11/28/2013

நிழல் தரும் அழகிய மரங்கள்


நமது பள்ளி வளாகத்தில் நேற்று சிறிய செடிகளாக
 மரங்கள் வைத்தோம்.. ஆனால், அவை இன்று,
 நிழல் குடை போல
 நமது பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ளது.
 எல்லா புகழும் இறைவனுக்கே!

11/27/2013

அழகான பள்ளிவாசல்கள்


நபிமொழிகள் தொழுகை

நாம் இதுவரை வாசிக்காத, கேட்டிராத,
 இல்லை நாம் தெரிந்து மறந்த சில
 தொழுகை தொடர்பான நபிமொழிகளை
 இந்த தொடரில் பார்க்கலாம்.

 ஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபி(ஸல்)அவர்கள்
 கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும்போது
 அவர் குர் ஆனை கற்று, அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல்
 உறங்கியவர் என்று கூறினார்கள்.
 அறிவிப்பவர்  ஸமுரா (ரலி)
 நூல் புகாரீ 1143

11/23/2013

வெள்ளிக்கிழமை குத்பா பேரூரை

 வெள்ளிக்கிழமை குத்பா பேரூரை

 இந்த வாரம் வெள்ளிக்கிழமை
 நமது பள்ளியின் இமாம் அய்யூப் அல் அன்சாரி அவர்கள்
 'இறைவனின் சட்ட திட்டங்களை பேணுவோம்'
 என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
 இந்த கால கட்டத்திற்கு ஏற்ற தலைப்பு என்று சொல்லலாம்.
 ஏனென்றால், இப்போது பலரிடம் நாம் இறைச்செய்திகள்
 எடுத்துச் சொல்லும் போது
 அவர்கள் என்ன சொல்கிறார்கள்.. அதெல்லாம் சரிதான்?
 ஆனால், இந்த காலத்திற்கு இதுவெல்லாம் சரியா வருமா?
 இது அவர்களின் ஈமானின் பலவீனத்தைக் காட்டுகிறது.
 ஏனென்றால் இஸ்லாம் என்பது வாழும் அற்புதம்.. இது எல்லா காலத்திற்கும் பொருந்தும்.

11/20/2013

வாசிக்கும் பழக்கம்

 அன்பார்ந்த சகோதர... சகோதரிகளே

 நமது பள்ளியில் நிறைய குர் ஆன் மொழி பெயர்ப்புகளும்
 அண்ணலாரின் பொன் மொழிகளும் உள்ளது.
 நமது மார்க்க கல்விக்கும் வளர்ச்சிக்கும்,
 புத்தகத்தில் மார்க்க கல்வி பயில் விரும்பும் சகோதரர்களுக்கும்
 இவை மட்டும் போதுமா என்றால் போதாது..
 ஆகவே இன்னும் நல்ல மார்க்க சிந்தனையுள்ள புத்தகங்கள் வாங்கவும்
 நமது பள்ளியில் உள்ள நூலகம் விரிவடையவும்
 கல்வி பணிக்காக இந்த உதவிகள் செய்து
 இரு உலகிலும் நண்மை அடைய உங்களின் ஆதரவு தேவை..

நபி மொழிகள்

“மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விடுங்கள்!” (நபிமொழி) அறிவிப்பவர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ


“அல்லாஹ்வின் தூதரே! தாடியை யூதர்கள் சிரைக்கின்றனர்’ மீசையை(ப் பெரிதாக) வளர்க்கின்றனர்” என்று நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது, “நீங்கள் மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விட்டு விடுங்கள்! யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ உமாமா ரழியல்
லாஹு அன்ஹு நூல் : அஹ்மத்




சொர்க்க வாசிகளின் பண்புகள்

“அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுவார்கள். உறுதிப்படுத்திய பிறகு அவ்வுடன்படிக்கைகளை முறிக்க மாட்டார்கள். மேலும், அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், எந்தெந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கின்றார்கள். தம் அதிபதிக்கு அஞ்சுவார்கள். மேலும், கடுமையான முறையில் தம்மிடம் கணக்குக் கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள். மேலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில், தம் இறைவனின் உவப்பை நாடி பொறுமையைக் கைக்கொள்கிறார்கள்; தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்கள். மேலும், தீமையை நன்மையைக் கொண்டு களைகின்றார்கள். மறுமையின் நல்ல முவு இவர்களுக்கே உரிதானது.” (திருக்குர்ஆன் 13 : 20 22)
இந்த வசனங்களில் சொர்க்கவாதிகளைக் குறித்து ஒன்பது வகையான பண்புகள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!
1. வாக்குறுதியை நிறைவேற்றல் “அஹ்தில்லாஹ்”எனும் சொல் இடம் பெற்றுள்ளது. இதற்கு “அல்லாஹ்வின் வாக்குறுதி’ என்று பொருளாகும். மனிதர்கள் அனைவரும் படைக்கப்படுவதற்கு முன் உயிரணுக்களாக இருந்த போது அல்லாஹ் வாக்குறுதி வாங்கினான். அதை 7 : 172இல் இறைவன் கூறிக் காட்டுகிறான். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அதாவது ஓர் இறைவனை ஏற்குமாறும், அவனுடைய கட்டளைக்குப் பணியுமாறும் இதன் மூலம் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
2. உடன்படிக்கையை முறிக்காதீர்கள் இங்கே உடன்படிக்கை என்பது, கொடுக்கல் வாங்கல், கடன், வியாபாரம், இரு நாடுகள், இரு குழுக்களிடையே எழுதப்படும் உடன்படிக்கை என எல்லாவற்றையும் குறிக்கிறது. நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்ததும் செய்த முதல் காரியம் அங்கு வாழ்ந்து வந்த யூதர்களோடு உடன் படிக்கை செய்துகொண்டார்கள். அதை முமையாக நிறைவேற்றுமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். சொர்க்கத்தைப் பெறுவதையே தங்களது இலட்சியமாகக் கொண்ட நபித்தோழர்கள் அந்த உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றினார்கள். ஆனால் யூதர்கள் அந்த உடன்படிக்கையை முறித்து இழிவையும் கேவலத்தையும் சந்தித்தார்கள் என்பது வரலாற்றுத் தெளிவு.
3. சேர்த்துக் கொள்வது சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவற்றைச் சேர்த்துக் கொள்வது என்பது உறவினர்களைச் சேர்த்துக் கொள்வதைக் குறிக்கும். உறவினர்களோடு சேர்ந்து வாழ வேண்டும். விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். இது ஒரு வகை. இன்னொரு வகை தொழுகைக்காக வரிசையாக (ஸஃப்) நிற்கும் போது தோளோடு தோள் சேர்த்துக் கொண்டு நிற்பதைக் குறிக்கிறது. சொர்க்கத்தைப் பெற விருப்பமா? அப்படியானால், தொழுகையில் வரிசைகளில் நிற்கும் போது காலோடு காலும் தோளோடு தோளும் சேர்ந்து நிற்க முயற்சி செய்யுங்கள்.
4. இறைவனை அஞ்சுவது வாக்குறுதியை நிறைவேற்றுவது, உடன்படிக்கையை நிறைவேற்றுவது, உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வது… என்று சொல்லிக் கொண்டு வரும் போது இறைவனை அஞ்சுதல் பற்றிப் பேச வேண்டிய காரணம் என்ன? என்னதான் உடன்படிக்கைகளை நிறைவேற்றி உறவினர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் இறைவனை அஞ்சுவதை மட்டும் விட்டு விடக்கூடாது. அதனால் ஓர் அலட்சியம் வந்து விடலாம். எனவே, இறைவனை அஞ்சுமாறு வலியுறுத்தப்படுகிறது.
5. கேள்விக் கணக்கின் கடுமையைப் பயப்படுவது கேள்விக் கணக்கு என்றாலே பயப்பட வேண்டிய ஒன்று தான். அதிலும் கடுமையான கேள்விக் கணக்கு என்பது ஒவ்வொரு முஸ்லிமுடைய உள்ளத்தையும் போட்டு உலுக்கி எடுக்கிறது. இந்த உலகிலேயே இறைவனிடத்தில் அழுது மன்றாட வேண்டிய மனிதர்களாக நாம் இருக்கிறோம். அதிலும் சொர்க்கத்தைப் பெற இந்த குணம் மிகவும் அவசியம். எனவே கேள்விக் கணக்கின் கடுமையை அஞ்சுவோமாக.
6. பொறுமையை மேற்கொள்வது பொறுமை, சகிப்புத் தன்மையை மூன்று வகைகளாக விரிவுயாளர்கள் பிரிகின்றனர். அவை : அஸ்ஸப்ரு அலல்பலாயி சோதனைகளின் போது பொறுமையைக் கடைப்பிடிப்பது. அஸ்ஸப்ரு அலத்தாஅதி நன்மை புரிவது பொறுமை மேற்கொள்வது. இன்று தொழுகைகளை அவசர அவசரமாக மக்கள் தொழுது விட்டுப் பள்ளிவாசல்களைக் காலி செய்யக் காரணம் என்ன? நின்று நிதானமாகப் பேணுதலாகத் தொழ வேண்டிய தொழுகைகளை ஏதோ பல்டி அடித்து விட்டுச் செல்வதைப் போல் செல்லக் காரணம் என்ன? “ரொம்ப நீட்டாதீங்க இமாம்’ என்று கூறுவது பொறுமை இல்லாததே. ஆம்! பொறுமை என்றால் அது நற்செயல்கள் புரிதற்கும் அவசியம். பொறுமை இல்லையெனில் ஒரு நோன்பு கூட யாராலும்ம் வைக்க முயாது. எனவேதான் பல வழிபாடுகளில் நோன்பும் பொறுமையும் இணைகின்றன. ஆக, நற்செயல்கள் புரிவும் பொறுமை அவசியம்.  தீமையை விடுவது என்பதும் இலேசுபட்ட காரிமல்ல. அதற்கும் மலை போன்ற நிலை குலையாமை தேவைப்படுகிறது. பீடி, சிகரெட், வெற்றிலைப் பாக்கு, பான்பராக், சினிமா போன்றவற்றை விட்டுத் தொலைப்பதற்கும் பொறுமை அவசியம். உலகில் இந்தத் தீமைகள் பெருகக் காரணம் மனிதர்களிடத்தில் பொறுமை இல்லாததே.
7. தொழுகையைக் கடைப்பிடிப்பது தொழுகையைக் கடைப்பிடித்துப் பேணுதலாகத் தொழ வேண்டியது முஸ்லிமான ஆண் பெண் அனைவர்மீதும் நாள்தோறும்  கட்டாயமானதாகும். ஆனால், இன்று நிலை என்ன? ஒரு வீட்டில் வாலிப, இளைய பருவத்திலுள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க வயது முதிர்ந்த கிழவன் கிழவி மட்டும் எழுந்து தொழுவதை இன்னும் பல இடங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். யார் எழுந்து கட்டாயம் தொழ வேண்டுமோ அவர்கள் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்க, யார் தள்ளாத வயதில் உள்ளார்களோ அவர்கள் எழுந்து தொழுது வருகிறார்கள்.
8. தான தர்மங்களை வழங்குதல் வெளிப்படையாகவும் மறைவாகவும் எப்படியும் தான தர்மங்களைச் செய்யலாம் என இந்த வசனம் தெரிவிக்கிறது. ஜகாத், ஸதகா போன்ற தான தர்மங்களை வாரி வழங்க செல்வந்தர்கள் முண் வர வேண்டும்.  ஜகாத் மட்டுமின்றி, என்னென்ன நற்செயல்களுக்கு வாரிவழங்கும்படி மார்க்கம் கட்டளையிட்டுள்ளதோ அவற்றுக்கெல்லாம் இறைவனின் திருப்தியை நாடி செல வழிக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
9. தீமையை நன்மையால் அகற்றுவது அதாவது ஒருவர் நமக்குத் தீமை செய்தால் பதிலுக்கு நாமும் தீமை செய்யாமல் அவருக்கு நன்மையே செய்ய வேண்டும். நினைத்துப் பாருங்கள். இப்படிப்பட்ட சமுதாயம் உருவாகி விட்டால் உலகமே இஸ்லாத்தைக் கொண்டாடும் நாள் வந்து விடும். அசுத்தத்தை அசுத்தத்தால் சுத்தம் செய்ய முடியாது. மாறாக, அசுத்தத்தைத் தண்ணீரால் தான் சுத்தம் செய்ய முயும். ஆக, சொர்க்கத்தைப் பெற வேண்டுமா? உங்களுக்குத் தீமை செய்பவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்யுங்கள். சொர்க்கத்தைப் பெறுவீர்கள் என்கின்றன மேற்கண்ட வசனங்கள். வழியைச் சொல்லி விட்டான் இறைவன்; அந்த வழியில் நடைபோட நாம் தயாரா?

11/11/2013

குத்பா உரை

 நமது பள்ளியின் இமாம் அவர்கள்
 இந்த வாரம் குத்பா சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
 இதில் இஸ்லாம் ஒரு அழகான மார்க்கம்.
 மெண்மையான மார்க்கம்.
 இஸ்லாம் ஒரு போதும் வன்முறையை விரும்புவதில்லை
 என அழகான சொற்பொழிவாக இருந்தது.




 அஸர் தொழுகைக்குப்பின் தினமும் 
 நமது பள்ளியில் அண்ணலாரின் பொன்மொழிகள் வாசிக்கப்படுகிறது.
 அதன் ஒரு பதிவு.

11/01/2013



 நீண்ட இடைவெளிக்குப்பின்
 ஒரு அற்புதமான உரையாக
 அழைப்பு பணியின் அவசியம் இருந்தது,
 நல்ல சிந்தனைகள்,
 அழகான உச்சரிப்புகள்..
 இறைவேதம், பெருமானாரின் பொன்மொழிகள்.




அன்பார்ந்த சகோதரர்களே

 நமது மாதாந்திர சொற்பொழிவு


 அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில்
 சகோ. A.G.முகம்மது அவர்களும்,
 மரண சிந்தனை என்ற தலைப்பில்
 S.கமாலுத்தீன் மதனீ அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
 ஏராளனமான சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.
 சில நிமிடங்கள் மட்டும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 எல்லா புகழும் இறைவனுக்கே!

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...