9/05/2010

செய்திகள்

புனித ரமலான் மாதம் இறையருளால் செல்கிறது.
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்குப்பின் சிறிது நேரம்
குர் ஆன் விரிவுரை வகுப்புகள் நடைபெறுகிறது.

தினமும் அஸர் தொழுகைக்குப்பின் குர் ஆன் விரிவுரை வகுப்புகள் நடைபெறுகிறது.
இதில் நபிமார்களின் வாழ்க்கை வரலாறு இடம் பெறுகிறது.

பள்ளியில் இப்தார் நேரங்கள் சங்கையாக உள்ளது.
தினமும் 125பேருக்கு குறையாமல் நோன்பு திறக்க வருகிறார்கள்.
அவர்களுக்கு இப்தார் உணவாக , சர்பத், பேரீட்சை, கஞ்சி,
பழங்கள், வடை, சமூசா, சில சமயங்களில் பப்ஸ் வைக்கப்படுகிறது.

இரவுத்தொழுகை சிறப்பாக நடைபெறுகிறது.
அதிகாலை 3.00 மணிக்கு இரவுத்தொழுகை தொடங்கி,
4.00 மணிக்கு முன் முடிந்து விடும்.
தொழுகை முடிந்ததும் அனைவருக்கு ஸஹர் உணவாக
சூடு ஆறாமல், உணவுப் பொட்டலங்கள் கொடுக்கப்படுகிறது.
தினமும் ஆண்கள் சுமார் 60பேருக்கு குறையாமலும்,
பெண்கள் நூற்றுக்கு மேற்ப்பட்டவர்களும் கலந்துக்கொள்கிறார்கள்.
ஒற்றைப்படை இரவுகளில் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

பித்ராவின் பணிகள் தொடங்கிவிட்டது.
இதற்காக பொறுப்புகள் கொடுக்கப்பட்டு
அதன் செயல்பாடுகளை பார்த்து வருகிறார்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...