10/31/2011

மேலும் சில பதிவுகள்







பரிசளிப்பு நிகழ்ச்சி




எல்லா புகழும் இறைவனுக்கே!

சனிக்கிழமை மாலை நமது பள்ளியில்
ரமலான் மாதம் நடந்த இஸ்லாமிய கேள்வி பதில்
நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
அஸர் தொழுகைக்குப்பின் நல்ல மழை என்பதால்
கூட்டம் தாமதமாகத்தான் வந்தது.

தலைமையை தலைவர் யாக்கூப் அத்தா அவர்கள் நடத்த
சகோதரர் முஸ்தபா அவர்கள் இறைமறையை ஓதி விளக்கம் அளித்தார்.
அதன் பின் சிறப்புரையை நமது பள்ளி இமாம் ஆஷிக் பிர்தெளசி அவர்கள் ஆற்றினார்கள்




விழாவில் ஆண்களுக்கான முதல் மூன்று பரிசுகள்
பெண்களுக்கான முதல் மூன்று பரிசுகள்
என கொடுத்து அதற்கு பின்
ஆறுதல் பரிசுகள், மற்றும் தினமும் கலந்துக்கொண்டவர்கள்
என பரிசுகள் வழங்கப்பட்டது.
வந்த அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது.
இறுதியில் சகோ.காஸிம் நன்றியுரை ஆற்றினார்கள்.

10/28/2011

Arafat Day on Nov. 5

Arafat Day on Nov. 5

By ARAB NEWS
Published: Oct 28, 2011 01:53 Updated: Oct 28, 2011 01:53

JEDDAH: The Arafat Day, when pilgrims stand in prayer in the plain of Arafat during Haj, will be on Saturday, Nov. 5, while Eid Al-Adha will be celebrated in the Kingdom on Sunday, the Supreme Court announced.

“It has been confirmed that the first day of Dul Hijjah is on Friday, Oct. 28 as the new crescent was sighted by a number of people on Thursday evening,” the court said.

Eid Al Adha begins on November 6

Dubai: Saudi Arabia Thursday announced
the start of the month of Dhu Al Hijja
today and that Eid Al Adha (The Feast of Sacrifice) will fall on November 6 corresponding to the 10th day of Dhu Al Hijja.
Eid Al Adha marks the end of the main Haj ritual
which is the Day of Waqfa (Standing at Mountain of Arafat in Makkah)
on the 9th day of Dhu Al Hijja.
In the UAE, government departments,
schools and universities will enjoy
a holiday for a whole week, starting from November 5.
Three-day holiday

நன்றி : கல்ப் நியூஸ்

குர்பானி கொடுக்க விரும்புபவர்களுக்கு

அன்பானவர்களே

நமது பள்ளியின் சார்பில்
வருடந்தோறும் கூட்டுக்குர்பானி
கொடுத்து வருவது தாங்கள் அறிந்ததே...

அதே போல் இந்த வருடமும் இன்ஷால்லாஹ்
அதற்கான முயற்சிகளில் இருக்கிறோம்.
கூட்டுக்குர்பானி கொடுக்க விரும்புபவர்கள்
நமது நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும்.

இதற்காக நபர் ஒன்றுக்கு irs 900.00 ஆகும்.

“குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும், உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது”. (22:37)
அன்பானவர்களே

ரமலான் மாதம் நடந்த பரிசுப்போட்டியில்
பரிசுகளை வென்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி
இன்ஷால்லாஹ் நாளை மாலை அஸர் தொழுகைக்குப்பின்
நமது பள்ளியில் நடைபெற இருக்கிறது.

பரிசுகளை வென்றவர்கள் மட்டுமல்லாமல்
அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

10/17/2011

இஸ்லாமிய கல்வி பயிலும் மாணவிகளுக்கு

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயங்கி வரும்
தாருல் ஸலாம் மகளிர் கல்லூரியில்
ஆலிமாக்கள் சேர்க்கை வகுப்பு
இப்போது நடைபெறுகிறது.

படிப்பு விபரங்கள் :

1 வருடம் தீனியாத் வகுப்புகள்
3 வருடம் ஆலிமா படிப்பு

ஹாஸ்டல் வசதி உள்ளது.

தொடர்புக்கு ;

தாருல் ஸலாம் மகளிர் இஸ்லாமிய கல்லூரி
108/48 ஆலடி ரோடு விருத்தாசலம்
+91 99424 42472

10/15/2011

அன்பான சகோதரர்களே

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நமது வலைத்தளத்தில்
மாதந்தோறும் கேள்வி பதில் நிகழ்ச்சி
நடைபெறுவது தாங்கள் அறிந்ததே..
இதற்கான பதில்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
'mkranwar@gmail.com'
வேறு எந்த முகவரிக்கி அனுப்பினால் அதற்கு நாம் பொறுப்பல்ல.

மேலும் சென்ற மாதம் பரிசு பெற்றவர்களுக்கு இன்று அவர்களது
இல்லங்களில் பரிசுகள் சென்றடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இன்னும் அதிகமான நபர்கள் பங்கேற்க வேண்டும் என்பது நமது எண்ணம்.
இந்த மாதம் முதல் சரியான விடை எழுதிய அனைவரின்
பெயர்கள் தருகிறோம். ஆனால்,குலுக்கல் முறையில் மூன்று நபருக்கு மட்டுமே
பரிசுகள் என்பதை நினைவு படுத்துகிறோம்.

10/13/2011

அர் ரஹ்மான் செய்திகள்


எல்லா புகழும் இறைவனுக்கே!

நமது அர் ரஹ்மான் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் உதவியால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நமது இடம் போதாது என்பதால்
A.K.S.மண்டபத்தில் ஏற்பாடு செய்து இருந்தோம்.
காலை பத்து மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கியது.
முதல் நிகழ்ச்சியாக பெற்றோர்கள் தமது பிள்ளையின் ஆசிரியைகளை
சந்தித்து உறவாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிகளை ஆசிரியை பானு தொகுத்து வழங்கினார்.
முதலில் கிரா அத் நமது அரபி ஆசிரியர் ஆஷிக் அகமது அவர்கள் ஓதினார்கள்.
அதைத் தொடர்ந்து சிறிய உரையும் இருந்தது.
குர் ஆன் ஓதும்போது, சிறிய உரையிலும்
கல்வியின் அவசியத்தை உணர்த்தி உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து ஆசிரியை விமலா அவர்கள்
வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
தலைமை உரையை தாளாளர் சகோ.காசிம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
அதன்பின் கலந்தாய்வு நடந்தது.
இதில் பெற்றோர்களிடம் புகார்கள் கேட்கப்பட்டு
அதற்கு நமது முதல்வர் அவர்கள் தெளிவாக பதில்கள் சொன்னார்கள்.



நிகழ்ச்சிகள் காலை பத்துமணிக்கு துவங்கி
மத்யம் நிறைவுற்றது. நிகழ்ச்சிக்காக பெற்றோர்கள்
அனைவரும் வந்து இருந்தனர்.
மண்டபம் முழுவதும் நிரம்பி இருந்தது.
வந்த பெற்றோர்களுக்கு விருந்தோம்பலாக
தேனீர் மற்றும் காரம் + இனிப்பு பொட்டலங்கள் வழங்கப்பட்டது
இறுதியாக நன்றியுரை ஆசிரியை கார்த்திகா அவர்கள் சொன்னார்கள்.

10/11/2011

நபி மொழி குளிப்பு கடமை

துல்கதா மாத பரிசுப் போட்டி

1) குர் ஆனில் கூறப்பட்ட நபிமார்கள் எத்தனை பேர்?
2) குர் ஆனில் பெயர் வரும் பறவையின் பெயர் என்ன?
3) மதீனாவின் பழைய பெயர் என்ன?
4) ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்க்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன?
5) தாருஸ் ஸலாம் என்ற நகரம் இருக்கும் நாடு எது?

சரியான விடைகளை இன்ஷால்லாஹ்
எதிர் வரும் 29.10.2011 க்குள்
'mkranwar@gmail.com'
இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

10/06/2011

ரமலான் மாத இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி

அன்பான வாசகர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!

ரமலான் மாதம் முழுவதும் நமது பள்ளியில் நடைபெற்ற
ரமலான் மாத இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியில்
பரிசுகளை வென்றவர்கள் பெயர்கள்.

முதல் மூன்று பரிசுகளை வென்றவர்கள் ஆண்கள் MARKS

1)S.A. MOHAMED IRFAN S/O AHAMED FARIS 265 1/2

2) MUFITH AHAMED M.KADER MYDEEN 264

3)MOHAMED FADIL ABDUL KASIM 262


முதல் மூன்று பரிசுகளை வென்றவர்கள் பெண்கள்
1) B.SHAHANA BEGUM 255 1/2
U.BASHEER AHMED
2)A.AJRAN ALIMA 255
AKBAR ALI
3)M.MARIYAM 254 1/2
S.MOHAMED MOHAIDEEN



ஆறுதல் பரிசுகள்
1)MOHAMED SHAKIR 246 1/2
S/O ADAM MALIK
2) MUJIBUR RAHMAN 243
S/O SHAIK DAWOOD
3) ABDUL AHLAM 241
S/O ABDUL WAHAB
4)ABDUL BASITH 241
S/O SHAIK DAWOOD
5) NIZAR AHMED 239
S/O MOHAMED IQBAL
6) B.FARZANA BARVEEN 249
ABDUL HAMEED
7) JENIRA 250 1/2
D/O ABDUL KAREEM
8)NAJIHA SHEREEN 245 1/2
D/O ABDUL KAREEM
9)FATHIMA SHIFA 242 1/2
D/O KAMALUDEEN
10)MEHAR NIZA 246
W/O SAYED
11)RAHMATH NIZA 251
W/O SHAIK FAREED
12) RAHIMA FARVEEN 251
D/O A.RAFEEK
13) SAMEEHA 244
D/O ABDUL KAREEM
14) SUWATH 244 1/2
NAJMUDEEN
15)LUBNA BEGAM 247
D/O ABDUL LATHEEF
16) BADR NISHA 249 1/2
W/O SHAIK DAWOOD
17) SAHIMA 253
W/O NIZAR
18) THASNEEM FIRDOUS 249
ABDUL KADER
19)FATHIMA SHIFIYA 248 1/2
MOHAMED YOUNUS
20)JOHARA SAFANA 241
NAGOOR PICHAI
21) THAHSIN BEGUM 240
ABDUL FAREED
22)SHAMEEMA BANU 240 1/2
W/O NAJMUDEEN
23) NOOR NISHA 238 1/2
SHAIK DAWOOD
24)MAHBOOB NACHIYA 237 1/2
SHAIK DAWOOD


தினம் தவறாமல் கலந்துக்கொண்டவர்கள்

1) BALKEES BEEVI D/O UMAR ALI
2) DIHANA D/O USMAN ALI
3) KAMILA BEEVI D/O BAVA BAHRUDEEN
4) SABRIN MARYAM D/O HUSSAIN
5) ASIKA D/O HITHAYATHULLAH
6) RAMEEZ RANI D/O SHAIK DAWOOD
7) SHAHUL HAMEED S/O ABDUL WAHAB

இன்ஷால்லாஹ் இவர்களுக்கான பரிசுகள்

இன்னும் சில தினங்களில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து

பரிசுகள் வழங்கப்படும்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

பரிசுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

10/04/2011

ஷவ்வால் மாத பரிசுப்போட்டி

அன்பான வாசகர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

1>திருக்குர் ஆனில் இடம் பெற்ற கிழமைகள் என்ன? என்ன?

வெள்ளி,சனி

2> தயம்மும் செய்து கொள்ள அனுமதி வழங்குகிற வசனம் எது?

04:43 & 05:06

4:43. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி “தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

5:6. முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.


3> ஷவ்வால் மாத நோன்பு சம்பந்தமான நபிமொழி என்ன?
யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

4> நாயகம் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் எத்தனை பேர்?
பதிமூன்று (13 or 11)

5>ஸிஹாஹ் ஸித்தா என்றால் என்ன?

பற்பல ஹதீஸ் தொகுப்புகள் தொகுக்கப்பட்டாலும் முஸ்லிம்களிடையே இன்று ஆறு நூல்கள் “உண்மையான ஆறு ஹதீஸ் நூல்களின் தொகுப்பு எனக் கருதப்பட்டு “ஸிஹாஹ் ஸித்தா” என்ற பெயரில் விளங்கி வருகின்றன. இந்த ஆறு ஹதீஸ் நூல்கள் ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் நஸயீ, ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதீ, ஸுனன் இப்னுமாஜ்ஜா என்பவனாக வரிசைப்படுத்தப்படுகின்றன.


ஷவ்வால் மாத பரிசுப் போட்டிக்கான
வாசகர்களின் பதில்களில்
சரியான பதில்களை அனுப்பிய
வாசகர்களின் பெயர்கள் மட்டும்
குலுக்கல் முறையில் மூன்று பெயர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

பரிசுகளை வென்றவர்கள்

1) ஹபீபுல்லாஹ் துபாய்
2) முகமது பாதில் சென்னை
3) சிராஜ்தீன் துபாய்

இவர்களுக்கான பரிசுப்பொதிகள்
காலக்கிரமத்தில் அவர்களின் இல்லங்களில் சேர்க்கப்படும்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...