம் தேவலாம் என எண்ணத்தோன்றும்..இதோ...



chennai 6.34pm
bengalore 6.45
trivandrum 6.42
hyderabad 6.46
Auckland 5.40
sydney 5.21
taipei 6.35
kualalumpur 7;27
penang 7;35
singapore 7;16
colombo 6;28
kandy 6;26
paris 9;19
london 8;37
san deigo 7;41
new york 8;04
chicago 8;01
seattle 8;34
tokyo 6.40
saint petersburg 9;23



இதில் என்ன வேடிக்கை என்றால்
பல நகரங்களில் இவர்களுக்கு உறங்க நேரம் இருக்குமா என்பதே?
காரனம் அதிகாலை சகர் நேரம் சில நகரஙக்ளில் 2;45க்கு வருகிறது.
இது உலகில் பல நகரங்களில் கோடை காலம் என்பதால்
இந்த நேர மாற்றம்..
எல்லாம் வல்ல இறைவன் சிரமம் இல்லாமல்
இந்த ரமலானை எளிதாக்கி தருவானாக! ஆமின்.

8/05/2011

ஜும்மா சொற்பொழிவு

இன்றைய ஜும்மா குத்பா உரையை
இங்கே வீடியோ பதிவாக தந்து இருக்கிறோம்.
இந்த புனித ரமலானில் இது போன்ற சொற்பொழிவை
கேட்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மஸ்ஜித் இக்லாஸ்



பேரங்களும் நட்புறவுகளும்
பரிந்துரை செய்யாத அந்த இறுதி தீர்ப்பு நாள்
வருவதற்கு முன் உங்களுக்கு அளித்தவைகளிலிருந்து
நல் வழிகளில் தாராளமாக செலவு செய்யுங்கள்.



அன்பான சகோதரர்களே!

நமதூரில் மஸ்ஜித் கட்டப்பட்டு சில வருடங்கள் ஆகியும்
இன்னும் நிறைவு பெறாத வகையில் உள்ளது.
மேலே உள்ள பள்ளியை நிறைவு செய்ய சில சகோதரர்களின் உதவியால்
சில வேலைகள் மட்டும் துவங்கி மீன்டும் நிறைவு பெறாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் இறைவனின் இல்லம்
தொழுகையாளிகளால் அலங்கரிங்கப்பட்டு
பள்ளியில் இடம் இல்லாமல் அர் ரஹ்மான் வகுப்பறைகளிலும்
பெண்கள் தொழுகிறார்கள். ஆண்களும் பெண்களும் தொழ போதிய இடவசதி இல்லை.
எனவே, அதிகமான மக்கள் தொழ பள்ளியின் மேல் தளம் அவசியமே...

புனித மாதமான இந்த ரமலானில் உங்களின் பங்களிப்புகளை அதிகமாக செய்து
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.



8/03/2011

இரவுத்தொழுகை





ரமலானின் புகைப்படங்கள்









Ramadan Kareem

அன்பான சகோதரர்களே!
அனைவருக்கும் எமது ரமலான் வாழ்த்துக்கள்
அரபு நாடுகளில் ரமலான் ஆகஸ்ட் 1 முதல் துவங்கினாலும்,
தமிழகத்தில் பிறை பார்த்த பின் நமதூரில்
நேற்று முதல் ரமலான் துவங்கியது. அல்ஹம்துலில்லாஹ்.
நேற்று முதல் நோன்பு இப்தார் சரியாக மாலை 6.36 மணிக்கு இருந்தது.
இன்றும் நோன்பு திறக்கும் நேரம் அதே தான்..
நேற்று சுமார் 160 பேருக்கு குறையாமல் நோன்பு திறக்க வந்து இருந்தனர்.
பள்ளி வளாகத்தில் அமர்ந்து நோன்பு திறந்தனர்.
பல இளைஞர்கள் அமைதியாக பிரார்த்தனைகளில் இருந்தனர்.
இரவுத்தொழுகை சரியாக 9.00 மணிக்கு துவங்குகிறது.
இரவுத்தொழுகைக்கு ஆண்களும் பெண்களும் அதிகமாக வருகின்றனர்.
பள்ளியில் தொழ இடவசதி போதவில்லை.
எல்லா புகழும் இறைவனுக்கே!

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...