9/02/2010

லைலத்துல் கத்ர்

ரமழான் மாதத்தில் மகத்துவமிக்க ஓர் இரவு உள்ளது. அந்த ஒரு இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறப்பானதாக அமைந்துள்ளது.

இந்தத் திருக்குர்ஆனை மகத்துவ மிக்க ஓர் இரவில் நாம் அருளியுள்ளோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்குத் தெரியுமா அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும். (அல்குர்ஆன் 97:1-3)

இந்த மகத்துவமிக்க இரவு இதுதான் என்று வரையறுத்து குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. ஆனாலும் ரமழான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அந்த இரவு அமைந்திருக்கலாம் என்பது தான் ஹதீஸ்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.

லைலத்துல் கத்ர் இரவை ரமழானின் கடைசி பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள் என்பது
நபி (ஸல்)மொழி. அறிவிப்பவர் ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவருடன் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்துவிட்டேன். எனவே அதை கடைசி பத்து நாட்களில் தேடுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) முஸ்லிம், அஹ்மத்

குறிப்பிட்ட இரவு லைலத்துல் கத்ர் இரவு என்று சில ஹதீஸ்கள் வந்திருந்தாலும் கடைசிப் பத்து நாட்களில் ஏதேனும் ஒரு இரவாக இருக்கும் சாத்தியம் உள்ளது என்று இந்த ஹதீஸ்கள் கூறுவதால் இந்தப் பத்து நாட்களும் முயற்சிப்பதே சிறப்பானதாகும்.

லைலத்துல் கத்ரின் அமல்கள்

லைலத்துல் கத்ர் இரவுக்கென்று விசேஷமான தொழுகையோ பிரத்தியேகமான வணக்கமோ ஹதீஸ்களில் காணப்படவில்லை. ஆயினும் கடைசி பத்து நாட்களும் பள்ளிவாசலிலேயே தங்கியிருக்கும் இஃதிகாப் எனும் வணக்கத்தை நபி (ஸல்)யவர்கள் செய்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...