12/31/2013

மலேசியாவில் உள்ள அழகிய பள்ளிவாசல்


அழகிய பள்ளிவாசல்கள்





 செனகலில் உள்ள பள்ளிவாசல்

சிந்திக்க ஒரு நபிமொழி

நபி صلى الله عليه وسلم அவர்கள்
 இந்த சமுதாயத்தின் வழிகேட்டைப்பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்.
“நீங்கள் உங்கள் முன்னோர்களின் வழிமுறைகளை
 ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள்.
 எதுவரை என்றால் அவர்கள் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால்
 நீங்களும் அதனுள் நுழைவீர்கள்” என்று.அதற்கு நாங்கள் (நபித்தோழர்கள்)
 “அவர்கள் யகூதி, நஸரானிகளா? என்று கேட்டதற்கு,
 வேறு யார் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அபூஸயீதுல் குத்ரீ(ரலி) நூல்: முஸ்லிம்-இல்ம், புகாரி-இஃதிஸாம்.

நபிமொழிகள் தொழுகை 6

 ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து,
 " ஆட்டிறைச்சியை உண்பதால்
 உளூச் செய்ய வேண்டுமா?" என்று கேட்டார்.
 அதற்கு நபி(ஸல்) அவர்கள்
  நீ விரும்பினால் உளூச் செய்து கொள்!
விரும்பினால் உளூச் செய்யாமல் இருந்து கொள்!!
 என்று கூறினார்கள்.
ஒட்டகத்தின் இறைச்சியை உண்பதால் நாங்கள் உளூச் செய்ய வேண்டுமா?
 என்று அவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால்
 உளூச் செய் என்று நபி(ஸல்) விடையளித்தார்கள்.
 
 அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா(ரலி)
 நூல் : முஸ்லிம் 588

12/24/2013

நபிமொழிகள் தொழுகை 5

 குளிர் தாங்க முடியாத போது தயம்மும் செய்தல்

 தாதுஸ்ஸலாஸில் எனும் இடத்தில் நடந்த போரில்
 குளிராக இருந்த ஒரு இரவில் எனக்குத் தூக்கத்தில் விந்து
 வெளியானது. நான் குளித்தால் நாசமாகி விடுவேன் என்று அஞ்சினேன்.
 எனவே, தயம்மும் செய்து என் சகாக்களுக்கு சுப்H தொழுவித்தேன்.
 இதை நபி(ஸல்) அவர்களிடம் (பின்னர்) தெரிவித்தேன்.
 அம்ரே! உமக்கு குளிப்பு கடமையாக இருந்த போது உமது சகாக்களுக்குத்
 தொழுவித்தீரா? என்று நபி(ஸல்) கேட்டனர்.
 குளிப்பதற்கு தடையாக இருந்த காரணத்தை அவர்களிடம் கூறினேன்.

 உங்களை நீங்களே  மாய்த்துக்கொள்ளாதீர்கள். அல்லாH உங்கள் மீது
 இரக்கம் உள்ளவனாக இருக்கிறான் என்று அல்லாH கூறுவதை நான்
 செவியுற்றுள்ளேன் (4:29) என்று விளக்கினேன். இதைக்கேட்ட
 நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள். வேறு எதையும் கூறவில்லை.
 அறிவிப்பவர் ; அம்ரு பின் அல் ஆஸ் (ரலி)
 நூல்கள் : அபூதாவூத் 283 , அகமத் 17144.

12/18/2013

தொழுகை நபிமொழிகள் 4

இரண்டு ரக் அத்கள் தொழுதல்

 எனது உளூவைப் போல் யார் உளூச் செய்து
 வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல்
 இரண்டு ரக் அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள்
 மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர்; உஸ்மான் (ரலி)
 நூல்: புகாரி 160

இறைவனின் அருட்கொடைகள்


விளிஞ்ஞம் பள்ளிவாசல்

 திருவனந்தபுரம் அருகே உள்ள
 விளிஞ்ஞம் பள்ளிவாசல்

12/11/2013

நபிமொழிகள் தொழுகை 3

 "கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது
 நானும், நபி(ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்தில்
 ஒன்றாகக் குளித்திருக்கின்றோம்" என்று ஆய்ஷா (ரலி)
 அறிவிக்கின்றார்கள்.

 நூல்: புகாரி (263)


12/04/2013

நபி மொழிகள் தொழுகை 2

 கடல் நீரில் உளூச் செய்யலாமா?

 நபி(ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது.
 அதற்கு அவர்கள் "அதன் தண்ணீர் தூய்மையானது;
 அதில் செத்தவையும் உண்ண அனுமதிக்கப்பட்டவை"
 என்று பதிலளித்தார்கள்.
 அறிவிப்பவர் : ஜாபிர்(ரலி)
 நூல் : இப்னுமாஜா 382

11/28/2013

நிழல் தரும் அழகிய மரங்கள்


நமது பள்ளி வளாகத்தில் நேற்று சிறிய செடிகளாக
 மரங்கள் வைத்தோம்.. ஆனால், அவை இன்று,
 நிழல் குடை போல
 நமது பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ளது.
 எல்லா புகழும் இறைவனுக்கே!

11/27/2013

அழகான பள்ளிவாசல்கள்


நபிமொழிகள் தொழுகை

நாம் இதுவரை வாசிக்காத, கேட்டிராத,
 இல்லை நாம் தெரிந்து மறந்த சில
 தொழுகை தொடர்பான நபிமொழிகளை
 இந்த தொடரில் பார்க்கலாம்.

 ஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபி(ஸல்)அவர்கள்
 கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும்போது
 அவர் குர் ஆனை கற்று, அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல்
 உறங்கியவர் என்று கூறினார்கள்.
 அறிவிப்பவர்  ஸமுரா (ரலி)
 நூல் புகாரீ 1143

11/23/2013

வெள்ளிக்கிழமை குத்பா பேரூரை

 வெள்ளிக்கிழமை குத்பா பேரூரை

 இந்த வாரம் வெள்ளிக்கிழமை
 நமது பள்ளியின் இமாம் அய்யூப் அல் அன்சாரி அவர்கள்
 'இறைவனின் சட்ட திட்டங்களை பேணுவோம்'
 என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
 இந்த கால கட்டத்திற்கு ஏற்ற தலைப்பு என்று சொல்லலாம்.
 ஏனென்றால், இப்போது பலரிடம் நாம் இறைச்செய்திகள்
 எடுத்துச் சொல்லும் போது
 அவர்கள் என்ன சொல்கிறார்கள்.. அதெல்லாம் சரிதான்?
 ஆனால், இந்த காலத்திற்கு இதுவெல்லாம் சரியா வருமா?
 இது அவர்களின் ஈமானின் பலவீனத்தைக் காட்டுகிறது.
 ஏனென்றால் இஸ்லாம் என்பது வாழும் அற்புதம்.. இது எல்லா காலத்திற்கும் பொருந்தும்.

11/20/2013

வாசிக்கும் பழக்கம்

 அன்பார்ந்த சகோதர... சகோதரிகளே

 நமது பள்ளியில் நிறைய குர் ஆன் மொழி பெயர்ப்புகளும்
 அண்ணலாரின் பொன் மொழிகளும் உள்ளது.
 நமது மார்க்க கல்விக்கும் வளர்ச்சிக்கும்,
 புத்தகத்தில் மார்க்க கல்வி பயில் விரும்பும் சகோதரர்களுக்கும்
 இவை மட்டும் போதுமா என்றால் போதாது..
 ஆகவே இன்னும் நல்ல மார்க்க சிந்தனையுள்ள புத்தகங்கள் வாங்கவும்
 நமது பள்ளியில் உள்ள நூலகம் விரிவடையவும்
 கல்வி பணிக்காக இந்த உதவிகள் செய்து
 இரு உலகிலும் நண்மை அடைய உங்களின் ஆதரவு தேவை..

நபி மொழிகள்

“மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விடுங்கள்!” (நபிமொழி) அறிவிப்பவர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ


“அல்லாஹ்வின் தூதரே! தாடியை யூதர்கள் சிரைக்கின்றனர்’ மீசையை(ப் பெரிதாக) வளர்க்கின்றனர்” என்று நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது, “நீங்கள் மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விட்டு விடுங்கள்! யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ உமாமா ரழியல்
லாஹு அன்ஹு நூல் : அஹ்மத்




சொர்க்க வாசிகளின் பண்புகள்

“அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுவார்கள். உறுதிப்படுத்திய பிறகு அவ்வுடன்படிக்கைகளை முறிக்க மாட்டார்கள். மேலும், அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், எந்தெந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கின்றார்கள். தம் அதிபதிக்கு அஞ்சுவார்கள். மேலும், கடுமையான முறையில் தம்மிடம் கணக்குக் கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள். மேலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில், தம் இறைவனின் உவப்பை நாடி பொறுமையைக் கைக்கொள்கிறார்கள்; தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்கள். மேலும், தீமையை நன்மையைக் கொண்டு களைகின்றார்கள். மறுமையின் நல்ல முவு இவர்களுக்கே உரிதானது.” (திருக்குர்ஆன் 13 : 20 22)
இந்த வசனங்களில் சொர்க்கவாதிகளைக் குறித்து ஒன்பது வகையான பண்புகள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!
1. வாக்குறுதியை நிறைவேற்றல் “அஹ்தில்லாஹ்”எனும் சொல் இடம் பெற்றுள்ளது. இதற்கு “அல்லாஹ்வின் வாக்குறுதி’ என்று பொருளாகும். மனிதர்கள் அனைவரும் படைக்கப்படுவதற்கு முன் உயிரணுக்களாக இருந்த போது அல்லாஹ் வாக்குறுதி வாங்கினான். அதை 7 : 172இல் இறைவன் கூறிக் காட்டுகிறான். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அதாவது ஓர் இறைவனை ஏற்குமாறும், அவனுடைய கட்டளைக்குப் பணியுமாறும் இதன் மூலம் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
2. உடன்படிக்கையை முறிக்காதீர்கள் இங்கே உடன்படிக்கை என்பது, கொடுக்கல் வாங்கல், கடன், வியாபாரம், இரு நாடுகள், இரு குழுக்களிடையே எழுதப்படும் உடன்படிக்கை என எல்லாவற்றையும் குறிக்கிறது. நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்ததும் செய்த முதல் காரியம் அங்கு வாழ்ந்து வந்த யூதர்களோடு உடன் படிக்கை செய்துகொண்டார்கள். அதை முமையாக நிறைவேற்றுமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். சொர்க்கத்தைப் பெறுவதையே தங்களது இலட்சியமாகக் கொண்ட நபித்தோழர்கள் அந்த உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றினார்கள். ஆனால் யூதர்கள் அந்த உடன்படிக்கையை முறித்து இழிவையும் கேவலத்தையும் சந்தித்தார்கள் என்பது வரலாற்றுத் தெளிவு.
3. சேர்த்துக் கொள்வது சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவற்றைச் சேர்த்துக் கொள்வது என்பது உறவினர்களைச் சேர்த்துக் கொள்வதைக் குறிக்கும். உறவினர்களோடு சேர்ந்து வாழ வேண்டும். விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். இது ஒரு வகை. இன்னொரு வகை தொழுகைக்காக வரிசையாக (ஸஃப்) நிற்கும் போது தோளோடு தோள் சேர்த்துக் கொண்டு நிற்பதைக் குறிக்கிறது. சொர்க்கத்தைப் பெற விருப்பமா? அப்படியானால், தொழுகையில் வரிசைகளில் நிற்கும் போது காலோடு காலும் தோளோடு தோளும் சேர்ந்து நிற்க முயற்சி செய்யுங்கள்.
4. இறைவனை அஞ்சுவது வாக்குறுதியை நிறைவேற்றுவது, உடன்படிக்கையை நிறைவேற்றுவது, உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வது… என்று சொல்லிக் கொண்டு வரும் போது இறைவனை அஞ்சுதல் பற்றிப் பேச வேண்டிய காரணம் என்ன? என்னதான் உடன்படிக்கைகளை நிறைவேற்றி உறவினர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் இறைவனை அஞ்சுவதை மட்டும் விட்டு விடக்கூடாது. அதனால் ஓர் அலட்சியம் வந்து விடலாம். எனவே, இறைவனை அஞ்சுமாறு வலியுறுத்தப்படுகிறது.
5. கேள்விக் கணக்கின் கடுமையைப் பயப்படுவது கேள்விக் கணக்கு என்றாலே பயப்பட வேண்டிய ஒன்று தான். அதிலும் கடுமையான கேள்விக் கணக்கு என்பது ஒவ்வொரு முஸ்லிமுடைய உள்ளத்தையும் போட்டு உலுக்கி எடுக்கிறது. இந்த உலகிலேயே இறைவனிடத்தில் அழுது மன்றாட வேண்டிய மனிதர்களாக நாம் இருக்கிறோம். அதிலும் சொர்க்கத்தைப் பெற இந்த குணம் மிகவும் அவசியம். எனவே கேள்விக் கணக்கின் கடுமையை அஞ்சுவோமாக.
6. பொறுமையை மேற்கொள்வது பொறுமை, சகிப்புத் தன்மையை மூன்று வகைகளாக விரிவுயாளர்கள் பிரிகின்றனர். அவை : அஸ்ஸப்ரு அலல்பலாயி சோதனைகளின் போது பொறுமையைக் கடைப்பிடிப்பது. அஸ்ஸப்ரு அலத்தாஅதி நன்மை புரிவது பொறுமை மேற்கொள்வது. இன்று தொழுகைகளை அவசர அவசரமாக மக்கள் தொழுது விட்டுப் பள்ளிவாசல்களைக் காலி செய்யக் காரணம் என்ன? நின்று நிதானமாகப் பேணுதலாகத் தொழ வேண்டிய தொழுகைகளை ஏதோ பல்டி அடித்து விட்டுச் செல்வதைப் போல் செல்லக் காரணம் என்ன? “ரொம்ப நீட்டாதீங்க இமாம்’ என்று கூறுவது பொறுமை இல்லாததே. ஆம்! பொறுமை என்றால் அது நற்செயல்கள் புரிதற்கும் அவசியம். பொறுமை இல்லையெனில் ஒரு நோன்பு கூட யாராலும்ம் வைக்க முயாது. எனவேதான் பல வழிபாடுகளில் நோன்பும் பொறுமையும் இணைகின்றன. ஆக, நற்செயல்கள் புரிவும் பொறுமை அவசியம்.  தீமையை விடுவது என்பதும் இலேசுபட்ட காரிமல்ல. அதற்கும் மலை போன்ற நிலை குலையாமை தேவைப்படுகிறது. பீடி, சிகரெட், வெற்றிலைப் பாக்கு, பான்பராக், சினிமா போன்றவற்றை விட்டுத் தொலைப்பதற்கும் பொறுமை அவசியம். உலகில் இந்தத் தீமைகள் பெருகக் காரணம் மனிதர்களிடத்தில் பொறுமை இல்லாததே.
7. தொழுகையைக் கடைப்பிடிப்பது தொழுகையைக் கடைப்பிடித்துப் பேணுதலாகத் தொழ வேண்டியது முஸ்லிமான ஆண் பெண் அனைவர்மீதும் நாள்தோறும்  கட்டாயமானதாகும். ஆனால், இன்று நிலை என்ன? ஒரு வீட்டில் வாலிப, இளைய பருவத்திலுள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க வயது முதிர்ந்த கிழவன் கிழவி மட்டும் எழுந்து தொழுவதை இன்னும் பல இடங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். யார் எழுந்து கட்டாயம் தொழ வேண்டுமோ அவர்கள் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்க, யார் தள்ளாத வயதில் உள்ளார்களோ அவர்கள் எழுந்து தொழுது வருகிறார்கள்.
8. தான தர்மங்களை வழங்குதல் வெளிப்படையாகவும் மறைவாகவும் எப்படியும் தான தர்மங்களைச் செய்யலாம் என இந்த வசனம் தெரிவிக்கிறது. ஜகாத், ஸதகா போன்ற தான தர்மங்களை வாரி வழங்க செல்வந்தர்கள் முண் வர வேண்டும்.  ஜகாத் மட்டுமின்றி, என்னென்ன நற்செயல்களுக்கு வாரிவழங்கும்படி மார்க்கம் கட்டளையிட்டுள்ளதோ அவற்றுக்கெல்லாம் இறைவனின் திருப்தியை நாடி செல வழிக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.
9. தீமையை நன்மையால் அகற்றுவது அதாவது ஒருவர் நமக்குத் தீமை செய்தால் பதிலுக்கு நாமும் தீமை செய்யாமல் அவருக்கு நன்மையே செய்ய வேண்டும். நினைத்துப் பாருங்கள். இப்படிப்பட்ட சமுதாயம் உருவாகி விட்டால் உலகமே இஸ்லாத்தைக் கொண்டாடும் நாள் வந்து விடும். அசுத்தத்தை அசுத்தத்தால் சுத்தம் செய்ய முடியாது. மாறாக, அசுத்தத்தைத் தண்ணீரால் தான் சுத்தம் செய்ய முயும். ஆக, சொர்க்கத்தைப் பெற வேண்டுமா? உங்களுக்குத் தீமை செய்பவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்யுங்கள். சொர்க்கத்தைப் பெறுவீர்கள் என்கின்றன மேற்கண்ட வசனங்கள். வழியைச் சொல்லி விட்டான் இறைவன்; அந்த வழியில் நடைபோட நாம் தயாரா?

11/11/2013

குத்பா உரை

 நமது பள்ளியின் இமாம் அவர்கள்
 இந்த வாரம் குத்பா சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
 இதில் இஸ்லாம் ஒரு அழகான மார்க்கம்.
 மெண்மையான மார்க்கம்.
 இஸ்லாம் ஒரு போதும் வன்முறையை விரும்புவதில்லை
 என அழகான சொற்பொழிவாக இருந்தது.




 அஸர் தொழுகைக்குப்பின் தினமும் 
 நமது பள்ளியில் அண்ணலாரின் பொன்மொழிகள் வாசிக்கப்படுகிறது.
 அதன் ஒரு பதிவு.

11/01/2013



 நீண்ட இடைவெளிக்குப்பின்
 ஒரு அற்புதமான உரையாக
 அழைப்பு பணியின் அவசியம் இருந்தது,
 நல்ல சிந்தனைகள்,
 அழகான உச்சரிப்புகள்..
 இறைவேதம், பெருமானாரின் பொன்மொழிகள்.




அன்பார்ந்த சகோதரர்களே

 நமது மாதாந்திர சொற்பொழிவு


 அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில்
 சகோ. A.G.முகம்மது அவர்களும்,
 மரண சிந்தனை என்ற தலைப்பில்
 S.கமாலுத்தீன் மதனீ அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
 ஏராளனமான சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.
 சில நிமிடங்கள் மட்டும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 எல்லா புகழும் இறைவனுக்கே!

10/30/2013

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!

 வட கிழக்கு பருவ மழை
 அனைத்து பகுதிகளிலும்
 நல்ல மழை பெய்கிறது.
 ஆனால், நமது ஊர், மற்றும் சுற்று வட்டாரங்களில்
 மழை குறைவாக காணப்படுகிறது.
 ஆகவே நல்ல மழை பெய்

ய இறைவனிடம் பிரார்த்தனைகள்  செய்வோம்.

தாவா


(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விளக்கிக் கொண்டும் இருக்கவும்; இத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 3:104)

10/24/2013

Taipei Grand Mosque

The Taipei Grand Mosque is the largest and most famous mosque in Taiwan with a total area of 2,747 square meters.
 Located in the Da'an district of Taipei City,
 it is Taiwan's most important Islamic structure and was registered as a historic landmark on 29 June 1999 by the Taipei City Government.

10/23/2013

அண்ணலாரின் பொன்மொழிகள்

“(உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார்.   இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்.’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள்   கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.
“இப்னு உமர் (ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும்   அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட   ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி)   ‘நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள்   ‘இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில்   சாப்பிடுவான்’ எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்:   நாஃபிஉ (ரஹ்), ஆதாரம்: புகாரி.

அண்ணலாரின் பொன்மொழிகள்

ஒரே மூச்சில் நீர் அருந்தாமல் மூன்று முறை   மூச்சுவிட்டு அருந்த வேண்டும்!
(என் பாட்டனார்) அனஸ் (ரலி) பாத்திரத்தில் (பருகும்   போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்தார்கள். நபி (ஸல்)   அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்ததாகக் கூறினார்கள். அறிவிப்பவர்:   ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் (ரஹ்), ஆதாரம்: புகாரி

அண்ணலாரின் பொன்மொழிகள்

உங்களில் எவரும் சபையில் வீற்றிருப்பவரை எழுந்திருக்கச் செய்து அங்கு அமரவேண்டாம். எனினும் நீங்கள் நெருங்கி அமர்ந்து இடத்தை விசாலமாக்கி (அவருக்கு இடம்) அளியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விசாலாமாக்கி வைப்பான் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி,முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

அண்ணலாரின் பொன்மொழிகள்

ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் கையில் தடியை ஏந்தியவர்களாக எங்களிடம் வந்தனர். அப்பொழுது நாங்கள் அவர்களுக்(கு மரியாதை செய்வதற்)காக எழுந்துவிட்டோம். அதற்கு அவர்கள் ‘அரபியல்லாதவர்களில் சிலர், சிலருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எழுந்துவிடுவது போன்று நீங்கள் எழுந்து விடாதீர்கள்’ என்று கூறினர். அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி) நூல்: அபூதாவூத்

10/14/2013

ஹஜ்ஜுப் பெருநாள்!

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீ கலக லப்பைக்,
இன்னல் ஹம்த வன்னிஃ மத லக்க வல் முல்க் லாஷரீக்க லக்
பொருள்: இறைவா உன் அழைப்பிற்கிணங்கி இதோ வந்தேன்,வந்தேன் இறைவா.
உனக்கிணை யேதுமில்லை வந்தேன் இறைவா!! நிச்சயமாக சர்வ புகழும் எல்லா அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன.  உனக்கேதும் இணையில்லை.
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இறைவா! முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள் மீதும் அனுக்கிரகம் புரிவாயாக. நீ இபுறாஹீம் நபி மீதும் அவர்களது கிளையார் மீதும் அனுக்கிரகம் புரிந்தவாறு. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும்  அவர்கள் கிளையார்கள்மீதும் அபிவிருத்தி செய்வாயாக, நீ இபுராஹீம் நபி அவர்கள்மீதும் அவர்கள் கிளையார்கள்மீதும் அபிவிருத்தி செய்தவாறு நிச்சயம் புகழுக்குரியவனும் தலைமையுடையவனுமாக இருக்கின்றாய்.
இஸ்லாமிய மாதங்களில், வருடம் இரண்டு நாட்களை நாம் சங்கை பொருந்திய பெருநாட்களாக கொண்டாடி வருகிறோம். ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையை நோன்புப் பெருநாளாகவும், துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது பிறையினை ஹஜ்ஜுப் பெருநாளாகவும் நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.
ஹஜ்ஜுப் பெருநாள் என்றதுமே நமக்கு இரண்டு நபிமார்களைப் பற்றி நினைவிற்கு வரும். அல்லாஹ்வின் உற்ற தோழர் என்ற கருத்தில் அழைக்கப்படும் “கலீலுல்லாஹ்” என்ற பெயருக்கு சொந்தக்காரரான நபி இபுறாஹீம் (அலை) அவர்களும், அவர்களின் அருமை மகனார் அருந்தவப் புதல்வர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் நம் நினைவில் நிற்கும் அந்த இரண்டு நபிமார்களாவர். அல்லாஹ்வின் அருள்மறையாம் திருகுர்ஆனை கருத்தூன்றி ஆராயும்போது நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய தியாகவாழ்வு பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய அற்புத வரலாறாகும். நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும், துன்ப துயரங்களையெல்லாம் அவர்கள் பொறுமையுடன் சகித்திருந்து இறைவனிடம் பிரார்த்தித்து வெற்றி பெற்ற வீர வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகும். நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை சுருக்கமாக பார்ப்போம்.
நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் தம் இளம் பிராயத்திலேயே ஓரிறை கொள்கையான இஸ்லாத்தை எடுத்து சொன்னதின் காரணத்தினால், அவருடைய தந்தையாராலேயே வீட்டைவிட்டும் விரட்டப்பட்ட சோதனை. அல்குர் ஆன் 19:46
கொடுங்கோல் ஆட்சி புரிந்த மன்னன் நம்ரூது என்பவனை எதிர்ததினால் நெருப்பு குண்டத்தில் எறியப்பட்ட சோதனை.அல்குர்ஆன் 21:68,69
திருமணமாகி பல்லாண்டு காலம் பிள்ளைப்பேறு இன்றி பரிதவித்த சோதனை. அல்குர்ஆன் 37:100,101
முதிர்ந்த பருவத்தில் உள்ள இபுறாஹீம் (அலை) அவர்களுக்கு நபி இஸ்மாயீல் (அலை) பிறக்கிறார்கள். சிறிது காலத்திற்கு பின்பு அல்லாஹ்வின் உத்தரவின் பேரில் தம் மனைவி ஹாஜிரா அம்மையாரையும், மகன் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களையும் பாலைவனத்தில் தகிக்கும் சுடுமணலில் தன்னந்தனியாக விட்டுப் பிரிந்த சோதனை.  புகார,ி அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு தம் அருமை மைந்தரான நபி இஸ்மாயீல்(அலை) அவர்களை அறுத்து பலியிட துணிந்த சோதனை. அல்குர்ஆன் 37:02,03
    ஆக வாழ்நாளில் பல அடுக்கடுக்கான சோதனைகளை சந்தித்தும்கூட மனம் தளராமல் எல்லாம் வல்ல இறைவனிடமே பிரார்த்தனை செய்து பொறுமையுடன் துன்பங்களை சகித்து கொண்டிருந்ததினால் சோதனைகளெல்லாம் சாதனையாக மாறிய சாகஸ வரலாற்றை குர்ஆனில் காணலாம். கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு முன்பாக நடந்த சில நிகழ்ச்சிகளை குர்ஆன் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. அந்த பாலைவன சுடுமணலில் அன்னை ஹாஜிரா அவர்கள் ஒவ்வொரு மலைக்குன்றின் அடிவாரத்தில் தண்ணீரை தேடி ஓடிய அந்த நிகழ்ச்சியை நாம் நினைவு படுத்தி கொள்வதற்காகத்தான் இப்போது புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகள் சபா, மர்வா என்ற மலைக்குன்றுகளிடையே ஓடிவருவதை அல்லாஹ் கடமையாக்கி வைத்திருக்கிறான். அன்றைய தினம் அன்னை ஹாஜிராவும் அவர்தம் புதல்வர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் தாகத்தை தீர்த்து கொள்ள உதவிய அந்த தண்ணீர் தடாகம் தான் இன்றளவும் ஜம் ஜம் என்ற பெயரில் ஹாஜிகளுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீராக விளங்குகிறது.
நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் தம் புதல்வரை அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு பலியிட துணிந்தபோது, எல்லாம் வல்ல இறைவன் ஒரு ஆட்டை அனுப்பி நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு பகரமாக குர்பானீ கொடுக்க செய்ததுடன், இனி மறுமை நாள் வரை வாழும் வசதியுள்ள முஸ்லிம்கள், குர்பானீ கொடுக்கும் பழக்கத்தையும் கடமையாக்கி வைத்தான்.
எல்லாவற்றிற்கும் மேலாக நமது உயிரினும் இனிய நபி (ஸல்) அவர்களை நபி இபுறாஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர் ஆன் 3:95
நபி இபுறாஹீம் (அலை) அவர்களது செயலை பின்வரும் காலத்தவரும் (மறுமை நாள் வரை) நினைவு கூறுவதை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர்ஆன் 37:108
அன்பு சகோதர சகோதரிகளே, ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தின் உயரிய காரணங்களையும் தத்துவார்த்தங்களையும் ஓரளவு சுருக்கமாக புரிந்து கொண்டோம். இன்னும் அதிக விளக்கத்திற்கு திருக்குர் ஆனையும் ஹதீஸ் நூல்களையும் பார்வையிடும்படி கேட்டு கொள்கிறோம்.
நபி இபுறாஹீம் (அலை) அவர்களது வாழ்வில் ஆரம்பம் முதல் முடிவு வரை ஏற்பட்ட துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் நமக்கு ஒரு மகத்தான படிப்பினை இருக்கிறது. அதுதான் எத்தகைய கடும் சோதனை ஏற்பட்டாலும் அல்லாஹ்வை பிரார்த்தித்து பொறுமையுடன் ஐவேளை தொழுகையையும் மேற்கொண்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம் என்பதே அந்த படிப்பினையாகும்.
ஹஜ்ஜுப்பெருநாள் அன்று பள்ளிவாசலுக்கு சென்று பெருநாள் தொழுகை முடித்ததும் கடமை முடிந்தது என்று நினைக்காமல் ஹஜ்ஜுப் பெருநாள் சிந்தனைகளை குறிப்பாக, நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கை பாதையினை நெஞ்சில் நிறுத்தி உறவினர், நண்பர்களிடையே ஒருவருக்கொருவர் உபதேசம் செய்ய வேண்டும். வசதிமிக்கவர்கள் குர்பானீ கொடுக்க வேண்டும். இதை பற்றி விரிவாக குர்பானீ சட்டத்திட்டத்தில் காணலாம். மேலும் ஹஜ்ஜு மாதம்பிறை 9 அதாவது அரஃபா தினம் என்றழைக்கப்ப்டும் நாளில் சுன்னத்தான நோன்பு நோற்கவேண்டும். அதற்கு அரஃபா நோன்பு என்று நபி (ஸல்) அவர்கள் பெயர் சூட்டுகின்றார்கள். உடல் ஆரோக்கியம் நிறைந்த ஆண், பெண் இருபாலாரும் சுன்னத்தான இந்த நோன்பை நோற்பதற்கு முயற்சி செய்யவேண்டும். அரஃபா தினத்தன்று நோற்க வேண்டிய நோன்பு பற்றி கீழ்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
அரஃபா தினத்தில் நோன்பு நோற்பது முந்தைய மற்றும் அடுத்த இரண்டு வருட பாவங்களையும் மன்னிக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல்கள்: முஸ்லிம், அபூதாவுது, திர்மீதி, இப்னுமாஜா அறிவிப்பவர்:அபூகதாதா (ரலி)
    ஆக வாழ்நாளில் பல அடுக்கடுக்கான சோதனைகளை சந்தித்தும்கூட மனம் தளராமல் எல்லாம் வல்ல இறைவனிடமே பிரார்த்தனை செய்து பொறுமையுடன் துன்பங்களை சகித்து கொண்டிருந்ததினால் சோதனைகளெல்லாம் சாதனையாக மாறிய சாகஸ வரலாற்றை குர்ஆனில் காணலாம். கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு முன்பாக நடந்த சில நிகழ்ச்சிகளை குர்ஆன் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. அந்த பாலைவன சுடுமணலில் அன்னை ஹாஜிரா அவர்கள் ஒவ்வொரு மலைக்குன்றின் அடிவாரத்தில் தண்ணீரை தேடி ஓடிய அந்த நிகழ்ச்சியை நாம் நினைவு படுத்தி கொள்வதற்காகத்தான் இப்போது புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹாஜிகள் சபா, மர்வா என்ற மலைக்குன்றுகளிடையே ஓடிவருவதை அல்லாஹ் கடமையாக்கி வைத்திருக்கிறான். அன்றைய தினம் அன்னை ஹாஜிராவும் அவர்தம் புதல்வர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் தாகத்தை தீர்த்து கொள்ள உதவிய அந்த தண்ணீர் தடாகம் தான் இன்றளவும் ஜம் ஜம் என்ற பெயரில் ஹாஜிகளுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீராக விளங்குகிறது.
நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் தம் புதல்வரை அல்லாஹ்வின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு பலியிட துணிந்தபோது, எல்லாம் வல்ல இறைவன் ஒரு ஆட்டை அனுப்பி நபி இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு பகரமாக குர்பானீ கொடுக்க செய்ததுடன், இனி மறுமை நாள் வரை வாழும் வசதியுள்ள முஸ்லிம்கள், குர்பானீ கொடுக்கும் பழக்கத்தையும் கடமையாக்கி வைத்தான்.
எல்லாவற்றிற்கும் மேலாக நமது உயிரினும் இனிய நபி (ஸல்) அவர்களை நபி இபுறாஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர் ஆன் 3:95
நபி இபுறாஹீம் (அலை) அவர்களது செயலை பின்வரும் காலத்தவரும் (மறுமை நாள் வரை) நினைவு கூறுவதை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர்ஆன் 37:108
அன்பு சகோதர சகோதரிகளே, ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தின் உயரிய காரணங்களையும் தத்துவார்த்தங்களையும் ஓரளவு சுருக்கமாக புரிந்து கொண்டோம். இன்னும் அதிக விளக்கத்திற்கு திருக்குர் ஆனையும் ஹதீஸ் நூல்களையும் பார்வையிடும்படி கேட்டு கொள்கிறோம்.
நபி இபுறாஹீம் (அலை) அவர்களது வாழ்வில் ஆரம்பம் முதல் முடிவு வரை ஏற்பட்ட துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் நமக்கு ஒரு மகத்தான படிப்பினை இருக்கிறது. அதுதான் எத்தகைய கடும் சோதனை ஏற்பட்டாலும் அல்லாஹ்வை பிரார்த்தித்து பொறுமையுடன் ஐவேளை தொழுகையையும் மேற்கொண்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம் என்பதே அந்த படிப்பினையாகும்.

ஹஜ்ஜுப்பெருநாள் அன்று பள்ளிவாசலுக்கு சென்று பெருநாள் தொழுகை முடித்ததும் கடமை முடிந்தது என்று நினைக்காமல் ஹஜ்ஜுப் பெருநாள் சிந்தனைகளை குறிப்பாக, நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்க்கை பாதையினை நெஞ்சில் நிறுத்தி உறவினர், நண்பர்களிடையே ஒருவருக்கொருவர் உபதேசம் செய்ய வேண்டும். வசதிமிக்கவர்கள் குர்பானீ கொடுக்க வேண்டும். இதை பற்றி விரிவாக குர்பானீ சட்டத்திட்டத்தில் காணலாம். மேலும் ஹஜ்ஜு மாதம்பிறை 9 அதாவது அரஃபா தினம் என்றழைக்கப்ப்டும் நாளில் சுன்னத்தான நோன்பு நோற்கவேண்டும். அதற்கு அரஃபா நோன்பு என்று நபி (ஸல்) அவர்கள் பெயர் சூட்டுகின்றார்கள். உடல் ஆரோக்கியம் நிறைந்த ஆண், பெண் இருபாலாரும் சுன்னத்தான இந்த நோன்பை நோற்பதற்கு முயற்சி செய்யவேண்டும். அரஃபா தினத்தன்று நோற்க வேண்டிய நோன்பு பற்றி கீழ்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
அரஃபா தினத்தில் நோன்பு நோற்பது முந்தைய மற்றும் அடுத்த இரண்டு வருட பாவங்களையும் மன்னிக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  நூல்கள்: முஸ்லிம், அபூதாவுது, திர்மீதி, இப்னுமாஜா அறிவிப்பவர்:அபூகதாதா (ரலி)

10/13/2013

அரபா நோன்பு


அரபா தினத்தில் நோன்பு நோற்பது
அதற்கு முந்திய வருடம், பிந்திய வருடம்
ஆகிய இரு வருடங்களின் பாவங்களுக்கு பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான்
என்று நான் நம்பிக்கை வைக்கிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் ; திர்மிதீ <680>

10/10/2013

இஸ்லாம் ஓர் அதிசயம்!

ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.


    இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன். ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா? அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. திருக்குர்ஆன் சரியில்லை என்று அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும். ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.


   
எல்லா பத்திரிகைகளும் பத்தி பத்தியாக செய்திகள் வெளியிடும். அப்பாவி முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு கொதித்தெழுவார்கள். துப்பாக்கி சூடுகளுக்குப் பழியாகி பிணமாவார்கள். இஸ்லாத்தை விமர்சித்த அந்த பெயர் தாங்கி முஸ்லிமுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிடும். ஒரு சிலர் ஆத்திரப்பட்டு கொலை மிரட்டல்கள் விடுவார்கள். உடனே அவனுக்கு பாஸ்போர்ர்ட் இல்லாமலேயே உலகப் பயனம் மேற்கொள்ளும் தகுதி கிடைத்துவிடும். அவனுக்காக அடைக்கலம் தர பெரிய பெரிய நாடுகள் முன் வருவார்கள். வல்லரசுகளின் அதிபர்கள் எல்லாம் அவனுக்கு விருந்துகளும், விருதுகளும் தந்து கெளரவிப்பார்கள். முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை; விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் இல்லை; கருத்து சுதந்திரம் இல்லை; முஸ்லிம்கள் என்றாலே அது ஒரு வெறிப் பிடித்த கூட்டம்; தீவிரவாத கூட்டம் என்றெல்லாம் உலக அரங்கில் பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.


    இஸ்லாத்தை எதிர்ப்பதுதான் கெளரவமான செயல் என்பதை நிலை நாட்டத்தான் இத்தனை ஆதரவுகள் தரப்படுகின்றன. இஸ்லாத்தை முஸ்லிம்களே எதிர்க்க வேண்டும் என்று சில முஸ்லிம் அதிருப்தியாளர்களை தூண்டத்தான் இத்தனை வஞ்சக நாடகங்களும் நடத்தப்படுகின்றன. ஆக அனைத்து  மீடியாக்களும் ஒன்று சேர்ந்து அல்லும் பகலும் பிரச்சாரம் செய்கின்றன. ஆனாலும் இஸ்லாம் தேய்பிறையாக மாறாமல் வளர் பிறையாக மின்னுகிறது. இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளிலேயே அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்லாம் வளருகின்றது.


   
எதிர்ப்புகள் வளர வளர, அப்படி இஸ்லாத்தில் என்னதான் குறைகள் இருக்கின்றன; நாமும் பார்ப்போமே என்று, இன்று இஸ்லாத்தை ஆராய முன் வருகிறார்கள். அவர்களுடை மனக்கண்கள் திறக்கின்றன. உலகில் இப்படி மனித குலத்தை ஒருங்கிணைக்கும் மார்க்கம் ஒன்று இருக்கின்றதா? அடடா இதுவரை எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு தூய்மையான மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே என்று வருத்தப்படுகிறார்கள். உண்மை என்னவென்று தெரிந்த பிறகு உடனே அதை அரவணைத்துக் கொள்கிறார்கள். இன்று இஸ்லாத்தை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் தங்களுக்கு தெரியாமல் இஸ்லாம் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்கள். எதிர்ப்புகளையும், எதிர்ப்பாளர்களையும் வைத்தே இஸ்லாம் பரவுகின்றதென்றால் இது ஒரு அதிசயமல்லவா?


    பத்திரிகைகள், சினிமா தொலைக்காட்சி, இசை இவை இல்லாமல் இன்று உலகில் எதுவும் பரவ முடியாது. இது இன்றைய உலக நிலை. மற்ற மதங்கள் அழகான பெண்களைக் காட்டி சீரியல் நாடகங்களையும் நடத்தி பட்டி மன்றங்களையும், திருவிளாக்களையும், தெருக்கூத்துகளையும் காட்டி இசையுடன் சேர்ந்த பாடல்களை பாடி பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தங்கள் மதங்களை வளர்க்க முயற்சிக்கின்றன. ஆனால் இத்தனைக்குப் பிறகும் இவைகளைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த மதத்தில் இணைந்ததாக செய்திகளை நாளிதல்களில் பார்க்க முடிகிறதா?


    ஒரு மதம் பரவ வேண்டுமானால் சிலைகள் அவசியம் வேண்டும். மதச் சின்னங்களைப் பரப்ப வேண்டும். இவையில்லாமல் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. ஆனால் சிலைகளும் இல்லாமல்; சின்னங்களும் இல்லாமல் இஸ்லாம் பரவுகின்றதே! இது ஆச்சயரியமில்லையா?

    இன்றைய பிரச்சார சாதனங்களுக்கு மூலதனமே பெண்கள்தான். விளம்பரத்தின் திறவுகோலும் தோற்று வாயுமாக இருக்கின்ற பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பிற்குத் திரைப்போட்டு மூடிவிட்டு இஸ்லாம் வளருகின்றதே… இசை கூத்துக்கு இங்கே இடமேயில்லை. மனிதன் விரும்பும் மனம்போல் வாழ இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை. மனம்போன போக்கில் ஒரு முஸ்லிம் வாழ முடியாது, இங்கு கட்டுப்பாடுகள் அதிகம். மக்கள் விரும்பும் விபச்சாரம், சூதாட்டம், மதுபானம், வட்டி இந்த நான்கையும் அறவே தடுப்பது இஸ்லாம் ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே.

    முஸ்லிம்களிடம் வல்லரசுகள் இல்லை. ஐ.நா சபையில் ஆதிக்கம் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லை. எங்கே பார்த்தாலும் முஸ்லிம்கள் தம் வீடுகளிலிருந்து துரத்தப்படுகிறார்கள், முஸ்லிம் என்று சொன்னாலேயே ஆபத்து வலிய வருகின்றது. ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே. முஸ்லிம்களின் கடவுளோ கண்களுக்குத் தெரியாது. அவர்களுடைய தலைவரின் (இறைத்தூதர்) படம்கூட அவர்கள் பார்த்ததில்லை.

    முஸ்லிம்கள் தொழுவதற்கு கைகால் கழுவ வேண்டும். சிறு நீர் கழித்தாலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குளிப்பு கடமையானால் (முழுக்கு) குளித்து விட்டுத்தான் இறை ஆலயத்திற்குள் நுழைய வேண்டும். தினந்தோறும் ஐந்து வேளை கட்டாயம் தொழ வேண்டும். இத்தனை சிரமங்கள், இத்தனை கஷ்டங்கள் இருப்பினும் இஸ்லாம் பரவுகின்றதே.

    தர்மம் செய்துதான் தீரவேண்டும் என்று எந்த மதத்திலும் கட்டாயமில்லை. ஆனால் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வருடா வருடம் ரூபாய்க்கு இரண்டரை சதவீதம் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து ஏழைகளுக்குக் கொடுத்தே தீர வேண்டும். இந்த சுமையையும் ஒரு முஸ்லிம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இஸ்லாத்தில் குற்றங்களுக்கு தண்டனை மிக கடுமையானவை. ஆனாலும் இஸ்லாம் பரவுகின்றதே! இது எப்படி சாத்தியமாகின்றது?

    இறைவன் தன்னுடைய திருமறையில் இப்படி கூறுகின்றான்;
    “அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)

   
உலகில் உள்ள மதங்கள் கடவுளுக்காக அல்லாமல், மதங்களுக்கே கடவுளை பயன்படுத்துகின்றன. கடவுளின் சட்டங்கள், கடவுளின் ஆட்சி வரவேண்டும் என்று கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும்தான். மாற்று மதத்தினர் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகத்தான் கடவுளை வணங்குகிறார்களே தவிர, கடவுளின் விருப்பங்கள் நிறைவேற அவர்கள் ஆசைப்படுவதில்லை. கடவுளை தங்கள் இனத்திற்கும் மதத்திற்கும் சொந்தமாக்க முயற்சி செய்கின்றார்களே தவிர, கடவுளை எல்லோருக்கும் பொதுவாக்க அவர்கள் விரும்புவதில்லை.

   
Universal god என்ற பரந்த நோக்கை குறுகிய மனப்பான்மையோடு, கடவுளையே சிறுமைப்படுத்த முயல்கின்றார்களே தவிர, இவர்கள் கூறும் மதங்களால் கடவுளுக்குப் பெருமையில்லை. மனித குலத்திற்காக மதம் சேவையாற்ற வேண்டுமே தவிர, மதங்களுக்காக மனித குலத்தைக் கூறு போடக்கூடாது. ஆக உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதை தவிர வேறு வழி கிடையாது.

   
இஸ்லாம் ஒன்றுதான் கடவுளை பெருமைப்படுத்தும் மதமாக (மார்க்கமாக) இருக்கின்றது. அது மட்டும்தான் தனக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ கற்றுத் தருகின்றது. கடவுளை அடைய அது ஒன்றுதான் வழியாய் இருக்கின்றது. போலிப் பொருள்களுக்குத்தான் போலியான விளம்பரங்கள் தேவை. சர்க்கரையை யாரும் விளம்பரம் செய்ய அவசியமில்லை. அதன் இனிப்பு சுவைத்தவர்களுக்கு நன்கு தெரிகின்றது. விளம்பரம் இல்லாமல் அது தானே விற்பனையாகிறது. அது போலத்தான் இஸ்லாமும். நாம் சர்க்கரை உள்ள இடத்தைக் காட்டினால் போதும். மக்கள் தானே அதைப் பெற்றுக் கொள்வார்கள். இன்பம் அடைவார்கள்.

10/06/2013

Eid Al Adha holidays

Dubai: The UAE Cabinet has approved a seven-day holiday for the public sector to mark Eid Al Adha, from Sunday, October 13, to Saturday, October 19. Work will resume on Sunday, October 20.

The private sector will get Eid holidays for three days, from Monday, October 14, to Wednesday, October 16, the Labour Ministry announced on Sunday.

The Eid Al Adha holidays were approved during the Cabinet meeting chaired by His Highness Shaikh Mohammad Bin Rashid Al Maktoum, Vice-President and Prime Minister of the UAE and Ruler of Dubai, in the presence of Shaikh Mansour Bin Zayed Al Nahyan, Deputy Prime Minister and Minister of Presidential Affairs, and Lieutenant General Shaikh Saif Bin Zayed Al Nahyan, Deputy Prime Minister and Minister of Interior.

According to a circular issued by Humaid Mohammad Obaid Al Qutami, Minister of Education, the public sector will get an extended holiday from Friday, October 11 to Saturday, October 19, and resume work on Sunday, October 20.According to a circular issued by Saqr Gobash, Minister of Labour, private sector companies will remain closed from October 14-16.


10/02/2013

 நமது ஊரில்
 நல்ல மழை பெய்து
 நாம் வாழும் பூமி செழிக்க
 பிரார்ததனைகள் செய்வோம்..
 நமது ஊரில் இருந்து
புணிய பயணங்கள் சென்றவர்கள்
 அனைவருக்கும் வாழ்த்துக்கள்
 பிரார்த்தனைகள்

9/25/2013

கோவளம் கடற்கரையோரம் அமைந்த அழகான பள்ளிவாசல்


பாளையம் பெரிய பள்ளிவாசல் திருவனந்தபுரம்


தேன் ஒரு சிறந்த நோய் நிவாரனி

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான்.

 ”நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), பின், நீ எல்லா விதமான கனி(களின்) மலர்களிலிருந்தும் உணவருந்தி 
உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில்(உன் கூட்டுக்குள்)
 ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்).

 

அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது;
 அதில் மனிதர்களுக்கு (நோய் தீர்க்க வல்ல மருந்து) சிகிச்சை உண்டு;
 நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது. (அல்குர்ஆன் 16:68,69)

அண்ணலாரின் பொன்மொழிகள்

 உமர்(ரலி) அறிவித்தார். 

 நபி அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.
 நான் இதை  என்னை விடஏழைக்கு கொடுங்களேன் என்பேன்,

 

அதற்கு நபி அவர்கள்,

 ‘இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும்  இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும்.
 ஏதும் கிடைக்கவில்லை  என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உம்முடைய மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது  கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)” என்றார்கள். நூல்: புகாரி

அண்ணலாரின் பொன்மொழிகள்

இறைத்தூதர் அவர்களிடம்  நான் (நிதயுதவி) கேட்டேன்.

 அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.

 மீண்டும் அவர்களிடம் (நிதியுதவி)  கேட்டேன்.

 அப்போதும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.

 பிறகு என்னிடம், ‘ஹகீமே!  இச்செல்வம் (பார்க்கப்) பசுமையானதும் (சுவைக்க) இனிப்பானதும் ஆகும்.  கொடையுள்ளத்துடன் இதை(க்கொடுப்பவர் கொடுக்க,

 தானும்) பேராசையின்றி எடுத்துக்  கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படும்.

 பேராசயுடன்  இதை எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை.

 அவர் (நிறையத்)  தின்றும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவராவார்.

 மேலும், (கொடுக்கும்) உயர்ந்த கை தான்  (வாங்கும்) தாழ்ந்த கையை விட மேலானதாகும்” என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர்  அவர்களே!

 தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவன் மீது சத்தியமாக!
  தங்களுக்குப் பின்,

 நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும் வரை வேறெவரிடமிருந்தும்  எதையும் பெற மாட்டேன்” என்று கூறினேன்.  அறிவிப்பவர்:  ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி)  , நூல்:புகாரி

9/20/2013


ஜும்ஆத் தொழுகை


ஜும்மாத் தொழுகையும் ஐவேளைத் தொழுகையைப் போன்றே கட்டாயக் கடமையாகும். இது லுஹர் தொழுகைக்கு பதிலாக தொழப்படும் தொழுகையாகும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.(அல்குர்ஆன் 62:9)

வாரத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் ஜும்ஆத் தொழுகையில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். தக்க காரணமின்றி கலந்து கொள்ளத் தவறியவரை நபி (ஸல்) கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

யாரையேனும் ஜும்ஆத் தொழுகை நடத்துமாறு நியமித்து விட்டு ஜும்ஆத் தொழுகைக்கு வராது வீட்டிலிருப்பரின் வீடுகளுக்குத் தீ வைத்துக் கொளுத்த வேண்டுமென நாடுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி) நூற்கள்;: அஹ்மது, முஸ்லிம்)

ஜும்ஆவும் அதானும் ஜும்ஆவுக்கு ஒரே ஒரு பாங்கு தான் கூறவேண்டும். நபி(ஸல்) , அபூபக்கர் (ரலி) , உமர் (ரலி) ஆகியோர் காலத்தில் ஒரே ஒரு பாங்கு தான் சொல்லப்பட்டது. உத்மான் (ரலி) காலத்தில் ஆட்சி விரிவடைந்ததால் மக்களை நினைவூட்டு வதற்காக கடைத்தெருவில் (அதான்) அழைப்பு விடுக்கப்பட்டது. அதான் என்பதற்கு பாங்கு என்று பொருளிருப்பது போன்றே பிரகடனம் செய்தல், அறிவித்தல் என்ற பொருளும் உண்டு. (பார்க்க: அல்குர்ஆன் 7:44, 9:3, 22:27) இங்கே கடைத்தெருவில் அதான் சொன்னதாக வருவதால் நிச்சயம் அறிவிப்பு என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

இரு குத்பாக்கள் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு சொற்பொழிவு நிகழ்த்துவார்கள.; பின்னர் உட்கார்ந்து விட்டு மீண்டும் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு ஸமூரா(ரலி) நூல்: முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் இரு சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். இரண்டுக்குமிடையே அமர்வார்கள். (அந்தச் சொற்பொழிவில்) குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள். மக்களுக்கு (நெறியூட்டும்) போதனை செய்வார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமூரா(ரலி) நூல்: முஸ்லிம் )
நாயகத் தோழர் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்கள் எங்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தியபோது சுருக்கமாகவும், இலக்கிய நயத்துடனும் சொற்பொழிவு ஆற்றினார்கள். அவர்கள் (மிம்பர்; மேடையிலிருந்து ) இறங்கியதும் தாங்கள் சுருக்கமாக சொற்பொழிவு நிகழ்த்தி;விட்டீர்களே! கொஞ்கம் விரிவாகச் செய்திருக்கக் கூடாதா? என்று நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், நீண்ட தொழுகையும் சுருக்கமான சொற்பொழிவும் (மயின்னத்துன் மின் ஃபிக்ஹிஹி) மனிதனின் அறிவுக்கு சான்றாகும். எனவே தொழுகையை நீட்டுங்கள்! சொற்பொழிவைச் சுருக்குங்கள்.
قال صلي الله عليه وسلم : ان في البيان لسحرا
(இன்னஃபில் பயானி லஸிஹ்ரா) நிச்சயமாக பயானில் (சொற்பொழிவில் பிறரை வயப்படுத்தும்) ஒரு கவர்ச்சி இருக்கிறது என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூவாயில், நூல்: முஸ்லிம்)
இந்த நபி மொழிகளிலிருந்து சொற்பொழிவின் நோக்கமே மக்களுக்கு போதனை செய்வதும் அவர்களின் உள்ளங்களை ஈர்ப்பதுமாகும். அவர்களுக்கு புரியாத மொழியில் நீண்ட உரை நிகழ்த்தி தூங்க வைப்பதல்ல என்பதை எளிதில் நாம் புரிந்து கொள்ளலாம்.

குத்பா (சொற்பொழிவு) உரையைக் கேட்பது இரு ரகஅத்துகளுக்குப் பதிலாக ஓதப்படும் ஜும்ஆ குத்பாக்களை (சொற்பொழிவுகளை) கேட்பதும் அவசியமாகும். இதில் மார்க்க நெறிமுறைகளையும் அன்றாட வாழ்வில் ஏற்படும் மக்களின் தேவைகளையும், பிரச்சனைகளையும், ஐயங்களையும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதை மக்களுக்குப் புரியும் வகையில் ஆற்றப்பட வேண்டும். அந்த வகையில் ஜும்ஆ உரை அமையவேண்டும்.
புரியும் மொழியில் குத்பா உரை இன்று அதை ஒரு மந்திரமாக ஜபிக்கப்படுவதையும், சம்பிரதாயமாக ஓதப்படுவதையும்;, இராகமாகத் தாலாட்டுப் பாடுவதையும் பார்க்கிறோம். இந்தச் சொற்பொழிவு ஒவ்வொருவருக்கும் பயன்பட வேண்டுமாயின் அவரவர் மொழியிலேயே நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இரு குத்பாக்களுக்கு பதில் மூன்று குத்பாக்கள் நம்மில் சிலர் குத்பா பேருரையில் கலந்து கொள்ளாது வெறும் தொழுகையில் கலந்து கொள்ளும் அவல நிலையையும் இன்று சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது. இதற்கு நம் நாட்டு சம்பிரதாய குத்பாக்களும் முக்கியக் காரணமாகும். சிலர் நாங்கள் அரபியில் தான் குத்பா உரை நிகழ்த்துவோம் எனக் கூறி குத்பாவுக்கு முன்னர் மேடையில் ஏறுமுன் தமிழில் ஒரு (குத்பா) உரை நிகழ்த்துவதையும் பார்க்கிறோம். இதையும் சேர்த்து மூன்று குத்பாக்களாகி விடுவதால் நபிகள் (ஸல்) ஆற்றிய இரு உரைகளுக்கு மாற்றமான (ஒரு பித்அத்) செயலாகி விடுகிறது.எனவே இதைத் தவிர்த்து மிம்பர் மேடையிலேயே இரு குத்பாக்களையும் அவரவர் மொழியில் ஆற்றப்படுவதற்கு ஆவன செய்யப்படவேண்டும்.
உரையை கவனமாகக் கேட்பது குத்பா உரையை மிகவும் கவனமாகக் கேட்கவேண்டும். அந்த வேளையில் பேசுவதும் வேறு சிந்தனைகளிலும் பராக்குகளிலும் ஈடுபடுவதை நபி(ஸல்) வன்மையாக கண்டித்துள்ளார்கள்.
யார் குத்பாவை கேட்கும்போது தரையில் கிடக்கும் பொடிக்கற்களை இங்குமங்கும் புரட்டிக்கொண்டிருக்கிறாரோ அவருக்கு ஜும்ஆவின் நன்மை வீணாகிவிட்டது என நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)
இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது உன் அருகில் இருப்பவனை நோக்கி பேசாமல் இரு என்று நீ கூறினால் நீயும் வீணான காரியத்தில் ஈடுபட்டவனாவாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம்)
நபி(ஸல்) மிம்பரில் (குத்பா உரை நிகழ்த்த) நின்று விட்டால் எங்கள் முகங்களை அவர்களை நோக்கி வைத்துக் கொள்வோம் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதிலிருந்தே ஜும்ஆ குத்பாவின் உரையின் முக்கியத்துவத்தை உணரலாம்.
ஜும்ஆவுக்கு குளித்து நறுமணம் பூசி வருவது உங்களில் ஜும்ஆவுக்கு வருபவர் குளித்துக் கொள்ளவும் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: இப்னு மாஜா (1088), நஸயீ -1315) )
ஜும்ஆ நாளில் குளித்து இயன்றவரை தூய்மைப்படுத்தி பிறகு எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி பள்ளிக்கு வந்து (அங்கே அமர்ந்திருப்பவர்களைப் ) பிரிக்கும் விதமாக அமராமல் விதிக்கப்பட்டதை தொழுது பின்னர் இமாம் சொற்பொழிவு நிகழ்த்த வந்ததும் மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் மறு ஜும்ஆவுக்குமிடையேயுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் அல்பார்ஸி (ரலி) நூல்;: புகாரி, அஹ்மது)
ஜும்ஆ நாளன்று பருவமெய்திய ஒவ்வொருவரும் குளித்து மிஸ்வாக்குச்செய்து இயன்ற வரை நறுமணம் பூசிக் கொள்வது கடமையாகும் என நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரி (ரலி), நூல்;: அபூதாவூது-371)
ஜும்ஆவுக்கு வருபவர் குளித்து மிஸ்வாக்குச் செய்து தூய்மையோடும் நறுமணம் பூசியும் வரவேண்டுமென்பதையும் மவுனமாக இருந்து குத்பாவை கருத்தூன்றிக் கேட்பதையும் இந்த நபி மொழிகள் வலியுறுத்துகின்றன.
ஜும்ஆவிற்கு முன்னரே செல்வது ஜும்ஆ நாளன்று கடமையான குளிப்பைப் போன்று குளித்து அதன்பிறகு (பள்ளிக்குச் செல்லுபவர் ஒரு ஒட்டகத்தை (அல்லாஹ்வுக்காக) அறத்துப்பலியிட்டவராவார். இரண்டாவது வேளையில் செல்வோர் ஒரு மாட்டை அறுத்துப்பலியிட்டவராவார். மூன்றாவது வேளையில் செல்வோர் ஒரு கொம்புள்ள ஆட்டை அறுத்துப்பலியிட்டவராவார். நான்காவது வேளையில் செல்வோர் ஒரு கோழியை அறுத்துப்பலியிட்டவராவார். ஐந்தாவது வேளையில் செல்வோர் ஒரு முட்டையை கொடுத்தவராவார்.
இமாம் குத்பா ஓதுவதற்காக புறப்பட்டு வந்துவிட்டால் (நன்மைகளை பதிவு செய்யும்) வானவர்கள் (தங்கள் பதிவேடுகளை) மூடிவிட்டு இமாம் நிகழ்த்தும் குத்பா உரையைக் கேட்பதற்காக (பள்ளிக்கு) ஆஜராகிவிடுவார்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: இப்னுமாஜா, நஸயீ, புகாரி, முஸ்லிம்)
உங்கள் பெயர்களை பதிவு செய்யுங்கள் முஸ்லிம்களின் (ஈத்) பெருநாளாக விளங்கும் ஜும்ஆத் தொழுகைக்கு முன்னரே சென்று வானவர்களின் பதிவேட்டில் நமது பெயர்களைப் பதிவு செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெறுவதற்கு முனைப்போடு இருந்து வரவேண்டும்.

துஆ அங்கீகரிக்கப்படும் நேரம் மூன்று நேரங்களை அல்லாஹ் தன்னிடம் மறைத்து வைத்துள்ளான். கியாமத்நாள் எப்போது நிகழும் என்பதையும், லைலத்துல் கத்ர் என்னும் மாண்பார் இரவு ரமளானின் இறுதிப்பத்து நாட்களில் என்று வரும் என்பதையும், ஜும்ஆவின் துஆ அங்கீகரிக்கப்படும் நேரம் எது என்பதையும் மறைத்து வைத்துள்ளான்.
சூரியன் உதிக்கும் நாட்களில் சிறந்த நாள் ஜும்ஆவின் நாளாகும். அன்றுதான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அன்று தான் சுவனத்திலிருந்து (பூமிக்கு) இறக்கி வைக்கப்பட்டார்கள். அந்த நாளில் ஒரு நேரமுண்டு. அதில் முஸ்லிமான அடியார் தொழுதுவிட்டு கேட்கும் எதையும் அல்லாஹ் மறுப்பதில்லை. என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா)
அந்த நேரம் எதுவென இரு நபிமொழிகள் தெரிவிக்கின்றன. ஒன்று இமாம் மிம்பரில் ஏறியது முதல் தொழுகை முடியும் வரை என்றும் பிறிதொன்று அஸர் முதல் மஃக்ரிப் தொழுகை வரை என்றும் உள்ளன.
துஆ அங்கீகரிக்கப்படும் நேரம் இமாம் எழுந்து மிம்பரில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரையாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்;: இப்னு உமர் (ரலி) )
நான் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி)யிடம் அந்த நேரத்தைப் பற்றி கேட்ட போது அவர்கள் ஜும்ஆ நாளின் அஸருக்குப்பின் தொடங்கி சூரியன் மறைவது வரையாகும் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்;: இப்னுமாஜா )
இந்த இரு ஹதீஸ்களிலிருந்து அந்த நேரம் இமாம் மிம்பரில் அமர்ந்தது முதல் சூரியன் மறையும் வரையாகும் என்பதையும் அதில் நம் தேவைகள் அனைத்தையும் அல்லாஹ்விடம் கேட்டுப் பெறுவதில் முனைப்பாக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
ஜும்ஆவின் முன் ஸுன்னத்து தொழுகை உண்டா? ஜும்ஆ நாளில் நபி(ஸல்) குத்பா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் நுழைந்தார். நீர் தொழுது விட்டீரா என்று நபி(ஸல்) கேட்க, அவர் இல்லை என்றார். (அப்போது) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என நபி(ஸல்) அவரிடம் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மது)
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) குத்பா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்பானி என்பவர் வந்து உட்கார்ந்து விட்டார். ஸுலைக் இரண்டு ரகஅத்கள் சுருக்கமாகத் தொழுவீராக! என்று நபி(ஸல்) அவரிடம் கூறிவிட்டு, இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது யாரேனும் வந்தால் சுருக்கமாக அவர் இரண்டு ரகஅத்கள் தொழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்)
இந்த உத்தரவுக்கு மாற்றமாக தாமதமாக வருபவர் குத்பா வேளையில் தொழாமல் உட்காருவதையும் தொழுபவரை தடுப்பவர்களையும் இன்று காண முடிகிறது. இது நபி வழிக்கு மாற்றமாகும்.
ஜும்ஆ தொழுகைக்கு முன் ஸுன்னத்து தொழுகை கிடையாது. ஆனால் பள்ளிவாசலுக்குரிய தஹிய்யத்துல் மஸ்ஜித் இரு ரகஅத்துகளையே நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். சிலர் இது காணிக்கை தொழுகை இல்லை. முன் ஸுன்னத் தொழுகையெனக் கூறுகின்றனர். அவ்வாறெனில் நபி(ஸல்) அவர்கள் அங்கிருந்தவர்களில் முன் ஸுன்னத் தொழாதவர்களை தொழவேண்டுமென கட்டளையிட்டிருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து நேராக பள்ளிக்கு வந்து மிம்பரில் ஏறி குத்பா உரையை துவங்கி விடுவதால் இது முன் ஸுன்னத் அல்ல என்பது தெளிவாகிறது.

ஜும்ஆவின் பின் ஸுன்னத்து தொழுகை உங்களில் எவரேனும் ஜும்ஆ தொழுதால் அதன் பின் நான்கு ரகஅத்கள் தொழட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூற்கள்: முஸ்லி;ம், திர்மிதீ, அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மது) நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆவின் பின் வீட்டிற்குச் சென்று இரு ரகஅத்கள் தொழுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்.)
ஓதவேண்டிய அத்தியாயங்கள் 1.நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுகையில் ஜும்;ஆ என்ற (62ஆவது) அத்தியாயத்தையும், முனாஃபிக்கீன் என்ற (63ஆவது) அத்தியாயத்தையும் ஓதக்கூடியவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூற்கள்:முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, நஸயீ
2. நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுகையில் அல் அஃலா என்ற (ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்னும்87ஆவது) அத்தியாயத்தையும், அல் காஷியா எனற ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா என்னும் 88ஆவது) அத்தியாயத்தையும் ஓதக்கூடியவர்களாக இருந்தனர். (அறிவிப்பவர்: ஸமுரா (ரலி), நூற்கள்:அஹ்மது, அபூதாவூது, நஸயீ )

பெண்களுக்கு ஜும்ஆ தொழுகை பெண்களுக்கு ஏனையத் தொழுகையைப் போன்றே ஜும்ஆ தொழுகைக்கும் நபி(ஸல்) அவர்கள் தொழ அனுமதித்துள்ளார்கள். பெண்கள் பள்ளிவாசல் சென்று தொழ அனுமதி கேட்டால் அவர்களின் (அந்த) உரிமைகளை நீங்கள் தடுக்க வேண்டாம் என நபி(ஸல்) கூறியுள்ளனர். (நூல்: முஸ்லிம்)
பள்ளி வாசலுக்குத் தொழவரும் உங்கள் பெண்களை நீங்கள் தடை செய்யாதீர்கள். எனினும் (தொழுவதற்கு) அவர்களுடைய வீடுகளே அவர்களுக்குச் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.( நூற்கள்: அபூதாவூத், மிஷ்காத்-1062.)

ஜும்ஆவை தவற விட்டவர் ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரகஅத்தைப் பெற்றுக் கொண்டவர் ஜும்ஆவைப் பெற்றுக் கொண்டவராவார் என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூற்கள்: நஸயீ
ஜும்ஆவின் இரண்டு ரகஅத்துகளும் ஒருவருக்குத் தவறிவிட்டால் அவர் நான்கு ரகஅத்துகள் தொழவும் என நபி(ஸல்)கூறினார்கள். நூல்: அல் தப்ரானீ

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...