3/12/2010

அன்பான வாசகர்களே!

அன்பான வாசகர்களே!
உங்கள் அனைவருடன் உரையாடுவதில் மிக்க சந்தோசம்.
வலைத்தளம் நாம் எந்த எண்ணத்தில் ஏற்படுத்தினோமோ?
அந்த செயல்பாடுகளின் அடிப்படையில் செல்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்.
நமது பள்ளியின் இலக்கிய மன்ற விழாவை
அதிகமானோர் வந்து பார்த்து இருக்கிறார்கள்.
மிக்க சந்தோசம்.

இன்று காலை கூட ஒரு வாசகர் அலைபேசியில் அழைத்து,
இலக்கிய மன்ற விழாவின் வீடியோ பதிவுகள்
இன்னும் நன்றாக வேனும்
என எண்ணத்தைச் சொன்னார்.
அவருக்கு எமது இனையத்தின் சார்பாக
மனமார்ந்த நன்றிகள். நாம் அதில் பதிவு செய்தது,
அலைபேசியில் பதிவான வீடியோ பதிவுகள் தான்.
இன்ஷால்லாஹ் உங்கள் எண்ணத்தை நிறைவேற்ற
பள்ளியின் ஆண்டு விழாவை மிகத் தெளிவாக நீங்கள் பார்க்க
வீடியோ பதிவு தருகிறோம். இன்ஷால்லாஹ்.

நமது இனையத்தை பல நாடுகளில் இருந்தும் பார்க்கிறார்கள்.
தாய் நாடு, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய ராஜ்ஜியங்கள்,
அமெரிக்கா, கென்யா, சிங்கை, மலேசியா, ஜப்பான் என...

இப்போது ஒரு புதிய பார்வையாளர் 'உக்ரைன்' நாட்டில் இருந்து
வந்து இருக்கிறார். மிக்க சந்தோசம்.
இன்னும் பலரும் இந்த தூய மார்க்கத்தை படித்து
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் பெற வேண்டும் என்பதே நமது நோக்கம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும்,
நீண்ட ஆயுளையும்,
ஆரோக்யமான உடல் நலத்தையும்,
அழகான இஸ்லாமிய நடைமுறைகளையும் கொடுத்து,
இன்னும் நல்ல கல்வி ஞானத்தை கொடுக்க நானும் பிரார்த்தனை செய்கிறேன்.
நீங்களும் நமது கொள்கை சகோதரர்கள்
அனைவருக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...