8/24/2009

தடை செய்யப்பட்ட நாட்கள். (தொடர் 2)

இரண்டு பெரு நாட்கள்

மகிழ்ச்சியான நாட்களான பெருனாள் அன்று உண்டும் பருகியும் மகிழ்வோடு
அந் நாளை கழிக்கவேன்டும். இந் நாளில் கூட அல்லாஹ்விற்காக
நோன்பு நோற்பேன் என்று கூறி ஒருவர் நோன்பு நோற்றால் அதை
அல்லாஹ் ஏற்கமாட்டான். எனவே நபி(ஸ்ல்) அவர்கள் நோன்புப்பெருனாள்
ஹஜ்ஜூப் பெருனாள் ஆகிய நாட்கள் நோன்பு நோற்பதை தடை செய்தார்கள்.

' நோன்புப் பெருனாள், ஹஜ்ஜூப் பெருனாள் ஆகிய நாட்களில்
நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்'
அறிவிப்பாளர் ; அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூற்கள் ; புகாரி(1991,1992) முஸ்லிம், திர்மிதீ.

தஷ்ரீக்குடைய நாட்கள்

துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13 ஆகிய நாட்களில்
நோன்பு நோற்கக்கூடாது. இந் நாட்களும் பெருனாளைப்போன்று
மகிழ்வோடு இருக்க வேண்டிய நாட்களாகும்.
'தஷ்ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11,12,13) சாப்பிடுவதற்கும்
குடிப்பதற்கும், அல்லாஹ்வை நினைவு கூர்வதற்கும் உரிய நாட்களாகும்'
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : நுபைஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (ஹதீஸ் எண்: 2099)

அரபா தினம் (ஹாஜிகள் மட்டும்)

ஹஜ் செய்ய சென்றிருப்பவர்கள் அரபா தினத்தன்று (துல்ஹஜ் பிறை 9)
நோன்பு நோற்கக்கூடாது. ஹஜ்ஜூ செய்யாதவர்கள் அரபா தினத்தன்று
நோன்பு நோற்கலாம். அன்று நோன்பு நோற்பதால் முந்தைய வருடத்தின்
பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : முஸ்லிம்.

அரபாவுடைய நாள், குர்பானி கொடுக்கும் நாள், தஷ்ரீக்குடைய நாள்
ஆகிய இந் நாட்கள் இஸ்லாமியர்களின் பெருனாளாகவும் சாப்பிடவும்,
குடிக்கவும் உள்ள நாளாகவும் உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆமிர்(ரலி)
நூல்கள் : அபூதாவூத், திர்மிதீ, நஸயீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...