12/27/2009

முஹர்ரம் மாதத்தில் இப்தார்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
அவனது சத்திய மார்க்கத்தை அதன் தூயவடிவில்
யதார்த்த முறையில் மக்களுக்கு எடுத்துச் சொல்லி
அதை விளங்க வைத்து அதற்காக பல தியாகம் செய்த
நமது சகோதரர்களின் முயற்சிகள் வீண்போக வில்லை என சொல்லலாம்.
அல்லாஹ்வின் மார்க்கத்தை வளர்ப்பது அவனது செயல் அல்லவா?

அன்றைய காலங்களில் இது போன்ற
நோன்புகள் வைப்பவர்கள் மிகக்குறைவே.
இன்னும் சொல்லப்போனால் விரல் விட்டு என்னிவிடலாம்.
அப்படித்தான். அதாவது நபிவழியை அறிந்தவர்கள் மட்டும்
இது போன்ற சுன்னாவை பேணி வந்தார்கள்.

இன்று என்னவென்றால் நாம் முதன் முதலாக
நம் உயிரினும் மேலான நாயகத்தின் சுன்னாவை ஆர்வமூட்ட,
இப்தார் ஏற்பாடு செய்து இருந்தோம்.
கஞ்சியும் காய்ச்சி வினியோகமும் செய்தோம்.
ரமலானில் உள்ள அதே அளவுக்கு கூட்டம் அலைமோதியது.
நோன்பு திறக்க, 78 பேர் வந்து இருந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்..

12/26/2009

பார்வையாளர்கள் 2000 .....

அன்பான கொள்கை சகோதரர்களே!
உங்களின் பங்களிப்பில்
நமது இனையம் மிகவும் ஆவலாக பார்க்கப்பட்டு,
இதுவரை 2000 பார்வையாளர்களை தொட இருக்கிறது.
இதையே ஆங்கிலத்தில் successful bloggers என்பார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

உங்கள் வருகைக்கும், ஆவலுக்கும்,
தேடலுக்கும், பார்வைக்கும்,
எங்கள் மனமார்ந்த நன்றிகள்..

இறையின் உதவியால் எங்களால் முடிந்த பணிகளை,
தொய்வில்லாமல் செய்கிறோம்.
நீங்கள் இனிவரும் காலங்கள்,
பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல்
உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு
மிக்க அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.
ஜிமெயில் கணக்கு இருந்தால் மட்டுமே கருத்துரைகள் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.

12/24/2009

முஹர்ரம் மாதம் நோன்பு

அபூஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள்:

"ரமளானுக்குப்பின் நோன்புகளில் மிகச்சிறந்தது, அல்லாஹ்வின் மாதமான
முஹர்ரம் மாதம் நோன்புதான். கடமையான தொழுகைக்குப்பின்
தொழுகையில் மிகச்சிறந்தது, இரவுத் தொழுகை(தஹஜ்ஜத்) தான்"
என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்)


அபூ கதாத (ரழி) அறிவிக்கின்றார்கள்:

ஆஷுரா நாளில் நோன்பு வைப்பது பற்றி
நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள்
"அந் நாளில் நோன்பு வைப்பது, அதற்கு முன் சென்ற வருடத்தின்
பாவங்களை அழிக்கிறது" என்று பதில் கூறினார்கள். (முஸ்லிம்)

அன்பான சகோதரர்களே!

இன்ஷால்லாஹ் வரும் முஹர்ரம் பிறை 9,10,
சங்கையாக நோன்பு திறக்க நமது பள்ளியில்
ஏற்பாடு செய்யப்படுகிறது.
அனைத்து நோன்பாளிகளிலும் நோன்பு திறக்க
இன்ஷால்லாஹ் பள்ளிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அர் ரஹ்மான் செய்திகள்


அரையாண்டு தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில்
நாளை முதல் 25/12/2009 - 02/01/2010 வரை
பள்ளி விடுமுறை ஆகும்.
இன்ஷால்லாஹ் வழக்கம்போல் 03/01/2010 முதல்
பள்ளி வேலை நாட்கள் நடைபெறும்.

12/22/2009

செய்திகள்:-

*இன்று மதியம் முதல் நமதூரில் பெய்து வரும் மழையின் காரணமாக
நமது பள்ளியில் மஹ்ரிப் தொழுகையுடன் , இஷாவும் சேர்த்து தொழ
வைக்கப்பட்டது.

*இரன்டு மாதம் காலம் விடுப்பில் சென்ற
நமது பாசத்திற்குரிய சலாம் பாய்
காயல் நகரிலிருந்து மீண்டும் பள்ளிக்கு வந்து விட்டார்.
அவரை நாம் பார்த்து பேசி ஆச்சர்யப்பட்டதை விட
அர் ரஹ்மான் மழலைகள் அவரிடம் பாசமழை பொழிந்தனர்.

*இன்ஷால்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை
குத்பா உரை நிகழ்த்த கோவை ஜாஹிர் வருகிறார்.

அன்று மாலையே நமது சகோதரர் N.சர்புதீன் வீட்டில்
நூருல் இஸ்லாம் தெருவில் மார்க்க சொற்பொழிவு
அஸர் தொழுகைக்குப்பின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம்.

12/21/2009

மக்கள் சேவையில்...

ஏழை எளிய மக்கள் பயன்பெற
அவர்களும் வாழ்வில் செழித்தோங்க
அருமை நாயகம் (ஸல்) காட்டித்தந்த பாதையில்
உங்களிடம் இருந்து குர்பானி தோல் வாங்கினோம்.
அதை உண்மையாக யாரிடம் சேர வேண்டுமோ
அவர்களை சரிபார்த்து சேர்த்து விடுகிறோம்.
இதோ முதன் முதலாக..



<இதை விளம்பர நோக்கில் பதியவில்லை>

வாழ்த்துகிறோம்



மணமகன்: முஹம்மது தாரிக்
மணமகள்: ஜரீனா பேஹம்

நாயகம் (ஸல்) வழியில் வாழ்ந்து
சீரும் சிறப்ப்போடும்
இவ்வுலகில் மட்டுமல்லாது
இரு உலகிலும்
மணமக்கள் நற்பாக்கியங்களுடன் வாழ
துவா செய்தவர்களாக வாழ்த்துகிறோம்.

12/17/2009

மக்கள் சேவையில்...



தானத்தில் சிறந்தது குருதி தானம் என்பார்கள்
நமது அமைப்பின் சார்பாக இரத்ததான முகாம் இந்தியாவில் நடத்துவதில்லை.
அதே சமயம் இரத்தம் தேவை என உதவி கேட்டு வருபவர்களுக்கு,
அவருக்கு எந்த குரூப் இரத்தம் தேவைப்படுகிறதோ,
அந்த குரூப் உள்ளவரை இனம் கண்டு இரத்த தானம் கொடுத்து வருகிறோம்.
இதில் நாம் இனம் , மொழி பார்ப்பதில்லை..
எல்லோருக்கும் உதவி செய்து வருகிறோம்.
சமீபத்தில் நமது சகோதரர் ஒருவரு இரத்த தானம் செய்தபோது
அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

12/14/2009

ஹஜ்ஜை முடித்து அருளை சுமந்த ஹாஜிகள்









ஈமான் தஞ்சம் பெறும் மதினா







அன்ஸார்கள் வாழ்ந்த மதினா





நமதூர் மஸ்ஜித் நூர் பள்ளி இமாம் ஷேக் அலி ஹஜ் பயணம் செய்தபோது
அவர் எடுத்த படங்கள் தான் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்







புகைப்படங்கள் உதவி அல்பாஸ் சுல்தான்

யத்ரிப் என்னும் அழகிய மதினா











புகைப்படங்கள் உதவி :அல்பாஸ் சுல்தான்

12/06/2009

டிஸம்பர் - 6

'டிஸம்பர் - 6' வந்தாலே நம்மிடம்
இறையில்லச் சிந்தனை வந்து
நம்மிடம் ஒரு சோகம்
நம்மை அறியாமல் வந்து சேரும்.
இது சுதந்திர இந்தியாவில் நடந்த
கேவலம் என்றால் மிகையல்ல.
இன்றைய தினத்தில்
ஏராளனமான நமது அமைப்புகள்,
ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும்,
கையெழுத்து வேட்டையும்,
கண்டன போஸ்டர்களும் என
தனது எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன.

இதை நாம் ஒன்றும் குறை சொல்லவில்லை.
இறைவனை தொழக்கூடிய ஆலயங்கள்
இடிப்பதை கண்டிக்காமல் இருக்கமுடியாது.
அதை மீட்கவும் முயற்சிகள் தொடரவேண்டும்...

ஆனால் இங்கே சில சிந்தனைகள் சொல்லவேண்டும்
இறைவனின் இல்லத்திலிருந்து
தினமும் ஐந்து நேரம் இறைவனை வணங்குவதற்காக
அழைப்புகள் வந்து கொண்டே
இருந்தது.. இருக்கிறது..இருக்கும்..
அந்த அழைப்பை காதில் வாங்கி கொள்ளாமல்
எருமைமாட்டின் மேலே
மழை பெய்த மாதிரி சென்றுவிட்டு
இடித்தபின் ஆர்ப்பாட்டங்களுக்கு செல்வது
எந்த விதத்தில் நியாயம்?!
அந்த ஒரு தினத்தில் கூடி
தமது உணர்வை வெளிப்படுத்துவது
எந்த விதத்தில் நியாயம்..?!
எங்கே அல்லாஹ்வின் நல்லடியார்களே
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்..
இறை இல்லத்தில் இருந்து வரக்கூடிய அழைப்பை
ஏதோ மோதினாரின் அழைப்பு என கருதாமல்
இறைவனை வணங்க பள்ளிக்கு செல்லுங்கள்
தொழுகையால் இறைஇல்லத்தை அலங்கரியுங்கள்.
'மூமினான ஆண்களுக்கும்
மூமினான பெண்களுக்கும்
குறிக்கப்பட்ட நேரத்தில்
தொழுகை கட்டாய கடமையாகும்.

(நன்றி; மதுக்கூர்.காம்)

12/04/2009

இன்றைய குத்பா உரை

இன்றைய குத்பா உரை

பெண்களுக்கு தகுந்த நல்ல ஒரு சொற்பொழிவாக அமைந்தது.
இன்றைய உரையை நமது இமாம் முனிர் ஸலாஹி நிகழ்த்தினர்.
இன்றைய உரையில் குழந்தை பாக்யம்,
அதே போல அகீகா எப்போது கொடுப்பது,
அகீகா எப்படி கொடுக்க வேண்டும்,
நல்ல முறையில் இஸ்லாம் காட்டித்தந்த பிரார்த்தனை

'யா அல்லாஹ் என் கண்களுக்கு
எனது மனைவியையும், குழந்தைகளையும்
கண்களுக்கு குளிர்ச்சியாக்கி தருவாயாக!'

என இதையும் சொல்லிக்காட்டினார்.
அதேபோல குழந்தைகளை வளர்க்கும் விதம்
குழந்தைகள் பெற்றோரிடம் நடந்து கொள்ளும் விதம்
குழந்தைகளிடத்தில் நாயகம்(ஸல்) எப்படி அன்பு காட்டினார்கள்,
அதே போல பெயர் சூட்டுவது,
இதில் முக்கியமாக ஒன்றை வலியுறுத்தினார்
என்னவென்றால் தாய்ப்பால் கொடுப்பது,
இஸ்லாம் இரன்டு வருடம் தாய்ப்பால் கொடுக்க சொல்கிறது.
என இதையும் வலியுறுத்தி கூறினார்.
நல்ல அழகான உரை..
பெண்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.

வருகையாளர்கள்



நமது வலைத்தளத்தை இறையருளால்
இனிதே நடத்தி வருகிறோம்.
வருகையாளர்கள் எந்த எந்த நாட்டிலிருந்து
வருகிறார்கள் என்ற பார்பதற்காக
இன்று முதல் அதையும் பதிவு செய்கிறோம்.
ஏற்கனவே எந்த எந்த நாட்டின், நகரில் இருந்து
வருகிறார்கள் என்பதை பதிவு செய்து பார்த்து வருகிறோம்.
இந்தியா, அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், சிலோன்,
ஆகிய நாடுகளிலிருந்தும் சில நேரங்களில் பிலிப்பைன்ஸ்'ல் இருந்தும்
மக்கள் வருகின்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

குர்பானி தோல்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால்
நமது பள்ளியிலும் குர்பானி தோல் வாங்கினோம்.
இதற்காக பல சகோதரர்களும்
கொட்டும் மழையை பாராமல் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
இரன்டு நாட்களில் மொத்தமாக 161 தோல்கள் வாங்கினோம்.
இந்த தோல் விற்ற பணம் முழுவதும்
நமதூரில் உள்ள ஏழைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.




தகுதியுள்ளவர்கள் தாங்களின் வீடுகளின் அருகாமையில் இருந்தால்
நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
(அது நிர்வாகத்துக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கும்.)
தோல்கள் கொடுத்தவர்களுக்கும்
அதை வாங்க ஒத்துழைத்த சகோதரர்களுக்கும்
அல்லாஹ் இரு உலகிலும் நற்பாக்கியங்கள் கொடுப்பானாக!

12/03/2009

ஜப்பானிய மூளைக்காய்ச்சல்



தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய்க்கான
தடுப்பு ஊசி மருத்துவ முகாம்
நமது அர் ரஹ்மான்
மாணவ மாணவிகளுக்கு போடுவதற்காக
நமது பள்ளியில் நடைபெற்றது.
இந்த தடுப்பு ஊசி



1 வயது முதல் 15 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டும்.
பெற்றோரின் சம்மதத்துடன்
எல்லோரும் பயனடைந்தனர்.

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...