8/29/2011

இந்த வார ஜும்மா உரை


இந்த வார ஜும்மா சொற்பொழ்வு
வீடியோ பதிவாக தருகிறோம்.
நமது வாசகர்கள் கேட்டு
இரு உலகிலும் வெற்றி பெற...

புகைப்பட பதிவுகள்



எல்லா புகழும் இறைவனுக்கே!

சில ஆலோசனை அமர்வுகளின்

புகைப்பட பதிவுகள்



ஸகர் உணவு


இருபதுக்கும் பின் தங்கிய இரவுகளில்
இரவுத்தொழுகைக்குப்பின் ஸ்கர் உணவு வழங்கப்படுகிறது.

இது போன்ற ஸகர் உணவு பணிகளில்
உணவுகள் தொழுகைக்குப்பின் வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஏதுவாக,
பொட்டலமாக வழங்கப்படுகிறது.
எல்லா புகழும் இறைவனுக்கே!

பித்ரா பயணங்களில்




வெள்ளிக்கிழமை ஜூம்மா வசூல்

இது போன்ற ஏழ்மையான கிராமங்கள்

நமக்குத் தெரியாமல் இன்னும் எத்தனையோ?

தேடி அலைந்தால் ஏராளனமான கிராமங்கள் கிடைக்கலாம்.

அல்லாஹ் போதுமானவன்.




ஸதக்கத்துல் பித்ரா என்னும் கடமையில்










ஸதக்கத்துல் பித்ரா




நாயகம்(ஸல்) அவர்கள்
கடமையாக்கிய
ஸதக்கத்துல் பித்ரா என்னும் கடமையில்





8/25/2011

அழகிய ஸ்தலமே பள்ளிவாசல்

இந்த பரபரப்பான உலகத்தில்
தினம் தினம் மன உளைச்சல்
அன்றாடம் ஏராளனமான அலுவலக வேலைகள்
பொருளாதார சிந்தனைகள் என மனிதனின் வாழ்க்கை.
இந்த பரபரப்பில் இருந்து வெளியே வந்து
அமைதியாக பள்ளிக்கு சென்று
இறைவனை தொழுது
அவனிடம் பிரார்த்திக்க ஆசைப்படுவது மனிதனின் இயல்பு.
இது போன்ற தருனங்களில் மனிதன் விரும்புவது
அமைதியான சூழல் அதில் ஒரு பள்ளி வாசல்.

இது போன்ற பள்ளி வாசல்கள்
சில இடங்களில் அமைவது உண்டு.
அது போன்ற பள்ளிகளை விரும்பும் மக்கள்
அங்கேயே மன அமைதியுடன் காலம் கழிப்பதும் உண்டு.
என்ன தான் இருந்தாலும் அவர்கள் நேசிக்கும் பள்ளிக்கு சென்று
இரன்டு ரக் அத்கள் தொழுதால் தான்
அவர்களுக்கு சாந்தியும் .. சமாதானமும்.
அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் 7 பேருக்கு கிடைக்கும்.
அதில் ஒருவர் பள்ளியோடு தொடர்புடைய வாலிபர்.
இது இந்த பள்ளியை பாருங்கள்.
அமைந்துள்ள சூழலை பாருங்கள்.

இது மலேசியாவில்
தைபிங் நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்

லைலத்துல் கத்ர் நாள் எப்போது?


அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூலகள்்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்



ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டீர்களா? என்று அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், ‘ஆம்’ நாங்கள் ரமலானின் நடுப்பத்து நாள்களில் நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாம் நாள் காலையில் வெளியேறினோம். இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், ‘எனக்கு லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது. அதை நான் மறந்து விட்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களின் ஒற்றை இரவுகளில் தேடுங்கள். அன்று ஈரமான களிமண்ணில் நான் ஸஜ்தாச் செய்வது போல் கனவு கண்டேன். யார் அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாஃப் இருந்தாரோ அவர் பள்ளிக்குத் திரும்பட்டும்’ எனக் கூறினார்கள். மக்கள் பள்ளிக்குத் திரும்பினார்கள். அப்போது வானத்தில் சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் வந்து மழை பொழிந்தது. தொழுகைக்க இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களின் நெற்றியிலும் மூக்கிலும் களிமண்ணை கண்டேன்’ என்று விடையளித்தார். நூல்: புகாரி

நோன்பு கஞ்சி



நோன்பு கஞ்சி

நோன்பு திறத்தல் நேரலையாக

வாசகர்ளுக்காக வீடியோ பதிவுகள்







மார்க்க வினா விடை

மார்க்க வினா விடைக்காக
பள்ளியில் அமர்ந்து
பதில்களை தேடும் இளைஞர்

8/22/2011

Surat Al-Qadr


97:1

Indeed, We sent the Qur'an down during the Night of Decree.
97:2

And what can make you know what is the Night of Decree?
97:3

The Night of Decree is better than a thousand months.
97:4

The angels and the Spirit descend therein by permission of their Lord for every matter.
97:5

Peace it is until the emergence of dawn.

கியாமுல் லைல் தொழுகை

எல்லா புகழும் இறைவனுக்கே!

ரமளானுக்கு பின் தங்கிய இரவுகளில்
மூன்றாம் ஜாமத்தில் நமது பள்ளியில் இரவுத்தொழுகை
அதாவது கியாமுல் லைல் தொழுகை நேற்று இரவு முதல் நடைபெறுகிறது.
தொழுகை நேரம் அதிகாலை 2.45 மணிக்கு துவங்குகிறது.
ரமளானில் பிந்திய பத்து இரவுகளில்
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவில்
வணக்க வழிபாடுகளை ஆர்வத்துடன் மேற்கொள்ள
ஏராளனமானோர் பள்ளிக்கு வந்தனர்.
ஆண்களை விட பெண்கள் அதிகமாக வந்தனர்.
சுமார் 170க்கும் குறையாமல் பெண்கள் வந்தனர்.

8/18/2011

இப்தார் நிகழ்ச்சிகள்




நமது பள்ளியில்
தினந்தோறும் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சிகள்
இனிதே நடைபெறுகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
தினமும் நூற்றுக்கு மேற்பட்டோர் வந்து நோன்பு திறக்கிறார்கள்.

இப்தார் உணவாக
பேரீட்சை, தண்ணீர், பழங்கள், வடை , சமூசா
சர்பத் ஆகியவை ஆகும்.






இஸ்லாமிய கேள்விபதில் -1

வலைத்தளத்தில்
இன்ஷால்லாஹ் இனி மாதந்தோறும்
நமது வாசகர்களுக்காக புதியதாக
இஸ்லாமிய கேள்விபதில் நடைபெற இருக்கிறது.
இதில் நமது வாசகர்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும்.
நாம் குறிப்பிடும் தேதிக்குள் இதன் பதிலை
வாசகர்கள் அனுப்பிவைக்கவேண்டும்.
பல வாசகர்கள் பதில் அனுப்பினால்
குலுக்கல் முறையில் பரிசு தேர்ந்து எடுக்கப்படும்.

மாதம் 3 வாசகர்க்கு மட்டும் பரிசு கொடுக்கப்படும்.
இன்ஷால்லாஹ் காலப்போக்கில் இது விரிவுபடுத்தப்படும்.
இதில் உள்ளூர் வாசகர்கள் கலந்துக்கொள்ள முடியாது.
வெளி இடங்களில் வாழும் வாசகர்களுக்கு மட்டும்.
அவர்கள் பதில் எழுதும் போது பரிசுப்பொதிகள் உள்ளூரில் கொடுக்க இருப்பதால்
உள்ளூர் முகவரியும் சேர்த்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இனி இந்த மாதத்திற்கான கேள்விகள்

1) முதன் முதலில் இறங்கிய வஹி என்ன?
2) நோன்பிலிருந்து சலுகை பெற்றவர்கள் யார்? யார்?
3) மக்கத்து காபிர்கள் வணங்கிய நட்சத்திரத்தின் பெயர் என்ன?
4) நாயகம் (ஸல்) அவர்களின் செவிலித்தாய் பெயர் என்ன?
5) நாயகம்(ஸல்) அவர்களுக்கு வந்த தூதுச் செய்தியை
இது இறைச்செய்திதான் என விளக்கிச்சொன்னவர் யார்?

பதில்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ;31.08.2011

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி mtctonline@gmail.com

8/11/2011

ரமலான் பரிசுப்போட்டி


ரமலான் மாதம் என்பதால்
நமது பள்ளியில்
இந்த ஒரு மாதம் முழுவதும்

மக்களுக்கு குர் ஆன் வசனங்களை
வீட்டில் இருக்கும் போதும் புரட்டிப்பார்க்க, அலசி பார்க்க,
சில கேள்விகள் தினமும் கேட்கப்பட்டு விடைகள் வாங்கப்படுகிறது.
அதாவது ரமலான் பரிசுப்போட்டி.
இதில் ஆண்களை விட ஏராளனமான
பெண்கள் ஆர்வமாக கலந்துக்கொள்கின்றனர்.

இரவுத்தொழுகையில் மார்க்க சொற்பொழிவு



இரவுத்தொழுகையில்
முதல் நான்கு ரக் அத்கள் முடிந்ததும்
தொடர்ச்சியாக நீண்ட நேரம் நின்று தொழுவதால்
சிறிது நேரம் ராஹத்தாக இருக்க சில நிமிடங்கள்
மார்க்க சொற்பொழிவு நடைபெறுகிறது.
அதன் வீடியோ பதிவை பார்க்கலாம்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

இரவுத்தொழுகை வீடியோ பதிவு

தினமும் நடைபெறும் இரவுத்தொழுகையின்
ஒரு பகுதி மட்டும்
நமது வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்கிறோம்.
இதோ அதன் வீடியோ பதிவு

ரமலான் சிந்தனைகள்



உலகில் எத்தனையோ நகரங்களில் வாழும் முஸ்லிம்களின்
ரமலான் இப்தார் நேரங்கள் பார்த்தோம்.
இதோ இப்போது நாம் பார்ப்பது ஒரு வித்தியாசமான நகர்.
இந்த நகரத்தின் பெயர் ஹாமர் பெஸ்ட். இது நார்வே நாட்டில் உள்ளது.
அதாவது பூகோளத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள நகரம்.
இந்த நகரில் பகல் பொழுது அதிகம்.
இன்னும் சொல்லப்போனால் நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நகரம்.
இங்கே ஒரு முஸ்லிம் வாழ்கிறார் என்றால்,
நிச்சயமாக அங்கே ஒரு சகோதரர் இருக்கலாம் ..
அவரின் ஸகர் மற்றும் இப்தார் நேரங்கள் எப்படி இருக்கும்?!


நார்வே நாட்டில் பின்மார்க் மாவட்டத்தில்
அமைந்துள்ளது இந்த நகரம்.
இங்கெ இன்று ஸகர் நேரம் 1.21am
இப்தார் நேரம் 10.11pm
அல்ஹம்துலில்லாஹ்.
ஆனால் அங்கேயும் முஸ்லிம்கள் இருந்தால்
கண்டிப்பாக நோன்பு நோற்பார்கள்.





ஈமான் கொண்டோர்களே!
உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது
நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது.
(அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.(அல்குர்ஆன் 2:183)

அன்பான சகோதரர்களே!


உங்கள் அனைவருக்கும் இனிய ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)



நமது வலைத்தளம் துவங்கப்பட்டு ஏக இறைவனின் உதவியால்
எந்த நோக்கத்திற்காக துவங்கப்பட்டதோ,
அந்த எண்ணத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்
இதோ இப்போது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இன்னும் அதிகமான வாசகர்கள் வருகை தந்து
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் பெற வேண்டும் என்பது நமது எண்ணம்.

8/08/2011

தைவானில் இருந்து...


அன்பான வாசகர்களே

நமது வலைத்தளம் வந்து பார்க்க
பல நகரங்களில் இருந்தும் வாசகர்கள் வருகிறார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
முதல் சில இடங்களில் அமீரகம், இந்தியா, கத்தார்,
அமெரிக்கா, சவுதி, இலங்கை,

என்ற வரிசையில் நம்மை ஆச்சர்ய பட வைக்கும்
ஒரு நாட்டில் இருந்து
நமது ஒரு சகோதரர் வந்து இஸ்லாமிய செய்திகள் படிக்கிறார் என்றால்
எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்..
ஆம் தைவான் நாட்டில் இருந்து
நமது வலைத்தளத்திற்கு ஒரு வாசகர் (சகோதரர்) வந்து செல்கிறார்.
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் பெற துவா செய்கிறோம்.

Ramadan Mubarak


அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்

அன்பானவர்களே!


ரமலான் நோன்பு பார்க்கும்போது
அனைவரும் ஊரில் பேசியது அரபு பாலைவனங்களில் நிலவும்
இப்போதைய பருவ நிலைதான்.. வெயில் வெயில்..
ஊரில் பருவ நிலை பரவாயில்லை.
மழை இல்லை என்றாலும்.. வெயிலின் தாக்கம் இல்லை.
இது இப்படி இருக்க..
உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களிம் ரமலான் எப்படி இருக்கும்
என பார்த்தோமானால்.. ஒவ்வொரு நகரங்களிலும்
பஜ்ர் நேரமும், அதே போல நோன்பு திறக்கும் நேரங்களும்
நமக்கே மிக ஆச்சர்யமாக இருக்கிறது.
இன்னும் பல நகரங்களில் பகல் பொழுது மிக நீண்டதாக இருக்கிறது.
இதுக்கு நம்ம இருக்கும் இடம் தேவலாம் என எண்ணத்தோன்றும்..இதோ...



chennai 6.34pm
bengalore 6.45
trivandrum 6.42
hyderabad 6.46
Auckland 5.40
sydney 5.21
taipei 6.35
kualalumpur 7;27
penang 7;35
singapore 7;16
colombo 6;28
kandy 6;26
paris 9;19
london 8;37
san deigo 7;41
new york 8;04
chicago 8;01
seattle 8;34
tokyo 6.40
saint petersburg 9;23



இதில் என்ன வேடிக்கை என்றால்
பல நகரங்களில் இவர்களுக்கு உறங்க நேரம் இருக்குமா என்பதே?
காரனம் அதிகாலை சகர் நேரம் சில நகரஙக்ளில் 2;45க்கு வருகிறது.
இது உலகில் பல நகரங்களில் கோடை காலம் என்பதால்
இந்த நேர மாற்றம்..
எல்லாம் வல்ல இறைவன் சிரமம் இல்லாமல்
இந்த ரமலானை எளிதாக்கி தருவானாக! ஆமின்.

8/05/2011

ஜும்மா சொற்பொழிவு

இன்றைய ஜும்மா குத்பா உரையை
இங்கே வீடியோ பதிவாக தந்து இருக்கிறோம்.
இந்த புனித ரமலானில் இது போன்ற சொற்பொழிவை
கேட்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மஸ்ஜித் இக்லாஸ்



பேரங்களும் நட்புறவுகளும்
பரிந்துரை செய்யாத அந்த இறுதி தீர்ப்பு நாள்
வருவதற்கு முன் உங்களுக்கு அளித்தவைகளிலிருந்து
நல் வழிகளில் தாராளமாக செலவு செய்யுங்கள்.



அன்பான சகோதரர்களே!

நமதூரில் மஸ்ஜித் கட்டப்பட்டு சில வருடங்கள் ஆகியும்
இன்னும் நிறைவு பெறாத வகையில் உள்ளது.
மேலே உள்ள பள்ளியை நிறைவு செய்ய சில சகோதரர்களின் உதவியால்
சில வேலைகள் மட்டும் துவங்கி மீன்டும் நிறைவு பெறாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் இறைவனின் இல்லம்
தொழுகையாளிகளால் அலங்கரிங்கப்பட்டு
பள்ளியில் இடம் இல்லாமல் அர் ரஹ்மான் வகுப்பறைகளிலும்
பெண்கள் தொழுகிறார்கள். ஆண்களும் பெண்களும் தொழ போதிய இடவசதி இல்லை.
எனவே, அதிகமான மக்கள் தொழ பள்ளியின் மேல் தளம் அவசியமே...

புனித மாதமான இந்த ரமலானில் உங்களின் பங்களிப்புகளை அதிகமாக செய்து
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.



8/03/2011

இரவுத்தொழுகை





ரமலானின் புகைப்படங்கள்









Ramadan Kareem

அன்பான சகோதரர்களே!
அனைவருக்கும் எமது ரமலான் வாழ்த்துக்கள்
அரபு நாடுகளில் ரமலான் ஆகஸ்ட் 1 முதல் துவங்கினாலும்,
தமிழகத்தில் பிறை பார்த்த பின் நமதூரில்
நேற்று முதல் ரமலான் துவங்கியது. அல்ஹம்துலில்லாஹ்.
நேற்று முதல் நோன்பு இப்தார் சரியாக மாலை 6.36 மணிக்கு இருந்தது.
இன்றும் நோன்பு திறக்கும் நேரம் அதே தான்..
நேற்று சுமார் 160 பேருக்கு குறையாமல் நோன்பு திறக்க வந்து இருந்தனர்.
பள்ளி வளாகத்தில் அமர்ந்து நோன்பு திறந்தனர்.
பல இளைஞர்கள் அமைதியாக பிரார்த்தனைகளில் இருந்தனர்.
இரவுத்தொழுகை சரியாக 9.00 மணிக்கு துவங்குகிறது.
இரவுத்தொழுகைக்கு ஆண்களும் பெண்களும் அதிகமாக வருகின்றனர்.
பள்ளியில் தொழ இடவசதி போதவில்லை.
எல்லா புகழும் இறைவனுக்கே!

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...