7/23/2012

சபை ஒழுங்கு



முஆவியா(ரலி) அவர்கள் ஜுபைர் (ரலி) அவர்களின் மகனாரிடமும், ஸஃப்வான் (ரலி) அவர்களின் மகனாரிடமும் வந்தனர்.
அப்பொழுது அவ்விருவரும் அவர்களுக்காக எழுந்து நின்றனர். அப்பொழுது முஆவியா(ரலி) அவர்கள் அவ்விருவரையும் ‘நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள்
. ஏனெனில் நிச்சயமாக எவருக்குத் தமக்காக மக்கள் எழுந்து நிற்பது மகிழ்ச்சியை நல்குகிறதோ அவர் நரகத்தை தம் இடமாக்கிக் கொள்ளவும் என்று நபி அவர்கள் கூற நான் கேட்டேன்’ என்று கூறினர். அறிவிப்பவர்: அபூமிஜ்லஸ் நூல்: அபூதாவூத், திர்மிதீ

ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் கையில் தடியை ஏந்தியவர்களாக எங்களிடம் வந்தனர். அப்பொழுது நாங்கள் அவர்களுக்(கு மரியாதை செய்வதற்)காக எழுந்துவிட்டோம். அதற்கு அவர்கள் ‘அரபியல்லாதவர்களில் சிலர், சிலருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எழுந்துவிடுவது போன்று நீங்கள் எழுந்து விடாதீர்கள்’ என்று கூறினர். அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி) நூல்: அபூதாவூத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...