1/16/2010

மில்லேன்னியும் கிரகணம்

வெள்ளிக்கிழமை
சூரியன் உதயமாகும் நாளில்
சிறப்பான நாள். நேற்று குத்பா உரையை
நமது பள்ளி இமாம் முனிர்ஸலாஹி அவர்கள் நிகழ்த்தினார்கள்.


நேற்றைய முதலாம் உரையில் நட்புகளை எப்படி தேர்ந்து எடுப்பது?
கூடா நட்பு எது? நல்ல நட்புகளால் ஏற்படும் பயன்கள் என
அனைத்தையும் விரிவாக விளக்கினார்.
இன்னும் விரிவாக பார்த்து இருந்தால் நன்றாக இருக்கும்.


இரன்டாவது உரையில் சூரியகிரகணம் பற்றியும்
அது ஏற்பட்டால் நாம் என்ன செய்யவேண்டும் என விளக்கினார்.
பள்ளி நிரம்பியது. மக்கள் வெளியேயும் பாய் போட்டு தொழுதனர்.



நபி(ஸல்)காலத்தில் சூரியகிரகணம் ஏற்பட்டபோது
அழைப்பாளர் ஒருவரை அனுப்பி "அஸ்ஸலாது ஜாமி ஆ"
என்று மக்களை அழைக்குமாறு நபி(ஸல்)கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லா இப்னு அம்ரு
நூல்: முஸ்லிம்

ஜும் ஆ தொழுகைக்குப்பின் கிரகணத்தொழுகையும் நடத்தப்பட்டது.
கிரகணத்தொழுகை கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு
குறையாமல் இரன்டு ரக் அத்கள் நடத்தப்பட்டது.
ஜூம் ஆ வுக்கு வந்த அனைவரும் கலந்துக்கொண்டனர்.
பெண்களும் ஆர்வமாக இத்தொழுகையில் பங்குபெற்றன்ர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...