வெள்ளிக்கிழமை குத்பா உரை
இபாதுர் ரஹ்மான் அழகிய தலைப்பில்
நல்ல ஒரு வகுப்பாக அமைந்தது என்றால் மிகையல்ல..
அல்லாஹ்வின் நல்லடியார்கள் எப்படி பட்டவர்கள்,
அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை பாடமாக
நமது இமாம் முனிர்ஸலாஹி அவர்கள் குத்பா உரையில்
தொகுத்து சொற்பொழிவாற்றினார்கள்..
இந்த பாடத்தில்.. இறைவேதத்தில் இருந்தும்,
அண்ணலாரின் வாழ்வில் இருந்தும்,
அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை உதாரனமாக எடுத்து,
நல்ல உரையாக சொன்னார்.
அந்த உரையில்... நாயகம்(ஸல்)அவர்கள்
சிறுவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் ஸலாம் சொல்வது,
நல்லடியார்கள் இரவின் மூன்றாம் ஜாமத்தில் எழுந்து,
அல்லாஹ்வை பயந்தவர்களாக தஹஜ்ஜத் தொழுவது,
எந் நேரமும் இறைவனை நினைவு கூர்வது,
எதையும் வீண் விரயம் செய்யாதது,
அது போல பொருளாதாரத்தையும் தேவையுடன் செலவு செய்வது,
எல்லோருக்கும் உதவிகள் செய்வது, இஸ்லாமிய சட்டங்களை மதித்து நடப்பது,
பாவமான காரியங்கள் செய்யாமல் இருப்பது, அப்படி பாவமான காரியங்கள்
செய்துவிட்டால் இறைவனிடத்தில் பாவமன்னிப்பு தேடுவது,
என நல்ல ஒரு பாடமாக குத்பா உரையை நிகழ்த்தினார்.
ஆண்களும், பெண்களும் தொழுகைக்கு வந்து இருந்தனர்.
பள்ளி வாசல் தொழுகையாளிகளால் அலங்கரிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக