10/04/2011

ஷவ்வால் மாத பரிசுப்போட்டி

அன்பான வாசகர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

1>திருக்குர் ஆனில் இடம் பெற்ற கிழமைகள் என்ன? என்ன?

வெள்ளி,சனி

2> தயம்மும் செய்து கொள்ள அனுமதி வழங்குகிற வசனம் எது?

04:43 & 05:06

4:43. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி “தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

5:6. முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.


3> ஷவ்வால் மாத நோன்பு சம்பந்தமான நபிமொழி என்ன?
யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

4> நாயகம் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் எத்தனை பேர்?
பதிமூன்று (13 or 11)

5>ஸிஹாஹ் ஸித்தா என்றால் என்ன?

பற்பல ஹதீஸ் தொகுப்புகள் தொகுக்கப்பட்டாலும் முஸ்லிம்களிடையே இன்று ஆறு நூல்கள் “உண்மையான ஆறு ஹதீஸ் நூல்களின் தொகுப்பு எனக் கருதப்பட்டு “ஸிஹாஹ் ஸித்தா” என்ற பெயரில் விளங்கி வருகின்றன. இந்த ஆறு ஹதீஸ் நூல்கள் ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் நஸயீ, ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதீ, ஸுனன் இப்னுமாஜ்ஜா என்பவனாக வரிசைப்படுத்தப்படுகின்றன.


ஷவ்வால் மாத பரிசுப் போட்டிக்கான
வாசகர்களின் பதில்களில்
சரியான பதில்களை அனுப்பிய
வாசகர்களின் பெயர்கள் மட்டும்
குலுக்கல் முறையில் மூன்று பெயர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

பரிசுகளை வென்றவர்கள்

1) ஹபீபுல்லாஹ் துபாய்
2) முகமது பாதில் சென்னை
3) சிராஜ்தீன் துபாய்

இவர்களுக்கான பரிசுப்பொதிகள்
காலக்கிரமத்தில் அவர்களின் இல்லங்களில் சேர்க்கப்படும்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...