எல்லா புகழும் இறைவனுக்கே!
ஏக இறையின் சாந்தியும் சமாதானமும்
நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக!
நமது அர் ரஹ்மான் பள்ளியின் 2ம் வருடம் ஆண்டு விழா
மிக சிறப்பாக நடந்து முடிந்தது.
மாலை சரியாக 5.30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சிகள்
மஹ்ரிப் தொழுகைக்காக சிறிது நேரம் இடைவெளி விட்டு,
தொழுகைக்குப்பின் துவங்கியது.
நாம் அழைத்த சிறப்பு அழைப்பாளர்கள்
அனைவரும் வந்து இருந்தனர்.
வாழ்த்துரைகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களின் கல்வி குறித்து
சிந்தனைகள் இங்கு முத்தாய்ப்பாக அனைவருக்கும் இருந்தது.
அதன் பின் மாணவ- மாணவிகளின்
நிகழ்ச்சிகளின் நடந்தது. வழக்கமான ஆடல் பாடல்கள் இல்லாமல்,
சமூக சிந்தனையுள்ள நல்ல நாடகங்கள், நிகழ்ச்சிகள் நடத்திகாட்டியது
பார்வையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பின்னர் இலக்கிய மன்றம்,
விளையாட்டுப்போட்டிகளில்
வெற்றி பெற்ற பங்கு பெற்ற,
அதே போல்,
அந்தந்த வகுப்புகளில் முதல் மதிப்பெண்கள்,
முழு வருகை புரிந்தோருக்கும் சிறப்பு பரிசுகள்
வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக