12/27/2011

அன்பான சகோதர, சகோதரிகளே!




நமது பள்ளிவாசலின் மேல்மாடி வேலைகள்
ஏக இறையின் உதவியால் துவங்கி விட்டது.
இதை துவக்க உதவி செய்த இறைவன்
இதை பூர்த்தியாக்கி கொடுப்பான்
என ஏக இறைவனிடம் மட்டும் பிரார்த்தனை செய்வோமாக!
எல்லா புகழும் இறைவனுக்கே!

அன்பான சகோதரர்களே!

நாம் பரிசுப்போட்டிக்கான கேள்விகள்
எழுதும் போது அதன் முடிவு தேதியும் எழுதுவோம்.
25/12/2011 முடிவு தேதி.
இதற்கு பின்னர் வந்த மின்னஞ்சல்கள்
பரிசுப்போட்டிக்காக எடுத்துக்கொள்ளப்படாது
என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

12/25/2011

Beautiful Names

நமது வலைத்தளத்தில்
நமது குழந்தைகளுக்கு சூட்ட
அழகிய பெயர்கள் வைக்க
ஒரு இனையதளம் பரிந்துரை செய்துள்ளோம்.
அதில் தமிழ் அர்த்ததுடன் அழகிய பெயர்கள்
நீங்கள் தேர்வு செய்யலாம்.


வலது புறத்தில் beautiful names என்ற பெயரில் உள்ளது.
அதை க்ளிக் செய்து பயனடையுங்கள்.

12/22/2011

அன்பான வாசகர்களே!

சென்ற மாதம் நமது பரிசுப்போட்டியில்
வென்றவர்களுக்கு பரிசுகளை
அவர்களின் இல்லங்களில் கொண்டு சேர்த்து விட்டோம்.
அல்ஹம்துலில்லாஹ்.

இன்னும் மாதா மாதாம்
அதிகமான மக்கள் கலந்துக்கொண்டு
நமது பரிசுப்போட்டியை சிறப்பிக்க வேண்டுமென என்பது நமது ஆவல்.

பரிசு சின்னது தானே என நினைக்காதீர்கள்.
இதற்கான விடைகள் தேடும்போது
பல மார்க்க அறிவை தேடும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது.
ஆகவே, இதில் நீங்களும் பங்கு பெறுங்கள்.
பதில் எழுதும் போது
மறவாமல் உங்கள் இல்லம் முகவரியும் சேர்த்து எழுதவும்.

ஜமாஅத் தொழுகை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்குமேலானதாகும்.” (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், “இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக!” என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார். (ஸஹீஹுல் புகாரி)

காலை அல்லது மாலை நேரங்களில் மஸ்ஜிதுக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுவதில் ஆர்வமுடையவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறியுள்ளார்கள்.

“எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் கூறினார்கள்:

“எவருக்கு கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை அதற்காக பாங்கு சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.” பின் தங்கியவன் (முனாபிக்) தனது இல்லத்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டீர்கள். உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்படையான முனாபிக் (நயவஞ்சகர்)தாம் ஜமாஅத் தொழுகையிலிருந்து பின்தங்கிவிடுவார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணைகொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகையின் அணிவகுப்பில் நிறுத்தப்படுவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுகளில் ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்கள். நியாயமான காரணமின்றி ஜமாஅத்தை விடுபவரை வீட்டுடன் சேர்த்து எரித்துவிட நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.

“எவனுடைய கரத்தில் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நான் விறகுகளைக் கொண்டுவர உத்தரவிட்டு, பிறகு தொழுகைக்கான “அதான்’ சொல்ல ஏவி, பிறகு ஒரு மனிதரை இமாமாக நிற்க உத்தரவிட்டபின் நான் ஜமாஅத் தொழுகைக்கு வராதவர்களிடம் சென்று அவர்களை வீட்டுடன் சேர்த்து எரித்திட விரும்புகிறேன்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதற்குப் பிறகும் இமாம் ஸயீதுப்னுல் முஸய்யிப் (ரழி) போன்றவர்களைக் காண்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர்கள் முப்பதாண்டு காலமாக மஸ்ஜிதில் எவருடைய பிடரியையும் பார்த்ததேயில்லை. அவர்கள் பாங்கு சொல்லப்படும் முன்பே முதல் வரிசையில் அமர்ந்திருப் பார்கள். இஸ்லாமிய வரலாறு ஸயீது (ரழி) போன்ற பல உதாரணங்களைக் கண்டிருக்கிறது. “அதான்’ சப்தத்தைக் கேட்டவுடன் நபித்தோழர்கள் மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்ற, அவர்களது இல்லங்கள் வெகுதூரமாக இருந்தது அவர்களுக்கு தடையாக அமையவில்லை. அவர்கள் ஜமாஅத் தொழுகைக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார்கள். அவர்கள் மஸ்ஜிதுக்குச் செல்லும்போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இறைவனிடம் நன்மையாகக் கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்திருந்ததால் மஸ்ஜிதிலிருந்து தங்களது இல்லங்கள் வெகு தொலைவிலிருப்பது குறித்து மகிழ்ச்சி யடைந்தார்கள்.

உபை இப்னு கஅப்(ரழி) அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், “நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!” என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: “நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

தங்களது இல்லங்கள் மஸ்ஜிதிலிருந்து வெகு தூரத்தில் இருப்பதை எண்ணி பள்ளிக்கு அருகிலேயே தங்களது இல்லங்களை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இந்த வெகுமதியை வழங்கினார்கள். பள்ளியை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் அவர்களது செயலேட்டில் எழுதப்படும் என்பதையும், பள்ளியை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட அதிகமான எட்டுக்கள் வீணடிக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்தினார்கள்.

ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஸ்ஜிதுந் நபவியைச் சுற்றியிருந்த இடங்கள் காலியானபோது பனூ ஸலமா குலத்தவர்கள் தங்களது வீடுகளை மஸ்ஜிதுக்கு அருகில் மாற்றிக்கொள்ள விரும்பினார்கள். இது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியவந்தபோது அவர்களிடம், “நீங்கள் மஸ்ஜிதுக்கு அருகில் வீடுகளை மாற்றிக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என கேள்விப்பட்டேனே” என்றார்கள். அவர்கள் “ஆம் இறைத்தூதரே! நாங்கள் விரும்பினோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “பனூ ஸலமாவே! உங்கள் (தற்போதுள்ள) வீடுகளையே ஸ்திரப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களது அடிச்சுவடுகள் எழுதப்படுகின்றன, (தற்போதுள்ள) வீடுகளையே ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள்; உங்களது அடிச்சுவடுகள் எழுதப்படுகின்றன” என்று கூறினார்கள். பனூ ஸலமா குலத்தினர் “மஸ்ஜிதின் அருகே வீடுகளை மாற்றிக் கொள்வதில் எங்களுக்கு விருப்பமில்லை” என்று கூறிவிட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இக்கருத்துள்ள ஹதீஸ் அனஸ் (ரழி) அவர்களின் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டு ஸஹீஹுல் புகாரியில் இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் ஆவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரைவிட மகத்தான நன்மை அடைந்து கொள்வார். (ஸஹீஹுல் புகாரி)

பஜ்ரு மற்றும் இஷா தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதை வலியுறுத்தும் எண்ணற்ற நபிமொழிகள் உள்ளன. அவைகளில் நபி (ஸல்) அவர்கள் இவ்விரு தொழுகையையும் ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர்கள் அடையும் மகத்தான நன்மைகளை விவரித்துள்ளார்கள். அதில் இரண்டை மட்டும் காண்போம்.

1) உஸ்மான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: “இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

2) அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நயவஞ்சகர்களுக்கு பஜ்ரு மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டின் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மறுமை வாழ்வில் மகத்தான வெற்றியை அடைய ஆவல் கொண்ட இறையச்சமுள்ள முஸ்லிம் இரவு பகலில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நபில்கள் தொழுவதைத் தவறவிட மாட்டார். அதிகமாக நபில் தொழுவது அடியானை அல்லாஹ்வின் அருகில் இட்டுச் செல்கிறது. அந்த முஸ்லிமை உயர் அந்தஸ்துக்குக் கொண்டு சென்று இரட்சகனின் நேசத்தையும் திருப்பொருத்தத்தையும் பெற்றுத் தருகிறது. அது உண்மையிலேயே மகத்துவமிக்க உன்னதமான அந்தஸ்தாகும். அந்த நிலையை அடைந்தவரை அல்லாஹ் தனது வல்லமையால் அருளுக்குரியவராக தேர்ந்தெடுக்கிறான். அவரது செவிப்புலனாக, அவரது பார்வையாக, அவரது கரமாக மாறி விடுகிறான். இதற்கு ஹதீஸ் குத்ஸி சான்றளிக்கிறது.

“எனது அடியான் நபில்களின் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே வருகிறான். அவனை நான் நேசிக்கிறேன். அவனை நேசிக்க ஆரம்பித்தால் அவன் கேட்கும் செவியாக, அவன் பார்க்கும் கண்ணாக, அவன் பிடிக்கும் கரமாக, அவன் நடக்கும் காலாக ஆகிவிடுகிறேன். அவன் என்னிடம் எதையேனும் கேட்டால் கொடுக்கிறேன். அவன் தன்னை பாதுகாக்கத் தேடினால் அவனை நான் பாதுகாக்கிறேன்.” (ஸஹீஹுல் புகாரி)

ஒர் அடியானை அல்லாஹ் நேசித்தால் வானம், பூமியில் உள்ளவர்களும் நேசிக்கத் தொடங்குகிறார்கள். இதற்கு அபூஹுரைரா (ரழி) அவர்களின் அறிவிப்பு பொருத்தமாக அமையும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் ஒர் அடியானை நேசித்தால் ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து “நான் இன்ன அடியானை நேசிக்கிறேன்; நீங்களும் நேசிக்க வேண்டும்” என்று கூறுகிறான். அவர் நேசிக்கிறார். பிறகு வானத்தில் உள்ளவர்களை அழைத்து “நிச்சயமாக அல்லாஹ் இம்மனிதரை நேசிக்கிறான்; நீங்களும் நேசம் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார். பின்பு அந்த அங்கீகாரம் பூமிக்கும் இறக்கப்படுகிறது. அவ்வாறே ஒர் அடியானை அல்லாஹ் வெறுத்தால் ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து “நான் இன்ன மனிதனை வெறுக்கிறேன்; நீங்களும் அவனை வெறுத்துவிடுங்கள்” என்று கூறுகிறான். அவர் வெறுப்பை வெளிப்படுத்துகிறார். பிறகு வானத்தில் உள்ளவர்களை அழைத்து “நிச்சயமாக அல்லாஹ் இம்மனிதனை வெறுக்கிறான்; நீங்களும் வெறுத்துவிடுங்கள்!” என்று கூறுகிறார். வானத்தில் உள்ளவர்களும் வெறுக்கிறார்கள். பிறகு அவன் மீதான வெறுப்பு பூமிக்கு இறக்கப்படுகிறது.” (ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தங்களது பாதங்கள் வீங்குமளவு இரவு நேரங்களில் நின்று வணங்கினார்கள். அவர்களிடம் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அது குறித்து “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு தொழுகிறீர்கள்? உங்களது முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டானே” என்று கேட்டபோது “நான் நன்றியுள்ள அடியாராக ஆக வேண்டாமா?” என நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

முஸ்லிம் தனது தொழுகையை அழகிய முறையில் அதன் நிபந்தனைகளைப் பூரணப்படுத்தி நிறைவேற்ற ஆர்வம்கொள்ள வேண்டும். சிந்தனைகள் சிதறி மனம் குழம்பிய நிலையில் நிற்பது, உட்காருவது, அசைவது போன்ற செயல்கள் மட்டுமே தொழுகை அல்ல. முஸ்லிம் தொழுகையை முடித்தவுடன் உலகின் பொருளை அதிகமதிகம் தேடும் வேட்கையில் பள்ளியிலிருந்து விரண்டு வெளியேறிச் சென்றுவிடக்கூடாது. மாறாக, தொழுகைக்குப் பின் பரிசுத்த நபிமொழி வலியுறுத்தும் தஸ்பீஹ், திக்ரு மற்றும் பாவமன்னிப்புக் கோருவதில் ஈடுபடவேண்டும்.

தொழுகைக்குப் பின் இதயத்தின் ஆழத்தில் எழும் இறை அச்சத்துடன் இம்மை மறுமை நலன்களை அருளுமாறும் தனது செயல்களைச் சீராக்கும்படியும் அனைத்தையும் அறிந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். அப்போதுதான் அந்தத் தொழுகை, ஆன்மா பரிசுத்தமாவதற்கும் இதயம் மென்மை பெறவும் காரணமாக அமையும். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எனது கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்கிறது.” (ஸுனனுன் நஸய்யி)

இறையச்சமுள்ள தொழுகையாளிகள் அபயமளிக்கும் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்குத் துன்பம் எற்பட்டால் திடுக்கிடவோ, நன்மைகளை அடைந்தால் தடுத்து வைத்துக் கொள்ளவோ மாட்டார்கள். இதையே பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது.

மெய்யாகவே மனிதன் பதட்டக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். ஏனென்றால் அவனை ஒரு தீங்கு அடைந்தால் (திடுக்கிட்டு) நடுங்குகிறான். அவனை யாதொரு நன்மை அடைந்தாலோ அதனை(ப் பிறருக்கும் பகிர்ந்தளிக்காது) தடுத்துக் கொள்கிறான். அயினும் தொழுகையாளிகளைத் தவிர. (அல்குர்அன் 70:19-22)

முன்னோர்கள் யார்?

முன்னோர்களின் பக்தியில் மூழ்கியிருந்த மக்கள் அல்லாஹ்வின் தூதர்களிடம் தெரிவித்த மறுப்பு!

”எங்கள் முன்னோர்கள் எதில் இருக்க கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்புவதற்காகவும் இப்பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் எங்களிடம் வந்திருக்கிறீர்களா? நாங்கள் உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்கள் அல்ல என்று கூறினார்கள்। (அல்குர்ஆன்: 10:78)

முன்னோர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுதலே உண்மையை மறுக்க மனிதனை தூண்டுகிறது!

இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள் என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. உங்கள் முன்னோர்களை எதில் கண்டீர்களோ அதைவிட நேர்வழியை நான் கொண்டு வந்தாலுமா? எனக் கேட்பீராக! எதனுடன் நீங்கள் அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே என்று அவர்கள் கூறினர்.(அல்குர்ஆன்: 43:23-24)

சிலை வணக்கம் முன்னோர், மூதாதையர்களின் தெளிவான வழிகேடு!

”நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன? என்று அவர் (இப்றாஹீம்) தமது தந்தையிடமும் தமது சமுதாயத்திடமும் கேட்டபோது ‘எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம் என்று அவர்கள் கூறினர். நீங்களும் உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார்.(அல்குர்ஆன்: 21:52-54)

மூதாதையர்களின் மீதான பக்தியே மனிதனை நாசப்படுகுழியில் வீழ்த்துகிறது!

”அல்லாஹ் அருளியதை (குர்ஆனை) நோக்கி வாருங்கள். இத்தூதரை (முஹம்மது நபியை) நோக்கி வாருங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும் நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (அல்குர்ஆன்: 5:104)

மனிதன் பின்பற்றத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமும், தூதரின் நடைமுறையுமே!

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவீர்கள்?) (அல்குர்ஆன்: 31:21)

முன்னோர்களின் வழிமுறையை விட மாட்டோம் என் அடம்பிடித்தால்….?

”அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதர் (முஹம்மது நபி)க்கு கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? எனக் கூறுவார்கள். எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர் எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையை அளிப்பாயாக அவர்களை மிகப் பெரிய அளவுக்கு சபிப்பாயாக எனவும் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 33:66-68)

முன்னோர்கள் யார்?
“பெரியார்கள், முன்னோர்கள்” என்ற வாதத்தில் உள்ள இன்னொரு போலித்தனத்தையுயம் நாம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

“முன்னோர்கள், பெரியார்கள்” என்று கூறுபவர்கள், முன்னோர்கள், பெரியார்கள் என்று குறிப்பிடுவது, நமக்கு 200,300 ஆண்டுகளுக்கு முன் வாழந்தவர்களைத்தான்; சென்ற இதழில் நாம் அடையாளம் காட்டியிருந்தவர்களைத்தான் இவர்கள் முன்னோர், பெரியார் என்று நம்புகின்றனர்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் பாடம் பெற்று, அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்ட “மிகச் சிறந்த சமுதாயம்” என்று நபி(ஸல்) அவர்களால் பாராட்டப் பெற்ற “ஸஹாபாக்கள்” இவர்கள் அகராதியில் முன்னோர்கள் அல்லர். மிகச் சிறந்த ஆட்சியை இந்த உலகுக்குத் தந்த “நாற்பெரும் கலீபாக்கள்” இவர்கள் அகராதியில் பெரியார்கள் அல்லர். ‘ஹஜ்ரத்’ என்று பெயர் பெற்ற சிலரும், ‘அப்பா’க்களும், ‘லெப்பை’மாரும் தான் இவர்கள் கண்ணோட்டத்தில் முன்னோர்கள்! 200,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களை “முன்னோர் பெரியோர்” என்று துதிப்பாடும் இவர்கள் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபி(ஸல்) அவர்களின் நல்லறத் தோழர்களை ‘முன்னோர். பெரியோர்’ என்று ஆதாரம் காட்டத் தயாராக இல்லை. காரணம், இது போன்ற “பித்அத்”களுக்கு ஸஹாபாக்களின் நடைமுறையில் இவர்களால் ஆதாரம் காட்டவே முடியாது.

அந்த நபித் தோழர்களிடையே கருத்து வேறுபாடு தோன்றி இருக்குமேயானால் எவரது கருத்து, குர்ஆன், ஹதீஸைத் தழுவி நிற்கின்றதோ அதனையே நாம் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம் என்று இருக்க 200, 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவது எப்படி நியாயமாகும்?

இன்றோ, அந்த ஸஹாபாக்கள் முன்மாதிரியாகக் கொள்ளப்படவில்லை. அதற்கு அடுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் கூட முன் மாதிரிகளாகக் கொள்ளப்படவில்லை, எந்தக் காலத்தில் மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றும், மோசடியும், மூட நம்பிக்கைகளும், போலிச் சடங்குகளும், பொய்யான கதைகளும் உருவாக்கப்பட்டனவோ, அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களை – இத்தனைக்கும் காரணகர்த்தர்களை – இவர்கள் பெரியார்கள் என்று முத்திரை குத்திக் கொண்டாடுகின்றனர், அவர்கள் வழியே, மார்க்கம் என்று எண்ணி ஏமாந்து கொண்டிருக்கின்றனர். இதுதான் மிகப் பெரும் வழிகேடாகும். இத்தகைய தவறான போக்கிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றட்டும்!

12/10/2011

முஹர்ரம் பத்தாம் நாள்


முஹர்ரம் பத்தாம் நாள்

ரமலானை நினைவு படுத்தும் பதிவுகள்

ஆஷுரா நோன்பு

அல்லாஹ்வின் உதவியால் முஹர்ரம் ஒன்பது மற்றும் பத்தாம் நாள்
நோன்புக்காக நமது பள்ளியில் நோன்பு கஞ்சி வினியோகிக்கப்பட்டது.
சில சகோதரர்கள் சுமார் இருபதுக்கும் குறையாமல் பள்ளியில் நோன்பு திறந்தனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

12/06/2011

முஹர்ரம் மாத கேள்விகள்

பரிசுப்போட்டி எண் - 5

1) ஆஷுரா நோன்பின் நண்மைகள் என்ன?
2) முஹர்ரம் பத்தாம் நாள் சொல்லும்
வரலாற்று செய்தி என்ன?
3) மழை சம்பந்தமான இறைவசனம் என்ன?
4) விடியும் பொழுது என்ன பிரார்த்தனை
<துஆ >செய்யவேன்டும்?
5) நிஸ்வா என்ற நகரம் எந்த நாட்டில் உள்ளது?

பரிசுக்கான விடைகளை
எதிர்வரும் 25/12/2011 ம் தேதிக்குள்
அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விடைகள் எழுதும் போது
மறவாமல் உங்கள் இல்லம் முகவரியும்
சேர்த்து அனுப்பவும்.

துல்ஹஜ் மாத பரிசுப்போட்டி

துல்ஹஜ் மாத பரிசுப்போட்டிக்கான விடைகள்

பரிசு பெற்றவர்கள் விபரங்கள்

சரியான விடை எழுதி பரிசு பெற்றவர்கள்

1)ஹபீபுல்லாஹ் துபாய்
2)தாஜ்தீன் துபாய்

பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள்.

இவர்களுக்கான பரிசுகள்

காலக்கிரமத்தில் அவர்கள் இல்லங்களில் சேர்க்கப்படும்.

11/29/2011

பள்ளியில் ஒலிக்கும் பாங்கோசை

அழைப்புப் பணியில்...

சில வருடங்களுக்கு முன்
நாம் வீடுகளில் அஸர் முதல் மஹ்ரிப் வரை
அல்லது மஹ்ரிப் முதல் இஷா வரை
மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டு இருந்தோம்.
இடையில் சில காலங்கள் நடத்தவில்லை.
மீண்டும் அழைப்புப்பணிகள்

சென்றவாரம் முதன் முதலாக சகோ பீர் முகம்மது இல்லத்தில்
சொற்பொழிவு நடத்தினோம்.

அதில் ஆண்களும் பெண்களும் கலந்துக்கொண்டனர்.
அது போல இந்த வாரமும் சூர்யதோட்டத்தில்
சகோ ராவுத்தர்ஷா வீட்டில் நடந்தது.
ஏராளனமான பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
ஆண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வார ஜும்மா மேடை

நமது பள்ளியில் இடையில் குத்பா உரைக்காக
யாராவது ஒருவரை அழைத்து உரையாற்றுவது வழக்கம்.
அது போல் சென்ற வார ஜும்மா உரையை
நமது வழக்கறிஞர் அஷ்ரப் அலி அவர்கள் ஆற்றினார்கள்.
முதலாவது குத்பா உரையில்
நமது சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தி பேசினார்கள்.

இரன்டாவது குத்பா உரையில்
சட்ட சம்பந்தமான சில கருத்துக்களை சொன்னார்கள்.

வழக்கம்போல பள்ளியில்
ஆண்கள் மற்றும் இல்லாமல்
ஏராளனமான பெண்களும் இருந்தனர்.
ஜும்மா உரை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.
இதன் வீடியோ பதிவு விரைவில்
பதிவேற்றம் செய்யப்படும்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

மின் மாற்றி



நமதூரில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
இது அன்றாடம் நமக்கு பழக்கமாகி விட்டது.
பள்ளியில் இது போல மின் தடை ஏற்படும் போது
அதனால் பல சிரமங்கள் ஏற்பட்டது.
அதற்காக சில தினங்கள் முன் மின் மாற்றியாக பேட்டரி வசதி பொருத்தப்பட்டுள்ளது.
இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் அல்லாஹ்
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் தருவானாக! ஆமின்.

11/24/2011

இறைவனின் அருட்கொடை


பெருமழைக்காலம்

விரைவில் வெளிவருகிறது

அன்பானவர்களே

நமது காலண்டர் வருடா வருடம்
ஆங்கில வருடத்தின் இறுதியில் வரும்
என்பது நாம் அனைவரும் அறிந்ததே
அதுபோல இந்த வருடத்தில் காலண்டர்
இன்ஷால்லாஹ் விரைவில் வர இருக்கிறது.
அதற்கான பணிகள் நடந்து வருகிறது.


அழகிய வடிவில் அமைக்கப்பட்டு
அதில் இஸ்லாமிய சிந்தனைகள்
ஆதாரப்பூர்வமாக தொகுக்கப்பட்டது சிறப்பம்சம்.

இன்ஷால்லாஹ் விரைவில் உங்கள் பார்வைக்கு....

அன்பான வாசகர்களே!

நமது வலைத்தளத்தில் மாதாமாதம்
நடைபெறும் மார்க்க வினா விடையில்
பரிசு பெற்றவர்களின் பரிசுகள்
அவர்கள் இல்லங்களில் சேர்க்கப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே!



சகோ அப்துல் ஸலாம் மஸ்தூக்கா அவர்கள்
நமது அருகாமை ஊரான திருப்பந்துருத்தியை சேர்ந்தவர்கள்
அவருக்கான பரிசு துரித தபால் சேவை மூலம் அனுப்பப்பட்டது.


வாசகர்கள் பதில் அனுப்பும்போது
மறவாமல் உங்கள் வீட்டு முகவரியையும்
சேர்த்து அனுப்பவும்.
வெளியூர் வாசகர்கள்
தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணையும் சேர்த்து அனுப்பவும்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

11/21/2011

site map

அன்பான சகோதர சகோதரிகளே!


நமது வலைத்தளத்தில் வலது பக்கத்தில்
சில இனைப்புகள் உள்ளது. அதில் உள்ள சில முக்கிய
இனைப்புகளைப் பற்றி இங்கு அவசியம் சொல்ல வேண்டும்.
முதலாவதாக மொழி மாற்றம்

அதாவது நமது வலைத்தளம் முழுவதும் தமிழில் இருந்தாலும்
மொழி மாற்றம் பயன் படுத்தி அன்னிய மொழிகளில் படிக்கலாம்.
மேலும் தாங்கள் அலுவலகத்தில் சில வேற்று மொழி நண்பர்கள் இருப்பார்கள்.
அவர்களிடம் வலைத்தளம் அறிமுகப்படுத்தும்போது அவர்கள் தாய்மொழியில் வாசிக்கச்சொல்லும்போது
இன்னும் அதிகம் பயன்பெறுவார்கள். நாம் சொல்வது இறைச்செய்திகளை
இது எல்லா மக்களுக்கும் சென்றடையவேண்டும் என்பது நமது எண்ணம்.
எனவே மொழி மாற்றத்தை உபயோகப்படுத்துங்கள்.
Google Transalation Available

11/17/2011

குழந்தைகள் தினம்

நமது அர் ரஹ்மான் பள்ளியில்


குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



அதன் சில பதிவுகள் உங்களுக்காக...

11/10/2011

துல்காதா மாத பரிசுப்போட்டியில்

துல்காதா மாத பரிசுப்போட்டியில்
பரிசு வென்றவர்கள்

சரியான விடை எழுதியவர்களில்
குலுக்கல் முறையில் பரிசு வென்றவர்கள்

1) ஹபீபுல்லாஹ் துபாய்
2) உம்மு சமீஹா
3) அப்துல் ஸலாம் மஸ்தூக்கா
இவர்களுக்கான பரிசு பொதிகள் காலக்கிரமத்தில்
அவர்களின் இல்லங்களில் சேர்க்கப்படும்.

சரியான விடையை எழுதியவர்கள்

1) ஹபீபுல்லாஹ் துபாய்
2) உம்மு சமீஹா
3) அப்துல் ஸலாம் மஸ்தூக்கா
4) அஹமது முஸ்தபா மதுக்கூர்
5) முகமது பாதில் சென்னை

உம்மு ஸமீஹா தனது
வீட்டில் முகவரியை
மின்னஞ்சல் செய்யவும்.

தாருஸ் ஸலாம் என்ற நகரம்
இருக்கும் நாடு என பலரும் தான்சானியா எழுதி இருந்தீர்கள்.
அதே பெயரில் புருனேயிலும் ஒரு நகரம் இருக்கிறது.
அதை யாரும் எழுதவில்லை.

துல்கதா மாத பரிசுப் போட்டி- விடை

1) குர் ஆனில் கூறப்பட்ட நபிமார்கள் எத்தனை பேர்?

விடை: 25 பேர்
மனித சமுதாயத்தை நேர் வழிப் படுத்த ஏராளமான இறைத் தூதர்கள் இவ்வுலகில் அவதரித்தனர் என்றாலும் அவர்களில் 25 இறைத் தூதர்களிக் பெயர்கள் மட்டுமே திருக் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.
1. ஆதம் அலைஹிஸ்ஸலாம்
2. நூஹ் அலைஹிஸ்ஸலாம்
3. இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்
4. இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம்
5. இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம்;
6. இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம்
7. இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம்
8. அய்யூப் அலைஹிஸ்ஸலாம்
9. அல்யஸஃ அiஹிஸ்ஸலாம்
10 யூசூஃப் அலைஹிஸ்ஸலாம்
11. யூனூஸ் அலைஹிஸ்ஸலாம்
12. தாவூத் அலைஹிஸ்ஸலாம்
13. சுலைமான் அலைஹிஸ்ஸலாம்
14. மூஸா அலைஹிஸ்ஸலாம்
15. ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்
16 யஹ்யா அலைஹிஸ்ஸலாம்
17. ஜக்கரியா அலைஹிஸ்ஸலாம்
18 யஃகூப் அலைஹிஸ்ஸலாம்
19. லூத் அலைஹிஸ்ஸலாம்
20. ஹுத் அலைஹிஸ்ஸலாம்
21. ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம்
22. ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்
23. துல் கிப்ல்அலைஹிஸ்ஸலாம்
24. ஈஸாஅலைஹிஸ்ஸலாம்
25. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
-------------------------------

2) குர் ஆனில் பெயர் வரும் பறவையின் பெயர் என்ன?
விடை: ஹுது ஹுது
27:20

அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து "நான் (இங்கே) ஹுது ஹுது(ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?" என்று கூறினார்.


3) மதீனாவின் பழைய பெயர் என்ன?
விடை:


யத்ரிப் என்னும் அழகிய மதினா


-------------------------------------------------------
4) ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்க்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன?
விடை

பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1240
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

--------------------------------------------------

5) தாருஸ் ஸலாம் என்ற நகரம் இருக்கும் நாடு எது?

விடை: தான்சானியா

11/08/2011

ஹஜ்ஜூப் பெரு நாள்

ஹஜ்ஜூப் பெரு நாள் வாழ்த்துக்கள்


அன்பான சகோதர,சகோதரிகளே!

நமது முக்கிய பெருநாளில் ஒன்றான
ஹஜ்ஜூப் பெரு நாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை 7.15மணிக்கு தொழுகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு
தொழுகை பத்து நிமிடம் தாமதமாக தொழுகை வைக்கப்பட்டது.
தொழுகைக்குப்பின் சிறப்பு சொற்பொழிவான குத்பா உரை
சுமார் பத்து நிமிடம் நடந்தது. தொழுகையையும், குத்பா உரையையும்
நமது முனிர் ஸலாஹி அவர்கள் நடத்தினார்கள்.






குத்பா உரையில்
நல்ல பல நாயகம் (ஸல்) ஆற்றிய
உரையில் இருந்து எடுத்து சொற்பொழிவாற்றினார்.
நமது பள்ளி வளாகம் திடல் முழுவதும்
நிறைந்து இருந்தது. வானம் மழை இல்லாமல் இருந்ததால்
தொழுகை சிறப்பாக இருந்தது.
பெண்களும் ஆர்வமாக குழந்தைகளுடன்
தொழுகையில் பங்கேற்றனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே!




தஷ்ரீக்குடைய நாட்கள்

துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13 ஆகிய நாட்களில்
நோன்பு நோற்கக்கூடாது. இந் நாட்களும் பெருனாளைப்போன்று
மகிழ்வோடு இருக்க வேண்டிய நாட்களாகும்.
'தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11,12,13) சாப்பிடுவதற்கும்
குடிப்பதற்கும், அல்லாஹ்வை நினைவு கூர்வதற்கும் உரிய நாட்களாகும்'
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : நுபைஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (ஹதீஸ் எண்: 2099)

ஹஜ்ஜூப் பெரு நாள் வாழ்த்துக்கள்









11/03/2011

துல்ஹஜ் மாத பரிசுப்போட்டி

பரிசுப்போட்டி எண் -4

1) பாங்கு இகாமத் இல்லாத தொழுகைகள் எது?

2) நாயகம்(ஸல்) அவர்கள் எத்தனை ஹஜ் செய்தார்கள்?

3) மக்கா மதீனா பள்ளிவாசல்களில் தொழுவதின் சிறப்பு என்ன?

4) நாயகம் (ஸல்) ஹஜ் செய்த போது இஹ்ராம் அணிந்த இடத்தின் பெயர் என்ன?

5) ஹஜ் செய்வது சம்பந்தமான குர் ஆன் வசனம் என்ன?


கேள்விக்கான விடைகளை எதிர்வரும்
27/11/2011க்குள் அனுப்பவும்
பதில்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

'mkranwar@gmail.com'

<இந்த மாதம் பதில் எழுதும் போது
மறவாமல் பரிசுப்போட்டி எண் 4 என குறிப்பிடவும்.>

வருகைக்கு நன்றி

அன்பான வாசகர்களே
நமது வலைத்தளத்தில்
வரும் வாசகர்களின் எண்ணிக்கை 8000த்தை தாண்டியது.
எல்லா புகழும் இறைவனுக்கே!

இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வாசகர்கள்
வருகை வர புதிய ஏற்பாடுகள் எண்ணங்களில்..
இப்போது மாதாமாதம் நடைபெறும் பரிசுப்போட்டிகளில்
நமது வாசகர்களில் சிலர் பங்கு பெறுகின்றனர்.
பரிசு சின்னது தானே என நினைக்காமல்
ஆர்வர் உள்ள அனைவரும் பங்கு பெற வேண்டும் என்பது நமது ஆவல்.

வருகை பதிவுகள்
முதல் பத்து இடங்களில் இடம் பெறும் நாடுகள்

1) அமீரகம்
2) இந்தியா
3) கத்தார்
4) அமெரிக்கா
5) சவுதியா
6) இலங்கை
7) தைவான்
8) குவைத
9) பிரான்ஸ்
10) சிங்கப்பூர்

10/31/2011

மேலும் சில பதிவுகள்







பரிசளிப்பு நிகழ்ச்சி




எல்லா புகழும் இறைவனுக்கே!

சனிக்கிழமை மாலை நமது பள்ளியில்
ரமலான் மாதம் நடந்த இஸ்லாமிய கேள்வி பதில்
நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
அஸர் தொழுகைக்குப்பின் நல்ல மழை என்பதால்
கூட்டம் தாமதமாகத்தான் வந்தது.

தலைமையை தலைவர் யாக்கூப் அத்தா அவர்கள் நடத்த
சகோதரர் முஸ்தபா அவர்கள் இறைமறையை ஓதி விளக்கம் அளித்தார்.
அதன் பின் சிறப்புரையை நமது பள்ளி இமாம் ஆஷிக் பிர்தெளசி அவர்கள் ஆற்றினார்கள்




விழாவில் ஆண்களுக்கான முதல் மூன்று பரிசுகள்
பெண்களுக்கான முதல் மூன்று பரிசுகள்
என கொடுத்து அதற்கு பின்
ஆறுதல் பரிசுகள், மற்றும் தினமும் கலந்துக்கொண்டவர்கள்
என பரிசுகள் வழங்கப்பட்டது.
வந்த அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது.
இறுதியில் சகோ.காஸிம் நன்றியுரை ஆற்றினார்கள்.

10/28/2011

Arafat Day on Nov. 5

Arafat Day on Nov. 5

By ARAB NEWS
Published: Oct 28, 2011 01:53 Updated: Oct 28, 2011 01:53

JEDDAH: The Arafat Day, when pilgrims stand in prayer in the plain of Arafat during Haj, will be on Saturday, Nov. 5, while Eid Al-Adha will be celebrated in the Kingdom on Sunday, the Supreme Court announced.

“It has been confirmed that the first day of Dul Hijjah is on Friday, Oct. 28 as the new crescent was sighted by a number of people on Thursday evening,” the court said.

Eid Al Adha begins on November 6

Dubai: Saudi Arabia Thursday announced
the start of the month of Dhu Al Hijja
today and that Eid Al Adha (The Feast of Sacrifice) will fall on November 6 corresponding to the 10th day of Dhu Al Hijja.
Eid Al Adha marks the end of the main Haj ritual
which is the Day of Waqfa (Standing at Mountain of Arafat in Makkah)
on the 9th day of Dhu Al Hijja.
In the UAE, government departments,
schools and universities will enjoy
a holiday for a whole week, starting from November 5.
Three-day holiday

நன்றி : கல்ப் நியூஸ்

குர்பானி கொடுக்க விரும்புபவர்களுக்கு

அன்பானவர்களே

நமது பள்ளியின் சார்பில்
வருடந்தோறும் கூட்டுக்குர்பானி
கொடுத்து வருவது தாங்கள் அறிந்ததே...

அதே போல் இந்த வருடமும் இன்ஷால்லாஹ்
அதற்கான முயற்சிகளில் இருக்கிறோம்.
கூட்டுக்குர்பானி கொடுக்க விரும்புபவர்கள்
நமது நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும்.

இதற்காக நபர் ஒன்றுக்கு irs 900.00 ஆகும்.

“குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும், உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது”. (22:37)
அன்பானவர்களே

ரமலான் மாதம் நடந்த பரிசுப்போட்டியில்
பரிசுகளை வென்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி
இன்ஷால்லாஹ் நாளை மாலை அஸர் தொழுகைக்குப்பின்
நமது பள்ளியில் நடைபெற இருக்கிறது.

பரிசுகளை வென்றவர்கள் மட்டுமல்லாமல்
அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

10/17/2011

இஸ்லாமிய கல்வி பயிலும் மாணவிகளுக்கு

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயங்கி வரும்
தாருல் ஸலாம் மகளிர் கல்லூரியில்
ஆலிமாக்கள் சேர்க்கை வகுப்பு
இப்போது நடைபெறுகிறது.

படிப்பு விபரங்கள் :

1 வருடம் தீனியாத் வகுப்புகள்
3 வருடம் ஆலிமா படிப்பு

ஹாஸ்டல் வசதி உள்ளது.

தொடர்புக்கு ;

தாருல் ஸலாம் மகளிர் இஸ்லாமிய கல்லூரி
108/48 ஆலடி ரோடு விருத்தாசலம்
+91 99424 42472

10/15/2011

அன்பான சகோதரர்களே

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நமது வலைத்தளத்தில்
மாதந்தோறும் கேள்வி பதில் நிகழ்ச்சி
நடைபெறுவது தாங்கள் அறிந்ததே..
இதற்கான பதில்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
'mkranwar@gmail.com'
வேறு எந்த முகவரிக்கி அனுப்பினால் அதற்கு நாம் பொறுப்பல்ல.

மேலும் சென்ற மாதம் பரிசு பெற்றவர்களுக்கு இன்று அவர்களது
இல்லங்களில் பரிசுகள் சென்றடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இன்னும் அதிகமான நபர்கள் பங்கேற்க வேண்டும் என்பது நமது எண்ணம்.
இந்த மாதம் முதல் சரியான விடை எழுதிய அனைவரின்
பெயர்கள் தருகிறோம். ஆனால்,குலுக்கல் முறையில் மூன்று நபருக்கு மட்டுமே
பரிசுகள் என்பதை நினைவு படுத்துகிறோம்.

10/13/2011

அர் ரஹ்மான் செய்திகள்


எல்லா புகழும் இறைவனுக்கே!

நமது அர் ரஹ்மான் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் உதவியால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நமது இடம் போதாது என்பதால்
A.K.S.மண்டபத்தில் ஏற்பாடு செய்து இருந்தோம்.
காலை பத்து மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கியது.
முதல் நிகழ்ச்சியாக பெற்றோர்கள் தமது பிள்ளையின் ஆசிரியைகளை
சந்தித்து உறவாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிகளை ஆசிரியை பானு தொகுத்து வழங்கினார்.
முதலில் கிரா அத் நமது அரபி ஆசிரியர் ஆஷிக் அகமது அவர்கள் ஓதினார்கள்.
அதைத் தொடர்ந்து சிறிய உரையும் இருந்தது.
குர் ஆன் ஓதும்போது, சிறிய உரையிலும்
கல்வியின் அவசியத்தை உணர்த்தி உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து ஆசிரியை விமலா அவர்கள்
வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
தலைமை உரையை தாளாளர் சகோ.காசிம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
அதன்பின் கலந்தாய்வு நடந்தது.
இதில் பெற்றோர்களிடம் புகார்கள் கேட்கப்பட்டு
அதற்கு நமது முதல்வர் அவர்கள் தெளிவாக பதில்கள் சொன்னார்கள்.



நிகழ்ச்சிகள் காலை பத்துமணிக்கு துவங்கி
மத்யம் நிறைவுற்றது. நிகழ்ச்சிக்காக பெற்றோர்கள்
அனைவரும் வந்து இருந்தனர்.
மண்டபம் முழுவதும் நிரம்பி இருந்தது.
வந்த பெற்றோர்களுக்கு விருந்தோம்பலாக
தேனீர் மற்றும் காரம் + இனிப்பு பொட்டலங்கள் வழங்கப்பட்டது
இறுதியாக நன்றியுரை ஆசிரியை கார்த்திகா அவர்கள் சொன்னார்கள்.

10/11/2011

நபி மொழி குளிப்பு கடமை

துல்கதா மாத பரிசுப் போட்டி

1) குர் ஆனில் கூறப்பட்ட நபிமார்கள் எத்தனை பேர்?
2) குர் ஆனில் பெயர் வரும் பறவையின் பெயர் என்ன?
3) மதீனாவின் பழைய பெயர் என்ன?
4) ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்க்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன?
5) தாருஸ் ஸலாம் என்ற நகரம் இருக்கும் நாடு எது?

சரியான விடைகளை இன்ஷால்லாஹ்
எதிர் வரும் 29.10.2011 க்குள்
'mkranwar@gmail.com'
இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

10/06/2011

ரமலான் மாத இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி

அன்பான வாசகர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!

ரமலான் மாதம் முழுவதும் நமது பள்ளியில் நடைபெற்ற
ரமலான் மாத இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியில்
பரிசுகளை வென்றவர்கள் பெயர்கள்.

முதல் மூன்று பரிசுகளை வென்றவர்கள் ஆண்கள் MARKS

1)S.A. MOHAMED IRFAN S/O AHAMED FARIS 265 1/2

2) MUFITH AHAMED M.KADER MYDEEN 264

3)MOHAMED FADIL ABDUL KASIM 262


முதல் மூன்று பரிசுகளை வென்றவர்கள் பெண்கள்
1) B.SHAHANA BEGUM 255 1/2
U.BASHEER AHMED
2)A.AJRAN ALIMA 255
AKBAR ALI
3)M.MARIYAM 254 1/2
S.MOHAMED MOHAIDEEN



ஆறுதல் பரிசுகள்
1)MOHAMED SHAKIR 246 1/2
S/O ADAM MALIK
2) MUJIBUR RAHMAN 243
S/O SHAIK DAWOOD
3) ABDUL AHLAM 241
S/O ABDUL WAHAB
4)ABDUL BASITH 241
S/O SHAIK DAWOOD
5) NIZAR AHMED 239
S/O MOHAMED IQBAL
6) B.FARZANA BARVEEN 249
ABDUL HAMEED
7) JENIRA 250 1/2
D/O ABDUL KAREEM
8)NAJIHA SHEREEN 245 1/2
D/O ABDUL KAREEM
9)FATHIMA SHIFA 242 1/2
D/O KAMALUDEEN
10)MEHAR NIZA 246
W/O SAYED
11)RAHMATH NIZA 251
W/O SHAIK FAREED
12) RAHIMA FARVEEN 251
D/O A.RAFEEK
13) SAMEEHA 244
D/O ABDUL KAREEM
14) SUWATH 244 1/2
NAJMUDEEN
15)LUBNA BEGAM 247
D/O ABDUL LATHEEF
16) BADR NISHA 249 1/2
W/O SHAIK DAWOOD
17) SAHIMA 253
W/O NIZAR
18) THASNEEM FIRDOUS 249
ABDUL KADER
19)FATHIMA SHIFIYA 248 1/2
MOHAMED YOUNUS
20)JOHARA SAFANA 241
NAGOOR PICHAI
21) THAHSIN BEGUM 240
ABDUL FAREED
22)SHAMEEMA BANU 240 1/2
W/O NAJMUDEEN
23) NOOR NISHA 238 1/2
SHAIK DAWOOD
24)MAHBOOB NACHIYA 237 1/2
SHAIK DAWOOD


தினம் தவறாமல் கலந்துக்கொண்டவர்கள்

1) BALKEES BEEVI D/O UMAR ALI
2) DIHANA D/O USMAN ALI
3) KAMILA BEEVI D/O BAVA BAHRUDEEN
4) SABRIN MARYAM D/O HUSSAIN
5) ASIKA D/O HITHAYATHULLAH
6) RAMEEZ RANI D/O SHAIK DAWOOD
7) SHAHUL HAMEED S/O ABDUL WAHAB

இன்ஷால்லாஹ் இவர்களுக்கான பரிசுகள்

இன்னும் சில தினங்களில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து

பரிசுகள் வழங்கப்படும்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

பரிசுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

10/04/2011

ஷவ்வால் மாத பரிசுப்போட்டி

அன்பான வாசகர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

1>திருக்குர் ஆனில் இடம் பெற்ற கிழமைகள் என்ன? என்ன?

வெள்ளி,சனி

2> தயம்மும் செய்து கொள்ள அனுமதி வழங்குகிற வசனம் எது?

04:43 & 05:06

4:43. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி “தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

5:6. முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.


3> ஷவ்வால் மாத நோன்பு சம்பந்தமான நபிமொழி என்ன?
யார் ரமளான் மாத நோன்பிற்குப் பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

4> நாயகம் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் எத்தனை பேர்?
பதிமூன்று (13 or 11)

5>ஸிஹாஹ் ஸித்தா என்றால் என்ன?

பற்பல ஹதீஸ் தொகுப்புகள் தொகுக்கப்பட்டாலும் முஸ்லிம்களிடையே இன்று ஆறு நூல்கள் “உண்மையான ஆறு ஹதீஸ் நூல்களின் தொகுப்பு எனக் கருதப்பட்டு “ஸிஹாஹ் ஸித்தா” என்ற பெயரில் விளங்கி வருகின்றன. இந்த ஆறு ஹதீஸ் நூல்கள் ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் நஸயீ, ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதீ, ஸுனன் இப்னுமாஜ்ஜா என்பவனாக வரிசைப்படுத்தப்படுகின்றன.


ஷவ்வால் மாத பரிசுப் போட்டிக்கான
வாசகர்களின் பதில்களில்
சரியான பதில்களை அனுப்பிய
வாசகர்களின் பெயர்கள் மட்டும்
குலுக்கல் முறையில் மூன்று பெயர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

பரிசுகளை வென்றவர்கள்

1) ஹபீபுல்லாஹ் துபாய்
2) முகமது பாதில் சென்னை
3) சிராஜ்தீன் துபாய்

இவர்களுக்கான பரிசுப்பொதிகள்
காலக்கிரமத்தில் அவர்களின் இல்லங்களில் சேர்க்கப்படும்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

9/28/2011

பரிந்துரை (ஷஃபாஅத்) செய்பவர் யார்?

பரிந்துரை அல்லாஹ்வுக்கே சொந்தம் :

1. அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா?

(நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்தாலுமா? பரிந்துரை எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள். (39:43,44)

2. அன்றியும். அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர். (43:86)

3. அவர்களுக்கு, ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. (6:70)

4. (நபியே!) அண்மையில் வரும் (கியாமத்) நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக; இதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக் குழிக்கு வரும் (அவ்) வேளையில் அநியாயக் காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ; அல்லது ஏற்றுக் கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான். (40:18)

5. இன்னும் ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்குச் சிறிதும் பயன்படமுடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக; (அந்நாளில்) எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அதற்காக எந்த பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (2:48,123)

6. அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப் பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா? (32:4)

7. (மறுமையில்) அவனைத் தவிர அவர்களுக்கு பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. (6:51)

8. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே (அல்லாஹ்வுக்கே) உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (2:255)

9. அவன் எவருக்கு அனுமதிக் கொடுக்கிறானோ அவருக்குத் தவிர அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது. (34:23)

10. அவனது அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சி பொருந்திய) அல்லாஹ்வே உங்களைப் படைத்து பரிபக்குவப் படுத்துபவன். (10:3)

பரிந்துரைக்க அனுமதிப் பெறுபவர்கள்.

11. இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த்தகைய)வருக்கின்றி – அவர் (நபி)கள் பரிந்து பேச மாட்டார்கள். இன்னும் அவர்கள் அவன் பால் உள்ளச்சத்தால் நடுங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள். (21:28)

12. அர்-ரஹ்மானிடம் உடன்படிக்கை செய்துக் கொண்டோரைத் தவிர – எவரும் பரிந்துரை செய்ய அதிகாரம் பெற மாட்டார்கள். (19 :87)

13. அந்நாளில் அர்-ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவரது பரிந்துரை (ஷஃபாஅத்து)யும் பயனளிக்காது. (20:109)

14. அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதிக் கொடுக்கிறானோ – அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்த பயனுமளிக்காது. (53:26)

15. …………எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்களாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (இறை அனுமதியுடன் பரிந்து பேசுவர்) (43 : 86)

பாவிகளின் கூற்றும் பிதற்றலும்

16. தங்களுக்கு (யாதொரு) நன்மையோ, தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவர்களை (இணை வைப்போர்) வணங்குகிறார்கள். இன்னும் அவர்கள்;

இவர்கள் எங்களுக்கு அல்லாஹ்விடம் சிபாரிசு செய்பவர்கள் என்றும் கூறுகிறார்கள். (10:18)

17. அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). (39:3)

18. மேலும் (இறுதி) நேரம் நிலைபெறும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழப்பார்கள். அப்போது அவர் இணை வைத்தவர்களில் எவரும் அவர்களுக்காகப் பரிந்து பேசுவதாக இராது; (இணை வைத்த) அவர்களும், தாங்கள் இணை வைத்தவர்களை நிராகரிப்போராகி விடுவார்கள். (30:12,13)

19. அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்; உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமானமுள்ளவராக ஆக்கி வைத்தோம்; (அப்போது) இந்த குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்; ஆகவே எங்களுக்காகப் பரிந்து பேசவோர் (இன்று) எவருமில்லை; அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை. நாங்கள் (உலகத்துக்கு) திரும்பிச் செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் முஃமின் (இறை விசுவாசி)களாகி விடுவோமே. (எனப் பரிதவித்து புலம்புவார்கள்) (26:97-102)

20. குற்றவாளிகளைக் குறித்து-

உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது? (என்று கேட்கப்படும்) அவர்கள் (பதில்) கூறுவார்கள் :

நாங்கள் தொழுகையாளிகளில் நின்றும் இருக்கவில்லை; மேலும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை; (வீணானவற்றில்) மூழ்கிக் கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்; இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்; உறுதியான (மரணம்) எங்களிடம் வரும் வரையில் (இவ்வாறாக இருந்தோம் எனக் கூறுவர்).

ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது. (74:41-48)

21. (மறுமையில் அல்லாஹ் பாவிகளை நோக்கி)

நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுப்போன்று நீங்கள் (ஏதுமின்றி) தனியே எம்மிடம் வந்து விட்டீர்கள்; இன்னும், நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களது கூட்டாளிகள், (என்றும்) உங்களுக்கு பரிந்து பேசுபவர் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்தத் தொடர்பும் அறுந்து விட்டது; உங்கள் நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன. (என்று கூறுவான்) (6:94)

22. நம்பிக்கைக் கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த (இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர்… நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்யுங்கள். (2:254)

23. அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்-ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால் இவர்கள் என்னை (அக்கெடுதியிலிருந்து) விடுவிக்கவும் முடியா! (36:23)

24. எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு பரிந்துரை செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கும் உண்டு; (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு பரிந்துரை செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகம் உண்டு. (4:85)

அல் அஸ்ரு-காலம்

﴿١﴾إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ ﴿٢﴾إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ﴿٣﴾

1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

மனிதன் வயதையெல்லாம் அழிந்துபோகும் பொருளைத் தேடுவதிலும், தன்னை விட்டுப்பிரியும் மனைவி, மக்கள், சுற்றத்தார், சிநேகிதரோடு உல்லாசமாக இருந்து கொண்டு சந்தோச வாழ்க்கை நடத்துவதிலுமே செலவு செய்கிறான். விலை மதிக்க முடியாத ஒவ்வொரு மூச்சையும் இந்த முறையில்தான் வீணாக்குகின்றானே தவிர தான் பிறந்ததின் உண்மை நோக்கத்தைப் பற்றிக் சிறிதுகூட சிந்திப்பது கிடையாது. அவனது நோக்கம் தவறானது என்பதைக் காட்டுவதற்காகவே தான் இந்த சிறிய அத்தியாயம் இறக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில் அவனுடைய தவறான நோக்கமானது முடிவில் பெரும் நஸ்டத்தைத்தான் உண்டாக்கும் என இந்த சிறிய அத்தியாயத்தில் இறைவன் தெளிவுபட கூறுகிறான்.

இறக்கப்பட்ட வரலாறு
கல்தாபின் உஸைத் என்ற நபர் அபூபக்கர் ஸித்தீக் (ரலி)அவர்களின் பழைய நண்பராக இருந்தார். இஸ்லாம் தோன்றிய பின்பு அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள். கல்தா என்பவர் நிராகரிப்பவராகவே இருந்தார்.

ஒருநாள் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களை கண்ட கல்தாபின் உஸைத் ஸித்தீக்கை நோக்கி, அபூபக்கரே! உமது அறிவின் திறமையாலும் சுறுசுறுப்பாலும் வர்த்தகத்தில் பெருத்த லாபத்தைப் பெற்று வந்தீரே! இப்பொழுது உமக்கு என்ன நேர்ந்துவிட்டது? நஷ்டத்தில் வீழ்ந்து விட்டீர்: மேலும் உமது மூதாதையரின் மார்க்கத்தையும் புறக்கணித்து விட்டீர்; லாத், உஜ்ஜா வை வணங்குவதையும் விட்டொழித்து விட்டீர். எனவே, அவற்றின் அன்பையும் இழந்து விட்டீர் எனக் கூறினார்.

கல்தாவின் கடுஞ்சொற்களைச் கேட்ட அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் சத்தியத்தை ஏற்று நற்கிரியைகள் புரிந்து வரும் ஒருவன் எப்பொழுதும் நஷ்டத்தில் விழமாட்டான் என பதிலளித்தார்கள். இதை உறுதிப்படுத்தவே இவ்வத்தியாயத்தை அல்லாஹ் அருளினான்.

அஸ்ரு என்னும் பதத்திற்கு காலம் என்பது பொருள். இவ்விடத்தில் ஒரு மனிதன் இருக்கும் காலம் அதாவது வாழ்நாளைக் குறிக்கிறது. மனிதனுடைய வாழ்நாள் அதிலுள்ள ஒவ்வொரு மூச்சும் விலை மதிக்க முடியாதது . சென்று போன காலத்தை என்ன ஈடு கொடுத்தாலும் திரும்பப் பெறமுடியாது.வாழ்நாள் மிக அருமையானது என்பதை காட்டவே அல்லாஹ் காலத்தின் மீது சத்தியம் செய்து கூறியிருக்கிறான். ஒரு மனிதன் என்ன நோக்கத்திற்காக படைக்கப்பட்டிருக்கின்றானோ அந்த நோக்கத்தை நிறைவேற்றினால் தான் ஈடேற்றம் உண்டு. அவ்வாறு இல்லாதவரை அவன் நஷ்டமடைந்தவன் தான். இந்த நஷ்டத்தை விட்டுத் தப்பவேண்டுமானால், ஈமான் (நம்பிக்கை) கொண்டு நற்கருமங்களை செய்து பிறரும் நற்கருமங்களைச் செய்யும்படி தூண்டவேண்டும்.

ஈமான்: அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய உண்மையான இலட்சணங்களைப் பற்றியும் மறுமையைப் பற்றியும் அவன் அனுப்பிய நபிமார்களைப் பற்றியும் பூரணமாக நம்பிக்கை கொள்வதே ஈமானாகும். நற்கருமங்கள்: என்ற பதம் விரிவான பொருள் தரக்கூடியது. அல்லாஹ்வை மனதால் தியானிப்பது, நாவல் துதிப்பது, சரீரத்தால் வணங்குவது, பொருளினால் அவன் கட்டளைப்படி தருமம் செய்வது, பிறருக்கு உபகாரம் செய்வது, படைப்புகளின்மீது இரக்கம் காட்டுவது பெற்றோருக்கு பணிவிடை செய்வது, நீதியும் நேர்மையும் நிலைக்க பாடுபடுவது, ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும் உழைப்பது ஆகிய இவையெல்லாம் நற்கருமங்களில் சேர்ந்தவையாகும்.

தான் எதை நன்மையென்றும் உண்மையென்றும் உணர்ந்திருக்கின்றானோ அதை தன்னோடு மட்டும் வைத்துக் கொள்ளாமல் பிறருக்கும் போதித்து அந்த உண்மையின் பக்கம் கொண்டு வர பாடு படவேண்டும். அதற்கு எதிர்ப்பிருந்த போதிலும் பொருமையுடன் சகித்துக் கொண்டு லட்சியத்தை கைவிடாமல் அது மக்களின் மத்தியில் பரவ முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் அந்த உண்மையானது பிறருக்கு கசப்பாக தோன்றலாம். அதனால் மனம் குன்றிவிடக் கூடாது. “உண்மை கசப்பாயினும் அதைச் சொல்லிக் கொண்டே யிரு” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியில் உள்ளது. நபி (ஸல்) அவர்களின் வாக்குப்படி ஒருவன் நடந்து கொண்டால் நாளடைவில் அந்தச் சத்திய கொள்கையானது மக்களின் மத்தியில் வேறூன்றித் தழைக்க ஆரம்பித்துவிடும்.

நபி (ஸல்)அவர்கள் “ஒருவன் மற்றொருவனை நற்கருமங்களைச் செய்யும்படி தூண்டினால் நற்கருமங்கள் செய்தவனுக்கு எவ்வளவு நற்கூலி கிடைக்கிமோ அவ்வளவு நற்கூலி தூண்டியவனுக்கும் கிடைக்கும். ஒருவனைக் மற்றொருவன் கெட்ட காரியம் செய்யும்படி தூண்டினால் கெட்ட கரியம் செய்தவனுக்கு எவ்வளவு தண்டனை உண்டோ அவ்வளவு தூண்டியவனுக்கும் உண்டு. அதில் கொஞ்சமும் குறையாது. (முஸ்லிம்)

சத்தியத்தை போதித்தல்: ஹக் என்ற பதத்திற்கு உண்மை, உரிமை என்பது பொருளாகும். இவ்விடத்தில் உண்மையான மார்க்கத்தையும் உண்மை பேசுவதையும் பிறருடைய உரிமயைப் பாதுகாப்பதையும் குறிக்கும். ஒருவருக்கொருவர் பொருமையைப் போத்தித்தல்: ஸப்ரு என்ற பதத்திற்கு பொருமை என்பது பொருள். ஒருவருக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள், பிறரால் உண்டாகும் வசைகள் துன்பங்கள் முதலியவற்றைப் பொருத்துக் கொள்வதே பொறுமையாகும். முதலில் மனிதன் தன்னைச் சீர்திருத்திக்கொண்டு மற்றவர்களைச் சீர்திருத்த முயற்சிக்க வேண்டும். ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்து பிறரையும் நன்மை செய்யும்படியும் கெட்ட காரியங்களை விட்டு விலகும்படியும் தூண்டவேண்டுமென்று இதில் கூறப்படுகிறது.

நினைவுபடுத்துகிறோம்.

அன்பான வாசகர்களே

ஷவ்வால் மாத பரிசுப் போட்டிக்கான
பதில்கள் அனுப்பாதவர்கள் சீக்கிரமாக அனுப்புமாறு
கேட்டுக்கொள்கிறோம். அதற்கான முடிவு தேதிகள்
நாளையுடன் முடிவடைகிறது.

9/17/2011

அழகிய கடன் திட்டம்

அன்பானவர்களே!

அழகிய கடன் திட்டம் ஒன்றை துவங்குவதற்கான
ஒரு திட்டம் ஒன்றை உங்களிடம் வைக்கிறோம்.
நமது இளைஞர்கள் சிலர் இளனிலை(UG) முடித்துவிட்டு
ஏதாவது கல்வி பயிலும் போது அவர்களுக்கு பண உதவிகள் தேவைப்படுகிறது.
(For Example IATA, CCNA, software or hardware, technical courses etc...)
அது போன்ற நேரங்களில் அழகிய கடனாக கேட்டு
நம்மை வந்து அனுகிறார்கள்.
அது போன்ற கல்விக்காக அழகிய கடன் வசதி நம்மிடம் இல்லை.
இது போன்ற கல்வி பயில்பவர்களுக்கு குறிப்பிட்ட காலத்தவனையில்
அழகிய கடன் கொடுத்து உதவலாம்.
இத் திட்டம் ( ஸதக்கத்துல் ஜாரியா )துவங்க விருப்பம் உள்ள சகோதரர்கள்,
அழகிய கடனாக ஒரு தொகை கொடுக்க விரும்பும் சகோதரர்கள்,
நம்மை தொடர்பு கொள்ளுமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

இலங்கை வாசகர்கள்

அன்பான சிலோனில் இருந்து வாசிக்கும் வாசகர்களே!

நமது வலைத்தளம் வழியே
மாதந்தோறும் வரும்
இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியில்
நீங்களும் பங்கு பெறலாம்.


பதில்களை மின்னஞ்சலில் அனுப்பவும்.
மின்னஞ்சல் முகவரி நாம் கொடுத்து இருக்கிறோம்.
பதில்கள் எழுதும் போது மறவாமல்
உங்கள் வீட்டு முகவரி ஆங்கிலத்தில் எழுதவும்.
அதனுடன் தொலைபேசி அல்லது அலைபேசி நம்பரையும் சேர்த்து எழுதவும்.
பரிசினை வென்றால் துரித தபால் சேவை மூலம்
உங்கள் இல்லங்களில் பரிசுகள் சேர்க்கப்படும்.

இல்லங்களை தேடி

நமது வலைத்தளம் வழியே நடந்த
ரமலான் மாதம் பரிசுப்போட்டியில்

வென்றவர்களின்
பரிசுகள் நாம் முன்னரே சொன்னது போல
அவர்களின் இல்லங்களுக்கு
சென்று கொடுத்து விட்டோம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

9/12/2011

பரிசுப்போட்டி

பரிசுப்போட்டியில்
நமது வலைத்தளம் படிக்கும்
அனைத்து வாசகர்களும் பங்கேற்கலாம்.
பல வாசகர்கள் சரியான பதிலை எழுதினால்
குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படும்.
சரியான பதிலை எழுதும் மூவருக்கு மட்டும் பரிசுகள் அனுப்பப்படும்.
வெளியூர் வாசகர்களாக இருந்தால் துரித தபால் சேவை மூலம்
பரிசுப்பொதிகள் அனுப்பி வைக்கப்படும்.

9/07/2011

ஷவ்வால் மாத பரிசுப் போட்டி

1>திருக்குர் ஆனில் இடம் பெற்ற கிழமைகள் என்ன? என்ன?
2> தயம்மும் செய்து கொள்ள அனுமதி வழங்குகிற வசனம் எது?
3> ஷவ்வால் மாத நோன்பு சம்பந்தமான நபிமொழி என்ன?
4> நாயகம் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் எத்தனை பேர்?
5>ஸிஹாஹ் ஸித்தா என்றால் என்ன?

பதில்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 29.09.2011

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி 'mkranwar@gmail.com'

இந்த மாதம் முதல் பரிசுப்போட்டியில் நமது வாசகர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம். தவறாமல் வீட்டு முகவரியும் சேர்த்து அனுப்பவும்.

பரிசுப் போட்டி முடிவுகள்

ரமலான் மாத பரிசுப் போட்டி

1) முதன் முதலில் இறங்கிய வஹி என்ன?
2) நோன்பிலிருந்து சலுகை பெற்றவர்கள் யார்? யார்?
3) மக்கத்து காபிர்கள் வணங்கிய நட்சத்திரத்தின் பெயர் என்ன?
4) நாயகம் (ஸல்) அவர்களின் செவிலித்தாய் பெயர் என்ன?
5) நாயகம்(ஸல்) அவர்களுக்கு வந்த தூதுச் செய்தியை இது இறைச்செய்திதான் என விளக்கிச்சொன்னவர் யார்?

1) 96வது அத்தியாம்
யாவற்றையும் படைத்த உமது
இறைவனின் திரு நாமத்தை கொண்டு ஓதுவீராக.
2) பிராயானிகள், நோயாளிகள், கர்ப்பினிகள்
பாலூட்டும் தாய்மார்கள்.
3)ஷி;.ரா
4) ஹலீமா
5) வரகா பின் நெளபல்

சரியான விடையை எழுதியவர்கள்

சிராஜ்தீன் துபாய்
முகமது பாதில் சென்னை

நான்கு கேள்விகளுக்கு சரியான பதில் எழுதியவர்கள்
அமீனுதீன் துபாய்
அயூப்கான் துபாய்

இவர்களுக்கான பரிசுப்பொதிகள்
காலக்கிரமத்தில் அவர்களது இல்லங்களில் சேர்க்கப்படும்.

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...