8/30/2009

அன்பானவர்களே
இந்த இனையம் வேண்டுமா? வேண்டாமா? என
நமது வாசகர்களிடத்தில் நடந்த வாக்கெடுப்பில்
இந்த இனையம் அவசியம் என 80% வாக்கு கிடைத்துள்ளது.
வாக்களித்த அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

தடைசெய்யப்பட்ட நாட்கள் (தொடர் 3)

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது கூடாது.
வியாழன், வெள்ளி அல்லது சனி என்று முன்போ, பின்போ
ஒரு நாட்கள் சேர்த்து வேண்டுமானால் நோன்பு நோற்கலாம்.
' உங்களில் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல்
அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்க வேண்டாம்'
என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)
நூல்கள் : புகாரி(1985), முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ.

சனிக்கிழமை

வெள்ளி, சனி என்று இரண்டு நாள் நோன்பு நோற்கலாம். ஆனால்,
சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள்
தடை செய்துள்ளார்கள்.
'உங்கள் மீது கடமையாக்கப்பட்ட நாட்களில் தவிர (வேறு)
சனிக்கிழமைகளில் நீங்கள் நோன்பு நோற்கக்கூடாது.
சனிக்கிழமைகளில் உண்பதற்கு திராட்சை தோல் அல்லது மரக்குச்சியைத் தவிர
வேறு எதுவும் கிடைக்காவிட்டால் அதையாவது மென்று விடட்டும்'
என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு புஸ்ர்(ரலி)
நூல்கள் : திர்மிதீ, அபூதாவூத், ஹாகிம்

ஷஅபான் 15

பரா அத் இரவு என்று கூறப்படும் ஷபான் 15ல்,
நோன்பு நோற்பதை நபி(ஸல்)அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
15அதற்கு மேல் ரமலான் வரை உபரியான எந்த நோன்பும் நோற்கக்கூடாது.
'ஷபான் பாதி நாட்கள் மீதமிருக்கும்போது நீங்கள்
நோன்பு நோற்கலாகாது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹீரைரா (ரலி)
நூல்கள் : திர்மிதீ, அபூதாவூத், இப்னு ஹிப்பான்.

8/29/2009

கைலிகள் வாங்க.. e@shopping



இதன் விலை ரூபாய் 85.00 மட்டும்
இது சிறுவர்களுக்கானது

மிகக்குறைந்த சலுகை விலை
நீங்கள் விரும்பும் கைலிகளை
கலர் அல்லது வெள்ளை அல்லது 'பாயடி கைலிகள்'
எது வேன்டுமோ அதை மட்டும்
எழுதுங்கள்.. விலையை தருகிறோம்.



கிப்ஸ் 7 கலர் ரூபாய் 255.00


கிப்ஸ் 303 சிறுவர்களுக்கு ரூபாய் 85.00


கைலிகள் வாங்க வேன்டிய முகவரி
'mailbags@in.com'

வளைகுடாவில் வாழ்பவர்கள் அங்கிருந்தும் வாங்கலாம்.
இலவசமாக தாங்களது வீடுகளில் இங்கே டெலிவரி செய்கிறோம்.


'இதான் பாயடி கைலி'
பாயடி கைலிகள் ரூபாய் 225முதல் ரூபாய் 275வரை

கிப்ஸ் வெள்ளைக்கைலிகள்
60 - 40 ரூபாய் 240.00
80 - 80 ரூபாய் 310.00


இந்த விற்பனையின் சில சதவீதம்
நமது அறக்கட்டளைக்கு செல்கிறது.

நமதூரில் நேரடியாக கடைக்கு விஜயம் செய்ய
'ரெடிமேடு சென்டர் , மார்க்கெட் லைன், மதுக்கூர்.'

வியாபார நேரங்கள்.. e@shopping

ரமலான் மாதம் அல்லது
ரமலான் அல்லாத காலங்கள்
நமது சகோதரர்கள் அனைவரும் உபயோகப்படுத்துவது
நமது பாரம்பர்யத்தில் நம்மோடு கலந்து
நமது வாழ்னாளில் நம்மோடு வருவது
என்ன 'கைலி' தாங்க..


இதன் விலை ரூபாய் 130.00

இதன் விலை ரூபாய் 160.00




நமது சகோதரரின் வியாபார நிறுவனம்.
உங்களுக்கு தேவையான கைலிகளை
நீங்கள் தேர்ந்து எடுக்கலாம்.

கிப்ஸ் முதல் 144.. உலாமா வரை


இதன் விலை ரூபாய் 140.00



இதன் விலை ரூபாய் 85.00

8/28/2009

ரமலானின் வெள்ளிக்கிழமை

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்
இன்று ரமலானின் முதல் வெள்ளிக்கிழமை குத்பா பேருரையை
நமது பள்ளியின் இமாம் முனிர்ஸலாஹி அவர்கள் ஆற்றினார்கள்.
இன்றைய உரையில் நோன்பாளிகளுக்காக,
இறைவன் கொடுத்த சலுகைகள் அனைத்தையும் பட்டியலிட்டு காண்பித்தார்.



இதில் பிரயாணம், நோயாளிகள், ஹைலு எனும் மாதவிடாய் காலங்கள்,
மருத்துவரிடம் சென்று நோயாளி கான்பிப்பது,
நோன்பு காலத்தில் மனைவியுடன் கூடுவது,
அவர்களுக்கு குளிப்புக்கடமையா?
என அனைத்தையும் பட்டியலிட்டு கான்பித்தார்.
மிக்க ஒரு அழகான உரை.
நாம் அனைவரும் தெரிந்து இருக்க வேண்டிய சட்டங்கள்.



இன்றைய தொழுகைக்கு பள்ளி நிரம்பியது.
அளவுக்கு அதிகமான பெண்கள் வந்து இருந்தனர்.

ஆண்களுக்கு போதிய இடவசதி இல்லாததால்
பள்ளிக்கு வெளியே வாகனங்கள் நிறுத்தும் இடம்
மற்றும் அர் ரஹ்மான் பள்ளியின் முன்பும் தொழ ஏற்பாடு செய்து இருந்தது.
எல்லாப்புகழும் இறைவனுக்கே!

8/27/2009

''நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்'' என்று நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு சவுத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமலிருப்பதில்?அல்லாஹ்வுக்கு எந்த?தேவையும் இல்லை. என நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

"யார் என்மீது ஸலவாத் சொல்கிறானோ, அதன் காரணமாக அல்லாஹ் அவனுக்குப் பத்து மடங்கு அருள்புரிகிறான்" என்று நபி(ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) நூல் : முஸ்லிம்.

8/26/2009

நோன்பு திறக்க ...

தினமும் இப்தார் நேரங்களில்
நோன்பு திறக்க பள்ளியில் கொடுப்பது..



நோன்பு கஞ்சி
பேரீச்சம் பழம்
சர்பத்
பழங்கள்
வாடா, வடை, சமூசா.

பிரார்த்தனைகள்!

துவாக்கள் என்னும் பிரார்த்தனைகள்
அங்கீகரிக்கப்படும் நேரங்களில் ஒன்று
ரமலான் மாத இப்தார் நேரங்கள்..
ஆகவே, இது போன்ற இப்தார் நேரங்களில்



அளவுக்கு அதிகம் இறைஞ்சுவோமாக!
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் பெற
எல்லாம் வல்ல இறையிடம் பிரார்த்தனை செய்வோமாக!
நமது நன்மைக்காகவும் ஊரின் நன்மைக்காகவும் துவாக்கள் செய்வோம்!.

இரவுத்தொழுகைகள்



தினமும் நடைபெறும் இரவுத்தொழுகை சரியாக 9.00 மணிக்கு
தொடங்குகிறது. சரியாக பத்து மணி போல தொழுகை முடிகிறது.
தொழுகையின் போது முதல் நான்கு ரக் அத் கள் முடிந்ததும்,
பள்ளியின் இமாம் முனிர் ஸலாஹி அவர்கள் நபிகளாரின் வாழ்க்கையை தொகுத்து,
' நபிகளாரின் மான்புகள்' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

நோன்பு கஞ்சி கொடுக்கும்போது



நோன்பு கஞ்சி கொடுக்கும்போது


8/24/2009

தடை செய்யப்பட்ட நாட்கள். (தொடர் 2)

இரண்டு பெரு நாட்கள்

மகிழ்ச்சியான நாட்களான பெருனாள் அன்று உண்டும் பருகியும் மகிழ்வோடு
அந் நாளை கழிக்கவேன்டும். இந் நாளில் கூட அல்லாஹ்விற்காக
நோன்பு நோற்பேன் என்று கூறி ஒருவர் நோன்பு நோற்றால் அதை
அல்லாஹ் ஏற்கமாட்டான். எனவே நபி(ஸ்ல்) அவர்கள் நோன்புப்பெருனாள்
ஹஜ்ஜூப் பெருனாள் ஆகிய நாட்கள் நோன்பு நோற்பதை தடை செய்தார்கள்.

' நோன்புப் பெருனாள், ஹஜ்ஜூப் பெருனாள் ஆகிய நாட்களில்
நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்'
அறிவிப்பாளர் ; அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூற்கள் ; புகாரி(1991,1992) முஸ்லிம், திர்மிதீ.

தஷ்ரீக்குடைய நாட்கள்

துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13 ஆகிய நாட்களில்
நோன்பு நோற்கக்கூடாது. இந் நாட்களும் பெருனாளைப்போன்று
மகிழ்வோடு இருக்க வேண்டிய நாட்களாகும்.
'தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11,12,13) சாப்பிடுவதற்கும்
குடிப்பதற்கும், அல்லாஹ்வை நினைவு கூர்வதற்கும் உரிய நாட்களாகும்'
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : நுபைஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (ஹதீஸ் எண்: 2099)

அரபா தினம் (ஹாஜிகள் மட்டும்)

ஹஜ் செய்ய சென்றிருப்பவர்கள் அரபா தினத்தன்று (துல்ஹஜ் பிறை 9)
நோன்பு நோற்கக்கூடாது. ஹஜ்ஜூ செய்யாதவர்கள் அரபா தினத்தன்று
நோன்பு நோற்கலாம். அன்று நோன்பு நோற்பதால் முந்தைய வருடத்தின்
பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : முஸ்லிம்.

அரபாவுடைய நாள், குர்பானி கொடுக்கும் நாள், தஷ்ரீக்குடைய நாள்
ஆகிய இந் நாட்கள் இஸ்லாமியர்களின் பெருனாளாகவும் சாப்பிடவும்,
குடிக்கவும் உள்ள நாளாகவும் உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆமிர்(ரலி)
நூல்கள் : அபூதாவூத், திர்மிதீ, நஸயீ.

அர்ரஹ்மான் செய்திகள்

ரமலான் மாதம் பொதுவாகவே சலுகைகள் நிறைந்த மாதம்.
இதில் நமது பள்ளியான அர் ரஹ்மான் பள்ளியும் விதிவிலக்கல்ல.
ரமலான் தொடங்கியது முதல் இன்று தான் பள்ளி செயல்பட தொடங்கியது.



காரனம் வெள்ளி, சனி, ஞாயிறு என தொடராக விடுமுறை வந்தது.
இன்று முதல் தொடங்கிய பள்ளி தனது வேலை நேரத்தைக்குறைத்துக்கொண்டு
மாணவ-மாணவிகளுக்கு சந்தோசத்தைக்கொடுத்தது.
ரமலான் முழுவதும் பள்ளி நேரம்
காலை 9.15 முதல் 12.30 வரை.

நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள்

நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள்
- நயீமா பர்வீன்

அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு.
நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும் போது அல்லாஹ்விற்கு
நன்றி செலுத்தும்வகையில் நோன்பு நோற்கிறோம்.
விடுபட்ட கடமையான நோன்பை நிறைவேற்றினாலும்,
குறிப்பிட்ட சில நாட்களில் நோன்பு நோற்கக்கூடாது! அந் நாட்களில்
நோன்பு நோற்பதை நபி(ஸல்)அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
அந் நாட்கள் எவை? எவை? என்பதை கான்போம்.

1) நோன்புப்பெருனாள், ஹஜ்ஜூப் பெருனாள்
2) துல்ஹஜ்ஜூ பிறை 11,12,13.
3) அரபா தினம் (ஹாஜிகளுக்கு மட்டும்)
4) வெள்ளிக்கிழமை மட்டும்
5) சனிக்கிழமை
6) ஷபான் பிறை 15 முதல் அம்மாதம் முடிய
7) ரமலானுக்கு முந்தைய இரன்டு நாட்கள்
8) தொடர் நோன்பு நோற்றல்
9) ரமலான் பிறை பார்த்ததாக தகவல் கிடைக்காதபோது
ரமலான் நோன்பு நோற்பது
இவைகளைப்பற்றி விரிவாக நபிமொழிகளுடன் அடுத்த தொடரில் பார்க்கலாம்.

8/23/2009

நோன்பு திற மற்றும் இரவுத்தொழுகை

புனித ரமளானில் நமது பள்ளியில்
சங்கையாக இப்தார் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தினமும் 175பேருக்கு குறையாமல் வந்து செல்கிறார்கள்.
முதல் நாள் இப்தார் நேரம் 6.28,
இன்று நோன்பு திறந்த நேரம் 6.27

நமது பள்ளியில் இரவுத்தொழுகை நடைபெறுகிறது.
இரவுத்தொழுகைக்காக தனியாக ஒரு இமாம் வந்துள்ளார்.
அவர் இந்த ரமளானில் ஒரு குர் ஆன் முடித்துவிடுவார்.
இரவுத்தொழுகைகளில் பள்ளி நிரம்பி வழிகிறது.
பெண்களுக்கு போதிய இடவசதி இல்லை.
இன்னும் அவர்களுக்காக பள்ளியில் இடவசதி ஒதுக்கப்படுகிறது.

8/22/2009

ரமளான் மாதம் வந்துவிட்டால்...

புனித ரமளான் வாழ்த்துக்கள்

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது
நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது போல், உங்கள் மீதும்
அது கடமையாக்கப்பட்டுள்ளது; அதன் மூலம் நீங்கள்
தூய்மையுடையோர் ஆகலாம். அல் பகரா:183

நமது சகோதரர்கள் அனைவருக்கும்
இனிய ரமளான் நல்வாழ்த்துக்கள்.

8/21/2009

எல்லா புகழும் இறைவனுக்கே..



இன்று ஜும் ஆ தொழுகை சிறப்பாக நடைபெற்றது.
நமது பள்ளியின் இமாம் (பழைய) நூருல் ஹுதா அவர்கள்
இன்றைய உரையில் திருக்குர் ஆனின் சிறப்புகளை கூறினார்கள்.
எதிர்வரும் ரமளான் மாதத்தில் நாம் அனைவரும் குர் ஆனை ஓதவேன்டும்
ஓதத்தெரியாதவர்கள் இந்த இறைவேதத்தை கற்கவேன்டும் என கூறினார்.



இன்னும் பகராவின் ஆரம்ப வசனங்களை நினைவுகூர்ந்து
குர் ஆனின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
இன்றைய ஜும் ஆ நிரம்பி வழிந்தது.
நிறைய பெண்களும் வந்து இருந்தனர்.
ஜும் ஆ தொழுகை முடிந்து வெளியே வரும்போது
ஒரு பத்து நிமிடம் நல்ல மழை பெய்தது.
எல்லா புகழும் இறைவனுக்கே..

ஒரு பிரார்த்தனை

பன்றிக்காய்ச்சல் போன்ற கொடிய நோய்களிலிருந்து
பாதுகாவல் பெற நாயகம்(ஸல்)
கற்றுத்தந்த பிரார்த்தனை

நபி(ஸல்)அவர்கள்
'அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் பரஸி,
வல் ஜூனுனி வல் ஜூ;.தாமி வஸய்யி இல் அஸ்காமி'
என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் ; அனஸ் (ரழி)அவர்கள்
நூல் ; அபுதாவுத்

'யா அல்லாஹ் தொழு நோய், கருங்குஷ்டம், பைத்தியம் மற்றும்
கொடும் நோய்களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்'.

8/19/2009

அன்பானவர்களே!

அன்பான கொள்கை சகோதரர்களே!

நமது இனையத்தில் நமது அமைப்பு சார்பாக
நடைபெறும் இறைப்பணிகள் மற்றும்
நமது அர் ரஹ்மான் பள்ளியின் செய்திகள் மட்டும் இடம்பெறும்.
நமது சகோதரர்களின் கட்டுரைகள் போன்றவைகள் இடம்பெறாது.
இது நமது சகோதரர்களுக்கு ஒரு தகவல் பரிமாற்றம் வலைத்தளமே..
எல்லா புகழும் இறைவனுக்கே!

அர் ரஹ்மான் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி





நமது அர் ரஹ்மான் பள்ளி தொடங்கி இறையருளால் இனிதே செல்கிறது. அல்ஹம்துலில்லாஹ். இந்தியாவின் 63வது சுதந்திர தினத்தில் நமது பள்ளியும் சேர்ந்து கொண்டாடியது. காலை முதலே நமது பள்ளிக்கூடம் கலைக்கட்ட,


பள்ளி மாணவ- மாணவிகள் வர சரியாக காலை 8.30 மணிக்கு நமது அழைப்பை ஏற்று நமது பெரியார் நகர் கவுன்சிலர் வருகை தந்தார். அதன் பின் மாணவ செல்வங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் சிறப்பு விருந்தினர் கொடியேற்றினர்.




அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஒரு சில பெற்றோர்களும் அந்த பகுதி மக்களும் கலந்துக்கொண்டனர்.

ஜும் ஆ தொழுகை




ஜும் ஆ தொழுகையின் போது





தொழுகையாளிகளால் அலங்கரிக்கப்பட்ட நமது பள்ளிவாசல்



















ரமளான் சிறப்பு சொற்பொழிவு




ரமளான் சிறப்பு சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது.
நாம் ஏற்பாடு செய்து இருந்த ரமளான் சொற்பொழிவு
மழையின் காரனத்தால் நமது பள்ளியிலே நடைபெற்றது.
பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மஹ்லரி அவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் பிரச்சாரம் செய்தார். ரமளானில் நமது மனத்தூய்மை முக்கியம் என வலியுறுத்தி பேசினார். அதிகமான நபிமொழிகளை நினைவு கூர்ந்தார்.
நல்ல ஒரு அழகான சொற்பொழிவு.
இறுதியில் கேள்விபதில் நிகழ்ச்சியும் இருந்தது.

8/14/2009

ஆகஸ்ட் 14 வெள்ளிக்கிழமை


ஆகஸ்ட் 14 வெள்ளிக்கிழமை இன்று ஜும் ஆ உரை பள்ளியின் இமாம் முனிர் ஸலாஹி அவர்கள் உரையாற்றினார்கள் இன்றைய உரையில் அடுத்து ஒரு சில தினங்களில் வர இருக்கும் ரமளான் மாதம் சிந்தனைகளாக தொகுப்பாக உரையாற்றினார். ஏராளனமான மக்கள் இன்றைய தொழுகையில் கலந்துக்கொண்டனர். பெண்களும் வந்து இருந்தனர்.


இறைப்பணிச் செய்திகள்
இன்ஷால்லாஹ் நாளை நமது பள்ளி வளாகம் அருகே உள்ள நாகூர்பிச்சை இல்லத்தில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இன்ஷால்லாஹ் எதிர் வரும் திங்கட்கிழமை நமதூர் நூருல் இஸ்லாம் தெருவில் எதிர்வர இருக்கும் ரமளானுக்காக சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்புரை : அப்துல்மஜீத் மஹ்லரி
முதல்வர் ஆய்ஷா சித்திக்கா மகளிர் அரபிக்கல்லூரி

8/13/2009

எல்லாபுகழும் இறைவனுக்கே



எல்லாம் வல்ல இறைவனின் பெயரால்..

அன்பானவர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இறைவனின் மாபெரும் கிருபையால் நமது அமைப்பின் உறுப்பினர்கள் நமது ஊரின் மக்கள் நமது செயல்பாடுகளை தெரிந்துக்கொள்வதற்காகவும் நமது அமைப்பின் நண்பர்களோடு உறவாடுவதற்கும் இந்த வலைத்தளத்தை உருவாக்கியிருக்கிறோம். நமது நண்பர்கள் உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும்.

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...