அன்பானவர்களே
நமது அர் ரஹ்மான் பள்ளியின்
இரண்டாம் ஆண்டு இலக்கியமன்ற போட்டிகள்
இறையின் உதவியால் இனிதே நிறைவேறியது.
போட்டிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலை பத்து மணிக்கு துவங்கிய போட்டிகள்
மாலை 3.30 மணி வரை நடந்தது.
போட்டிகளுக்கு நடுவர்களாக
ஆலிம். J.S.ஜமால் அவர்கள் கடியாச்சேரியில் இருந்தும்,
கோட்டூர் மற்றும் மன்னையில் இருந்து ஆசிரியைகள்
G.உஷா B.Sc,B.Ed,
S.வினோதா B.A., D.T.Ed
வந்து இருந்து
சிறப்பாக நடத்தி தந்தார்கள்.
போட்டிகளை காண ஏராளனமான
பெற்றோர்களும் வந்து இருந்தனர்.
போட்டிகள் நடந்துக்கொண்டு இருந்த போது
அருகே பள்ளியில் இருந்து
லுஹர் தொழுகைக்காக பாங்கு வந்த போது
அந்த பாங்கிற்கு பதிலும்
அதற்கு பின் பாங்கு துஆ வும்
மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள்
சொன்ன போது பார்வையாளர்கள் ஆச்சர்யத்தில்?!
எல்லா புகழும் இறைவனுக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக