5/28/2010

செய்திகள்

இறையின் பெயரால்..

எல்லாம் வல்ல இறைவன் உதவியால்
சென்ற வாரம் குத்பா மற்றும் 'அல்ஹம்துலில்லாஹ்'
நிகழ்ச்சி இரண்டும் இனிதே நிறைவேறியது.
நிகழ்ச்சி மஹ்ரிப் தொழுகைக்குப்பின் துவங்கியது..
நேரம் ஆக.. ஆக.. கூட்டம் நிரம்பியது..
அர் ரஹ்மான் அரங்கம் முழுவதும் நிரம்பியது.
ஏராளனமான பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இன்றைய குத்பா சிறப்பாக அமைந்தது.
இன்றைய முதலாவது உரையில்
குர் ஆன் மட்டும் போதும் என்ற கூட்டம்
எப்படி? எப்போது உருவானது?
என வரலாற்றை எடுத்து வைத்து,
அவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டை
அழகாக விளக்கினார்.

அதே போல இரண்டாவது அமர்வில்
நவ நாகரீக உலகில் மேற்கத்திய கலாச்சாரத்தின் அடிச்சுவட்டில்,
திருமணத்திற்கு முன், நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம்
தொலைபேசி அல்லது அலைபேசியில் உரையாடுவது,
நேரில் பார்த்து உரையாடுவது போன்றவைகள் கூடாது,
இவை அனைத்தும் ஹராமான செயல்களாகும் என
நல்ல ஒரு கருத்தை வலியுறுத்திச் சொன்னார்.
இது போன்ற செயல்களை பெற்றோர்கள் ஆதரிக்கக்கூடாது
எனவும் வலியுறுத்திச் சொன்னார்.
வழக்கம் போல பள்ளி நிரம்பியது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...