வலைத்தளத்தில்
இன்ஷால்லாஹ் இனி மாதந்தோறும்
நமது வாசகர்களுக்காக புதியதாக
இஸ்லாமிய கேள்விபதில் நடைபெற இருக்கிறது.
இதில் நமது வாசகர்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும்.
நாம் குறிப்பிடும் தேதிக்குள் இதன் பதிலை
வாசகர்கள் அனுப்பிவைக்கவேண்டும்.
பல வாசகர்கள் பதில் அனுப்பினால்
குலுக்கல் முறையில் பரிசு தேர்ந்து எடுக்கப்படும்.
மாதம் 3 வாசகர்க்கு மட்டும் பரிசு கொடுக்கப்படும்.
இன்ஷால்லாஹ் காலப்போக்கில் இது விரிவுபடுத்தப்படும்.
இதில் உள்ளூர் வாசகர்கள் கலந்துக்கொள்ள முடியாது.
வெளி இடங்களில் வாழும் வாசகர்களுக்கு மட்டும்.
அவர்கள் பதில் எழுதும் போது பரிசுப்பொதிகள் உள்ளூரில் கொடுக்க இருப்பதால்
உள்ளூர் முகவரியும் சேர்த்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இனி இந்த மாதத்திற்கான கேள்விகள்
1) முதன் முதலில் இறங்கிய வஹி என்ன?
2) நோன்பிலிருந்து சலுகை பெற்றவர்கள் யார்? யார்?
3) மக்கத்து காபிர்கள் வணங்கிய நட்சத்திரத்தின் பெயர் என்ன?
4) நாயகம் (ஸல்) அவர்களின் செவிலித்தாய் பெயர் என்ன?
5) நாயகம்(ஸல்) அவர்களுக்கு வந்த தூதுச் செய்தியை
இது இறைச்செய்திதான் என விளக்கிச்சொன்னவர் யார்?
பதில்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ;31.08.2011
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி mtctonline@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக