11/24/2009

என்சபை (மெய்ஞானம்)

வலைத்தளம் ஒன்றில் படித்தது உங்கள் பார்வைக்கு..


சகோதரர்களே! இலங்கையைச் சேர்ந்த ஒரு சேஹு டம் பையத் வாங்கி ஏமாந்த ஒரு நண்பர், அந்த செய்கின் குணநலன்கள் எப்படி இருக்கிறது என்பதை நமக்கு அனுப்பித்தந்திருந்தார்

அதனை உங்களின் பார்வைக்காக இங்கே பதிவு செய்கிறேன். இதனை பதிவு செய்வதற்கு முன்பாக பலரிடம் விசாரித்து அறிந்துகொண்ட பின்பே இங்கே இடுகிறேன்.

1. நானே முஹம்மதுநபி (ஸல்) அவர்களின் உள்ரங்க வெளிரங்க வாரிசு என்று சொல்வது.
2. இந்த காலத்தின் குத்பு என்று பறைசாற்றிக்கொள்வது.
3. இந்த உலகமே இவருடைய பார்வையில் தான் நடைபெறுகிறது என்று கூறுவது.
4. இனி வரக்கூடிய காலங்களும் இவருடைய பார்வையிலேயே நடைபெறும் என்று கூறுவது.
5. இவரின் பெயரைச் சொல்லி அழைத்தால் ஓடோடி வந்து கப்பாற்றுவேன் என்று கூறுவது.
6. இவரைப்போன்ற சக்தி படைத்தவர்கள் இனிமேல் யாரும் தோன்றமாட்டார்கள் என்று கூறுவது.
7. 500 ஆண்டுகளுக்கு முன்வரை இவரைப்போன்று சக்தி படைத்தவர்கள் யாரும் தோன்றவில்லை என்று கூறுவது.
8. நானே கிப்லாவாகவே இருக்கின்றேன் என்று சொல்வது.
9. ஹஜ்ஜுக்கு செல்கிறேன் என்று இவரின் வீட்டிற்கு செல்லும் இவரின் முரீதீன்களை ஊக்குவிப்பது.
10. இவரின் பக்தர்களை நாய் பேய் என்று திட்டுவது.
11. தனது செய்கு என நினைத்து இவரிடம் கூறிய ரகசியங்களை மற்ற பக்தர்களிடம் பகிர்ந்து கொள்வது.
12. ஒருவர் ஏதாவது சிறிய தவறுகள் செய்துவிட்டால், அந்த தவறுகளை மற்ற பக்தர்களிடம் பகிர்ந்துகொண்டு சிரித்து மகிழ்வது
13. சுவர்க்கம் நரகம் என்பதெல்லாம் இந்த உலகத்தில் மட்டும் தான் என்று கூறுவது
14. பக்தர்களை ஆட்டம் ஆட சொல்லி ரசிப்பது.
15. இவர் உணவருந்தி கை கழுவிய தண்ணீரை பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு குடிப்பதை ரசித்து பார்ப்பது.
16. இன்று சொன்னதை மறுநாள் மாற்றிச் சொல்வது.
17. சொத்துக்கள் வாங்கி குவிப்பது.
18. வட்டி வாங்கும் பக்தர்களை கண்டுக்காமல் இருப்பது. இவர்கள் கொடுக்கும் காணிக்கையை சந்தோசமாக ஏற்றுக்கொண்டு ஆசிர்வதிப்பது.
19. காலில் விழும் பக்தர்களை ஊக்குவிப்பது.
20. ஷரியத்தை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்றுகூறும் இவரின் பக்தர்கள் பெரும்பாலும் ஷரியத்தை கடைபிடிக்காமல் இருப்பதை கண்டுக்கொள்ளாமல் இருப்பது.
21. நானே எல்லாம் என்று கூறுவது.
22. எளிய ஆடை அணிந்து தான் மிகவும் ஏழ்மையானவன் என மற்றவர்களை நம்ப வைப்பது.
23. மார்க்க அறிஞர்கள், படித்த பண்பாளர்களை தன் காலில் விழவைத்து சாதித்துக்கொண்டிருப்பது.
24. நீதி நியாயம் இன்றி தீர்ப்பு வழங்கி நீதிபதியாய் காட்டிக்கொள்வது.
25. புதிய புதிய காரணங்களைக்கூறி பக்தர்களிடம் கோடிக்கணக்கில் பணம்பறிப்பது.
26. குர் ஆனுக்கு வேறு உள் அர்த்தங்கள் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே அந்த உள் அர்த்தத்தை இதுவரையிலும் சொல்லாமல் இருப்பது.
27. இறைவனின் உண்மைத்தத்துவத்தைக் கூறுகிறேன் என்று ஒன்றுமே இல்லை என்று கூறுவது.
28. அல்லாஹ் என்கிற பெயரைவிட இவரின் பெயரையே அதிகம் பக்தர்களை உச்சரிக்க வைத்தது.
29. தொழாமல் இருக்கும் பக்தர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது.
30. ஜும்மால்லாம் சும்மா என்று கூறி ஜும்மா தொழுகைக்கு புதிய விளக்கம் கொடுத்தது.
31. நானே பக்தர்களை தேடி வருகிறேன் என்று கூறி வருடம் முழுவதும் இந்தியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா என்று சொகுசுப்பயணம் மேற்கொள்வது.
32. பக்தர்கள் படும் கஷ்டங்களை எல்லாம் அறிந்துகொள்ளாமல், வசூல் வேட்டையாடுவது.
33. பாவம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை, தன்னை அறியாமல் இருப்பது தான் பாவம் என்று கூறுவது.
34. இறைவனிடம் ஒன்றித்தல் தான் சுவர்க்கம் என்று சுவர்க்கத்திற்கு புதிய விளக்கம் கொடுத்தது.
35. ஒருவருக்கொருவர் போட்டி பொறாமைகளை வளர்ப்பது.
36. நானே சிவன், நானே ஏசு, நானே அல்லா என்று தன்னைத்தானே பறைசாற்றிக்கொள்வது.
37. உறவுகளைப் பிரிப்பது.
38. சகோதரர்களிடையே பிணக்கத்தை ஏற்படுத்துவது.
39. கணவன் மனைவியை பிரித்து வைத்து சாதித்தது.
40. பலவிதமான சாபங்கள் விட்டு பக்தர்களை பயமுறுத்துவது.
41. பக்தர்களின் மனதின் ஓட்டத்தை அறிவேன் என்று ஏமாற்றிக்கொண்டிருப்பது.
42. அவர் வீட்டில் வரும் முனிசிபாலிட்டி தண்ணீரைப் பாட்டிலில் பிடித்து ஜம்ஜம் நீர் என்று கூறும் பக்தர்களை கண்டிக்காமல் இருப்பது.
43. இவரை பின்பற்றக்கூடிய புதிய சமுதாயத்தை உருவாக்க முனைவது.
44. பெரிய ஞானிகள் யாராக இருப்பினும் துச்சமாக மதிப்பது.
45. ஆயிரம் வருடம் ஆனாலும் என்னைப்பற்றி யாராலும் அறிந்துகொள்ள முடியாது என்று புதிர் போடுவது.
46. என்னைப்பற்றி அறிந்து கொள்ள யாரேனும் முயலுவானேயானால் அவன் மதிக்கெட்ட மூடனாவான் என்று பறைசாற்றியது.
47. தனது இளமைப்பருவத்தில் தனது தந்தையின் ஜியாரத்திற்காக இந்தியா வந்து, இங்கே உள்ள சொத்துக்களைக் கண்டு தன்னை செய்காக நிலைநிறுத்திக்கொண்டது.
48. கீழக்கரைக்கரையச் சேர்ந்த ஒரு வலியுல்லா அவர்களின் பாடல்களை படித்து ஞானம் கற்றுக்கொண்டது.
49. அந்த வலியுல்லாவின் ஞானப்பாடல்களைத் தழுவியே தன்னுடைய பாடல்களில் சற்று திருத்தி எழுதியது.
50. தன்னை ஆளாக்கிய ஒரு பெரியவரை மற்ற பக்தர்களின் முன்னிலையில் அல்லாட வைத்து ரசித்தது.
51. பல ஞான புத்தகங்களை படித்து அதன் தழுவலில் நூற்களை எழுதுவது.
52. பக்தர்கள் மற்ற செய்குகளைப்பார்த்து அவர்களின் பால் சென்றுவிடுவார்கள் என்று பயந்து மற்ற செய்குகளை தனது பக்தர்கள் பார்க்கக்கூடாது என கட்டளையிட்டது.
53. பிடிக்காத பக்தர்களை பட்டப்பெயர்கள் கொண்டு அழைத்து ரசித்து கேலி செய்வது.
54. தன்னை ஆளாக்கிய ஒரு பெரியவர் நிறைவேற்றிய ஹஜ்ஜை, காபிர் செய்த ஹஜ்ஜு என்று பத்வா கொடுத்தது.
55. இவர் பெயரில் கஸீதா இயற்றி அதனை பக்தர்கள் ஓதிவருமாறு கட்டளை இடுவது.
56. பயமுறுத்தியே பக்தர்களை அடிமையாக்கிக்கொள்வது.
57. குர் ஆன் மற்றைய கிரந்தங்களிலிருந்து ஏதேனும் விளக்கம் கேட்டால், அவர்களை முறைத்து பயமுறுத்துவது.
58. வேறு அவ்லியாக்களையோ, நாதாக்களையோ கனவில் கண்டு அதை செய்குவிடம் தெரிவித்தால், அந்த பக்தரை தலைக்கணம் பிடித்தவன் என்று கூறுவது.
59. குடிகாரனிடமிருந்து வருமானம் வருவதால், அவனை முஸ்லீமைவிட சிறந்தவன் என்று கூறுவது.
60. செய்யது வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் குடிகாரராக இருந்தாலும், அவருக்கு மரியாதையும் கண்ணியமும் செய்ய வேண்டும் என்று கூறுவது.
61. மீலாது விழா என்கிற பெயரில் வருடா வருடம் பக்தர்களின் கஷ்டத்தைக்கூட அறியாமல், அவரின் வீட்டிற்கு கட்டாயமாக வரவழைப்பது.
62. "தானே தன்னில் தானானான்" என்று ஒன்றுமே புரியாத சுலோகத்தை பக்தர்களுக்கு வழங்கியது.
63. ஞான விளக்கத்தில் பக்தர்களை உயர வைக்கிறேன் என்று அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள பயத்தைப் போக்கியது.
64. பாராட்டு முகஸ்துதியை விரும்பி ரசிப்பது.
65. ஞானத்தைப்பற்றி பேசச்சொன்னால், கேலியும் கிண்டலும் செய்து பக்தர்களை பரவசமூட்டுவது.
66. பெருமானார் (ஸல்) அவர்களின் மீது நேசம் வைப்பதை விட தன் மீதே பக்தர்கள் அதிகநேசம் வைப்பதை மிகவும் விரும்புவது.
67. வஹ்ஹாபிகளை எதிர்க்கிறேன் என்று அடியாட்களை தம்முடன் அமர்த்திக்கொள்வது.
68. நோய்களை நீக்கக்கூடியவர் என்று பக்தர்கள் கூறுவதை அமைதியாக ஏற்றுக்கொள்வது.
69. ஆபத்துகளிலிருந்து காப்பாற்றக்கூடியவர் என்று பக்தர்கள் புகழ்வதை புன்முறுவலுடன் ரசிப்பது.
70. பெருமானார் (ஸல்) அவர்களின் அவதாரமே நான் தான் என்று பறைசாற்றிக்கொள்வது.
71. இவரே கிப்லா என்று கூறி இவரைச் சுற்றிவரும் பக்தர்களை ஊக்குவிப்பது.
72. இவரின் வீட்டிற்கு சென்றுவிட்டு வந்தாலே ஹஜ்ஜுக்கடமை முடிந்து விட்டது என்று கூறுமளவிற்கு பக்தர்களை மடமையின்பால் இழுத்துச்செல்வது.
73. பகுதாதில், பாரதத்தில் மாறி மாறி தோன்றுவேன் என்று கூறி பக்தர்களுக்கு பக்திப்பெருக்கூட்டுவது.
74. இவரிடம் பையத் பெற்றால் பாவங்கள் நீங்கும் என பகர்வது.


சகோதரர்களே! மேற்கண்ட இந்த செய்திகளை தீர விசாரித்த பின்புதான் இங்கே பதிவு செய்திருக்கின்றேன். இது குறித்த உங்களின் கருத்துகள் மிகவும் வரவேற்கப்படுகிறன.

வலைத்தளம் செல்ல

http://ensabai.blogspot.com

1 கருத்து:

  1. காலில் விழ மறுத்ததால் தலாக்!
    சேது கவி ஜவ்வாது புலவர், வள்ளல் ஜமால் முஹம்மது வழிவந்த ஈரோடு எம்.கே. ஜமால் முஹம்மது.
    1978-ல் எனது சிறிய தந்தையார் மறைந்த எஸ்.ஏ. அப்துஸ்ஸலாம், மறைந்த பெரியவர் ஹாஜி அப்துல் கரீம் ஜமாலி ஹளரத் ஆகியோர் சிலோன் மவ்லானா என்பவரை அறிமுகப்படுத்தினர்.
    அவர்களில் எங்கள் பெற்றோரும் உற்றாரும் நானும் (அன்று எனக்கு வயது 18) அவர் காலில் விழுந்து அவரை வணங்கிய என்னை மன்னித்தருள்வாய் யா அல்லாஹ்!
    1991-ல் எனக்கு திருமணம் நடந்தது. அந்த சிலோன் மவ்லானா எங்கள் வீட்டிற்கு வருகை தந்திருந்த போது காலில் விழும் பழக்கம் எங்களுக்கு வழக்கமானதால் விழுந்தோம். என் முதல் மனைவி காலில் விழாததால் 08 12 1996-ல் எனக்கும் எனது மனைவிக்கும் பிரிவு ஏற்பட்டது.
    சிலோன் மவ்லானாவை சந்திக்கும் போதெல்லாம் ''நீ அவளை தலாக் விடாவிட்டால் என்னிடம் வரவேண்டாம். 'துஆ' செய்ய மாட்டோம்'' என்று சொன்னதால், நானும் அவரது சொல் கேட்டு மதியிழந்து எனது மனைவிக்கு மனவிலக்கு கொடுத்து விட்டேன். என்னைப்போன்று எத்தனையோ நபர்கள் இதுபோன்று மனவிலக்கு கொடுத்துள்ளார்கள். எனவே யா அல்லாஹ், எங்கள் பிழையை பொருத்தருள்வாயாக!

    (சத்தியப்பிரகடனம் மாத இதழ், செப்டம்பர் 2009, 51 ஆம் பக்க கட்டுரையிலிருந்து)
    நன்றி: முஸ்லிம் முரசு, நவம்பர் 2009

    Source :http://www.nidur.info/index.php?option=com_content&view=article&id=1154:2009-11-19-08-51-13&catid=37:2008-07-26-14-12-36&Itemid=58

    பதிலளிநீக்கு

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...