10/13/2011

அர் ரஹ்மான் செய்திகள்


எல்லா புகழும் இறைவனுக்கே!

நமது அர் ரஹ்மான் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் உதவியால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நமது இடம் போதாது என்பதால்
A.K.S.மண்டபத்தில் ஏற்பாடு செய்து இருந்தோம்.
காலை பத்து மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கியது.
முதல் நிகழ்ச்சியாக பெற்றோர்கள் தமது பிள்ளையின் ஆசிரியைகளை
சந்தித்து உறவாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிகளை ஆசிரியை பானு தொகுத்து வழங்கினார்.
முதலில் கிரா அத் நமது அரபி ஆசிரியர் ஆஷிக் அகமது அவர்கள் ஓதினார்கள்.
அதைத் தொடர்ந்து சிறிய உரையும் இருந்தது.
குர் ஆன் ஓதும்போது, சிறிய உரையிலும்
கல்வியின் அவசியத்தை உணர்த்தி உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து ஆசிரியை விமலா அவர்கள்
வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
தலைமை உரையை தாளாளர் சகோ.காசிம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
அதன்பின் கலந்தாய்வு நடந்தது.
இதில் பெற்றோர்களிடம் புகார்கள் கேட்கப்பட்டு
அதற்கு நமது முதல்வர் அவர்கள் தெளிவாக பதில்கள் சொன்னார்கள்.



நிகழ்ச்சிகள் காலை பத்துமணிக்கு துவங்கி
மத்யம் நிறைவுற்றது. நிகழ்ச்சிக்காக பெற்றோர்கள்
அனைவரும் வந்து இருந்தனர்.
மண்டபம் முழுவதும் நிரம்பி இருந்தது.
வந்த பெற்றோர்களுக்கு விருந்தோம்பலாக
தேனீர் மற்றும் காரம் + இனிப்பு பொட்டலங்கள் வழங்கப்பட்டது
இறுதியாக நன்றியுரை ஆசிரியை கார்த்திகா அவர்கள் சொன்னார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...