அன்றைய அறியாமை காலத்தில் 360 சிலைகள் நிரம்பிய கஃபாவில், முஆவியா கோத்திரத்தார் கொடுத்த ஹுபைல் சிலையே பிரதானமானது. அடுத்து குறைஷியரின் பெருமைக்குறிய ஆலயங்களாக மூன்று விளங்கின."கடவுளின் பெண் மக்கள்" என்று பக்தியோடு வணங்கப்பட்ட லாத், உஸ்ஸா, மனாத் கோவில்களாகும்.
1, மதீனாவிற்கு மேற்கே செங்கடலை ஒட்டிய 'குதைத்' என்னும் பிரதேசத்தில் இருந்தது. "மனாத்" கோவில்.
2, மக்காவிலிருந்து ஒரு நாள் பிரயாண தூரத்தில் இருந்தது 'நக்லா' எனும் சமவெளி பிரதேசம். இங்கிருந்தது அல்-உஸ்ஸாவின் குறைஷிகளின் அதிக சிறப்பு வாய்ந்த ஆலயம்.
3, தாயிப் நகரில் ஹவாஸின் கோத்திரமான 'தகீப்' களின் நிர்வாகத்தில் இருந்த கோயில் "தாயிப்மாது" என்று பெருமையுடம் அழைக்கப்பட்ட சிலை 'அல்-லாத்' ஆகும்.
ஏகத்துவம் வெற்றி பெற்றதும் நபி (ஸல்) அவர்கள் இணை வைக்கும் கேந்திரங்களை அழித்தொழிக்க அலி(ரழி), காலித் பின் வலீத்(ரழி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். "அல்-உஸ்ஸா"வின் ஆலயத்தை அழித்தபின் காலித்(ரழி) கூறினார். என் தந்தை வலீத் 100 ஒட்டகங்களையும் செம்மறி ஆட்டு மந்தைகளையும் கொண்டு சென்று உஸ்ஸாவிற்கு பலி கொடுத்து தம் நேர்ச்சைகளை நிறைவேற்றி வருவார்.
இன்று நபி (ஸல்) அவர்கள் அழித்தொழித்த இணைவைத்தலின் கேத்திரங்கள் இன்று நம்மிடையே இஸ்லாமிய பெரியார்களின் பெயர்களை தாங்கி தர்ஹா ஆலயங்களாக திகழ்கின்றன.
ஜாஹிலியா (அறியாமை) கால 'வலீத்'கள் கூட்டம் இன்றும் தங்கள் நேர்ச்சைகளை, குர்பானிகளை அவ்வாலயங்களில் நிரைவேற்றி மகிழ்ச்சியோடு திரும்புகின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் இணைவைக்கும் வியாபாரத்தலங்களை மக்கள் நடமாட்டமில்லாத வனாந்திரங் களாகவும், ஷிர்க்கின் (இணைவைத்தல்) பீடங்களாக இருந்த ஊர்களை, நகரங்களை ஜன சஞ்சாரமற்ற பாலைவனங்களாக மாற்றியிருந்தார்கள். இன்று நமது நாட்டில், ஷிர்க்கின் தலைமை பீடங்களாக இணை வைக்கும் வியாபாரத் தலங்களாக அஜ்மீர், நாகூர், ஏர்வாடி, முத்துப் பேட்டை போன்றவைகள் திருவிழா கோலத்துடன் ஊருக்கு ஊர் காட்சியளிக்கின்ற்ன.
கபுர் வணக்கம், பூப் போடுதல், உரூஸ், இசை நிகழ்ச்சி, ஸஜ்தா செய்தல், கபுர் கட்டிடம் கட்டுதல், தரைக்கு மேல் உயர்த்துதல், பிரார்த்தனை செய்தல் போன்ற அனைத்து செயல்களும் இன்று நேர்வழிகளாக மாற்றப்பட்டன. கபுருக்கு பெண்கள் செல்வது, விளக்கேற்றுவது, அல்லாஹ்வின் சாபத்திற்குறிய செயல்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அன்று கூறினார்கள். இன்று அடக்கஸ்தலங்கள் பெண்களுக்கு பரக்கத் தரக்கூடிய இடங்களாக காட்சி தருகின்றன. சபிக்கப்பட்டவைகள் (லஃனத்) இன்று பரகத்தாக மாறிவிட்டன.
இதுதான் இஸ்லாம் என்று எண்ணி ஏமாந்த அப்பாவி முஸ்லிம்கள் அங்கு பலியிட்டு பிரார்த்தனை செய்யக் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். ஆம்! இங்கு இணைவைப்பு இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறுகிறது.
2/27/2010
2/19/2010
இனையத்தின் செய்திகள்
நமது இனையம் துவங்கி சில மாதங்களில்
அல்லாஹ்வின் பேரருளால்
அவனது மார்க்கத்தையும்,
நம் உயிரினும் மேலான கண்மனி நாயகம்(ஸல்)
அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தையும்
இதில் எழுதி வருகிறோம்.
நமது ஊர் மக்கள் அல்லாது, பிற மக்களும் இதை நேரம் கிடைக்கும்போது
வந்து படித்து செல்கிறார்கள்.
பல நாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கிறார்கள்.
நமது அண்டை வீடான சிலோனில் இருந்தும்
சகோதரர்கள் எடுத்து படித்து வருகிறார்கள்.
இன்னும் இறைவனின் தூதுச் செய்தியை
நம்மால் முடிந்த அளவு மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
நீங்களும் இனையம் சிறப்பாக நடைபெற
எல்லாம் வல்ல இறைவனிடம் தூவ செய்யவும்.
இனையத்தில் வருகை பதிவு 2500 ஐ தொட இருக்கிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
அல்லாஹ்வின் பேரருளால்
அவனது மார்க்கத்தையும்,
நம் உயிரினும் மேலான கண்மனி நாயகம்(ஸல்)
அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தையும்
இதில் எழுதி வருகிறோம்.
நமது ஊர் மக்கள் அல்லாது, பிற மக்களும் இதை நேரம் கிடைக்கும்போது
வந்து படித்து செல்கிறார்கள்.
பல நாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கிறார்கள்.
நமது அண்டை வீடான சிலோனில் இருந்தும்
சகோதரர்கள் எடுத்து படித்து வருகிறார்கள்.
இன்னும் இறைவனின் தூதுச் செய்தியை
நம்மால் முடிந்த அளவு மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
நீங்களும் இனையம் சிறப்பாக நடைபெற
எல்லாம் வல்ல இறைவனிடம் தூவ செய்யவும்.
இனையத்தில் வருகை பதிவு 2500 ஐ தொட இருக்கிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
2/15/2010
2/12/2010
வெள்ளிக்கிழமை குத்பா உரை
2/06/2010
அர் ரஹ்மான் செய்திகள்
வெள்ளிக்கிழமை குத்பா உரை
நண்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும்
நல்ல ஒரு அழகான தலைப்பை எடுத்து
நமது இமாம் அவர்கள் இதை நிகழ்த்தினார்கள்.
அதாவது அவர் சொற்பொழிவில் சொன்னதை நான் சொல்லாமல்
அவர் சொன்ன விதத்தின் தொகுப்பை சொல்கிறேன்
என்ன என்றால, நம்மில் பலருக்கு இன்று
அது தீமை, அது ஹராம், அது தப்பு என ,
ஆரம்ப கால தவ்ஹீத் சகோதரர்கள் சொல்லும் மனம் இல்லை என்றார்.
நாம் முழுபூசனிக்காயை சோற்றில் மறைக்கவில்லை.
அன்றைய கால துவக்கத்தில்
ஏகத்துவ பிரச்சாரத்தில் ஆரம்பத்தில்
தமிழகத்திலேயே மொத்தமாக பார்த்தால்
ஒரு ஆயிரம் பேர் கூட இருக்கமாட்டோம்.
ஆனால், அனைவரிடம் தூய்மையான எண்ணம் இருந்தது.
இந்த சத்திய மார்க்கத்தை தூய்மையான வடிவில்
அதன் யதார்த்த நிலையில் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த ஏகத்துவ ராஜபாட்டையில் அனைவரும் வரவேண்டும்.
இஸ்லாம் இவ்வளவு தெளிவாக இருந்தும்
இந்த மக்கள் இப்படி இருக்கிறார்களே!
ஏராளனமான நமது சகோதரர்கள் தனது பிரார்த்தனையில்
அழது.. அழுது... செய்த துவாக்கள் இறைவன் அங்கீகரிக்க..
இன்று பெருமையாக இல்லாமல் சொல்லப்போனால்,
தமிழகத்தில் பத்து லட்சம் பேருக்கு குறையாமல்
இஸ்லாத்தை புரிந்துக்கொண்டார்கள் என்பது உண்மை.
இதற்கு அடிப்படை என்ன காரனம்.
அன்று புத்தகம் படித்து தவ்ஹீதிற்கு வந்த சகோதரர்களிடம்
தூய்மையான எண்ணம் இருந்தது,
பதவி ஆசை இல்லை,
பதவி சுகம் இல்லை,
பெருமை இல்லை,
உலக ஆசாபாசம் இல்லை,
இஸ்லாமிய கல்வியை கற்றார்கள்..
பிரச்சாரம் செய்தார்கள்
அதற்காக கடுமையாக கஷ்டப்பட்டார்கள்.
அடி உதை வாங்கினார்கள்.
அவர்கள் சொல்லும் செயலும் ஒருங்கே அமைந்தது.
இன்று நமது சகோதரர்கள் இது போல
வாழ்க்கை அமைத்தால் அல்லாஹ்வின் இந்த தூயமார்க்கம்
இன்னும் லட்சக்கணக்கான மக்களிடம் செல்லும் என்பதில்
எள் அழவு கூட சந்தேகமில்லை.
சமீபத்தில் திருச்சி அருகே நடைபெற்ற
ஜமாத்தே இஸ்லாமி முதல் மாநில மாநாட்டில்
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட மாநாட்டில்
இறைவன் நமக்கு வழங்கிய அழகிய சலுகையான
இரு தொழுகைகளை இனைத்து சுருக்கி தொழுதல்
இதை அரபியில் நாம் 'ஜம்உ-கஸ்ர்' என்போம்.
இனைத்து தொழுகை அங்கே நடத்தப்படவில்லை
மாறாக லுஹர் தனியாக நடத்தப்பட்டது.
அஸர் தனியாக நடத்தப்பட்டது.
ஏன் இந்த தயக்கம்?
யாருக்கு அச்சம்?
இறைவனின் சலுகைகளை நடைமுறைபடுத்த?
இன்னும் சொல்லப்போனால்
திருச்சியில் இருந்து அந்த மாநாடு நடைபெற்ற இடம் 39.கி.மீ.
திருச்சியில் இருந்து வந்தவர்கள் கூட
சந்தேகமே இல்லாமல் கஸ்ர் செய்யலாம்.
அன்பானவர்களே
இதை தான் நமது இமாம் தொகுத்து
அழகாக விளக்கினார். அதன் நண்மை தீமைகளை விளக்கினார்.
நமக்கு அருகே நடக்கும் தீமையை கண்டிக்காமல் இருந்தால்
அதன் பாதகத்தையும் சொன்னார்.
இனியும் தாமதம் இல்லாமல்
நண்மையை ஏவுவோம்
தீமையை தடுப்போம்.
அல்லாஹ் நமக்கு எல்லா வகையிலும் உதவி செய்வானாக! ஆமின்.
2/04/2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...