சமீபத்தில் நம்மிடையே எழுந்த ஒரு சந்தேகம்
இனையங்களில் உருவபடங்கள் வெளியிடலாமா?
என்ற ஒரு சந்தேகத்தின் காரணமாக
சில வாரங்கள் நாம் படங்கள் வெளியிடுவதில்லை.
உலகில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வுக்கு,
நாயகம் (ஸல்) அவர்களின் அழகிய நபிமொழி இருக்கிறது.
'செயல்கள் யாவும் எண்ணங்களை பொறுத்தே அமையும்' -புகாரி.
நாம் நல்ல ஒரு நோக்கத்திற்காக
அழைப்பு பணிக்காக
இஸ்லாத்தை தூய வடிவில் எத்திவைப்பதற்காக
திரைமாலைகள் கடந்து வாழும் நமது உறவுகள் பார்ப்பதற்காக
இந்த இனையவழி உறவுப்பாலத்தை செய்கிறோம்.
எந்த ஒரு செய்திகளாக இருந்தாலும்
அதை அடுத்த நிமிடமே இதில் இருந்து எடுக்க முடியும்..
எல்லாம் வல்ல இறைவன் இதில்
நம்மை குற்றம் பிடிக்காமல்
அளவுக்கு அதிகமான நண்மைகள் கொடுத்து
மறுமை நாளில் உயரிய சுவனத்தில் நாம் வாழ
நாமும் துவா செய்கிறோம்.
தாங்களும் பிரார்த்தனை செய்யவும்.
வழக்கம் போல நமது பணிகள் தொடரும்...
இன்ஷால்லாஹ்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக