அல்லாஹ்வின் பேரருளால் நேற்றைய ஜூம்மாவுக்கு
இலங்கையிலிருந்து வருகை தந்த மெளலவி அப்துல் நாஸர் இஸ்லாமி அவர்கள்
ஓர் அழகிய குர் ஆன் விரிவுரை நிகழ்த்தினார்கள்.
நாமும் இதுவரை எத்தனையோ ஜூம்மா மேடை பார்த்து இருக்கிறோம்.
ஆனால் ஜூம்மா மேடையில் என்ன செய்ய வேண்டுமோ அதை
சிறப்பாக செய்து முடித்தார் சகோ. நாஸர் அவர்கள்.
அதாவது இறைமறையிலிருந்து ஓர் வசனத்தை எடுத்தார்.
அதை விரிவாக்கம் செய்தார்.. அதாவது தப்ஸீர்..
சுமார் நாற்பது நிமிடங்களுக்கு மேலாக ...சுப்ஹானல்லாஹ்.
நல்ல ஒரு அழகான் சொற்பொழிவு..
இது தான் இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கு அழகு..
இதுதான் குத்பா பேரூரையை அலங்கரிக்கும் விதம்.
என்ன தான் உலக விஷயங்களை பேசி மக்களுக்கு எடுத்துச் சொன்னாலும்,
அல்லாஹ்வின் வேத வசனங்களை கியாம நாள் வரும் வரை மக்களுக்கு வந்த
ஓர் ஒப்பற்ற மறையை விளக்குவது தான் ஜூம்மா மேடைகளின் சிறப்பு.
அல்ஹம்துலில்லாஹ்.. அல்ஹம்துலில்லாஹ்
இதன் வீடியோ பதிவுகள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
அவர் எடுத்துக்கொண்ட வசனம் இது தான்.
' திருக்குர் ஆனின் 13வது அத்தியாத்தில்
17வது வசனம் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக