11/18/2010

தியாக திருநாள்

தியாக திருநாள் வாழ்த்துக்கள்!
எல்லா புகழும் இறைவனுக்கே!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால்
நமது பள்ளியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
சிறப்பாக நடைபெற்றது. காலை 7.15 நிமிடத்திற்கு
தொழுகை என அறிவிப்பு கொடுத்து,
அதன்படி மக்கள் வந்தனர்.



சரியாக 7.20 மணிக்கு தொழுகை விளக்கம் கொடுத்து தொழுகை நடந்தது.
தொடர் மழையின் காரனமாக திடலில் தொழுகை வைக்க முடியவில்லை,
ஆகவே, தொழுகை பள்ளியில் நடைபெற்றது.
புதிய பள்ளியில் ஆண்களும், பழைய பள்ளியில் பெண்களும்,
தொழுதனர். பெண்கள் அதிகமாக வந்ததால் கூடுதலாக பெண்களுக்கு
இடங்கள் அர்ரஹ்மான் பள்ளியின் வகுப்பறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
தொழுகை நடத்த சகோ. மீரான் அவர்கள் வந்து இருந்தார்.
எல்லா புகழும் இறைவனுக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...