9/28/2009

அன்பானவர்களே....

அன்பானவர்களே!

இதில் நாம் நிக்காஹ் என்னும் ஒரு பகுதி தொடங்கி இருக்கிறோம்.
விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விவரங்களை கொடுக்கலாம்.
இனையத்தில் உங்கள் பெயரோ தொடர்பு எண்னோ வராது.
ஒரு நிபந்தனை.. திருமணம் நபி வழியில் நடக்கவேண்டும்.


விளம்பரங்கள்

உங்களிடமிருந்து விளம்பரங்கள் எதிர்பார்க்கிறோம்.
விளம்பரம் கொடுப்பவர்கள் கொடுக்கலாம்.
ஆனால், நீங்கள் செய்யும் தொழில் ஹலாலானதாக இருக்கவேண்டும்.

ரமளானுக்குப்பின்

ரமளானுக்குப்பின் முதல் வெள்ளிக்கிழமை அன்று
நமது இமாம் அவர்கள் குத்பா உரை நிகழ்த்தினார்கள்
இந்த உரையில் தொழுகையின் அவசியத்தை வலியுறுத்தி
பல நல்ல கருத்துக்களை கூறினார்.
இதற்கு தொடக்கத்தில் 'ஜின்களையும் மனித வர்க்கத்தையும்
என்னை வணங்குவதற்காகவே என வரும்
மனித இனத்தின் படைப்பின் நோக்கத்தை மேற்கோள் காட்டினார்.
இந்த தலைப்பு எடுத்து உரை நிகழ்த்த காரனம்
ரமலான் மாதம் பள்ளிக்கு வந்த மக்களை ஷவ்வால் மாதத்தில் இருந்து
காணவில்லையே என்று தான்.. இன்னும் சொல்லவேன்டுமானால்,
பெரு நாள் தொழுகைக்கு அப்புறம்
பலரும் ஜும் ஆக்கு தான் பள்ளிக்கு வந்தனர்.
அல்லாஹ் போதுமானவன்.

'மூமினான ஆண்களுக்கு
மூமினான பெண்களுக்கும்
குறிக்கப்பட்ட நேரத்தில் தொழுகை கட்டாய கடமையாக்கப்பட்டுள்ளது'
இதில் சலுகை அளிக்கப்பட்டது ஒரு சிலருக்கே?!

9/21/2009

ஈகைப் பெருநாள்

நமது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்
இனிய பெருனாள் வாழ்த்துக்கள்

ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்







அல்லாஹ்வின் பேரருளால் இன்று தொழுகை
நமது பள்ளி வளாகத்தில் சரியாக காலை 7.30 மணிக்கு
அறிவித்து இருந்தோம். அதன் படி காலை 7.00 மணிமுதலே
மக்கள் வர ஆரம்பித்தனர்.. சரியாக 7.30 மணிக்கு நமது பள்ளி இமாம்
முனிர் ஸலாஹி அவர்கள் பெரு நாள் தொழுகை
எப்படி தொழுவது என விளக்கினார்.




அதற்கு அப்புறம் தொழுகை வைத்தார்.
தொழுகைக்குப்பின் சுமார் 15 நிமிடங்கள்
இறையச்சம் குறித்து சொற்பொழிவாற்றினார்.
மிக நல்ல உரை. இமாம் சொற்பொழிவின் போது
திடலில் இருந்த மக்களுக்கு பேரீச்சம்பழம், தண்ணீர் வழங்கப்பட்டது.




ஆண்களும், பெண்களும் திடல் முழுவதும் நிறைந்தனர்.
மக்கள் வருவதற்கு ஒரு பாதையும்,
செல்வதற்கு வேறு பாதையும் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது.

9/20/2009

பித்ரா பணிகளில்..







இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி
அண்ணலாரின் வழிமுறையில்..

எல்லா புகழும் இறைவனுக்கே!







பித்ரா என்னும் மார்க்க கடமைகளில்



நமது இஸ்லாமிய மக்களுக்காக



சமுதாய பணிகளில்..







இதன் உழைப்பை மறுமையில் எதிர்பார்க்கும் அன்ஸார்கள்

ரமளானின் கடைசி வெள்ளிக்கிழமை



வெள்ளியன்று நமது இமாம் ஜும் ஆ உரை நிகழ்த்தினார்.
இந்த உரையில் பித்ரா அதன் அவசியம் இரன்டையும் எடுத்துரைத்தார்.
அதன் பின் பெருனாள் தொழுகை அது தொடர்பான நபிமொழிகள்
இவை அனைத்தையும் தொகுத்து உரையாக கொடுத்தார்.

உரையின் இறுதியில் ஷவ்வால் மாதம் 6 நோன்பு வைப்பது பற்றியும் கூறினார்.
வழக்கம் போல பள்ளி வளாகத்திலும் மக்கள் தொழுதனர்.

சஹர் உணவு காட்சிகள்..

பிந்திய பத்து இரவுகளில்

இரவில் நின்று வணங்கிய சகோதர, சகோதரிகளுக்கு
சஹர் உணவு காட்சிகள்..








பிந்திய பத்து இரவுகளில்

இரவில் நின்று வணங்கிய சகோதர, சகோதரிகளுக்கு
சஹர் உணவு காட்சிகள்..

9/18/2009

நாயகம் (ஸல்) வழியில் பித்ரா









நாயகம்(ஸல்) காட்டித் தந்த வழியில் பித்ரா கடமையில்

நமது அமைப்பின் செயல்பாடுகள்
இதோ உங்களுக்காக சில காட்சிகள்

அல்ஹம்துலில்லாஹ்






நோன்பு கஞ்சி நேரலையாக

நோன்பு கஞ்சி நேரலையாக அடுப்பில் இருந்து

நமது வாசகர்களுக்காக சூடாக இந்த புகைப்படம்





நோன்பாளிகளுக்காக பரிமாற
மறுமையில் நன்மையை எதிர்பார்த்து அன்புச் சகோதரர்கள்

நபிகளாரின் பொன்மொழிகள்

நோன்புப் பெருநாளில் தொழச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது.

நபி (ஸல்)அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ

சில பேரிச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்)அவர்கள் புறப்பட மாட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பெருநாள் வந்துவிட்டால் நபி (ஸல்)அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். புகாரி

திடலில் பெருநாள் தொழுகை

பெரும்பாலும் நபி (ஸல்)அவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த பொது மைதானத்தில் தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) அபூதாவூத், இப்னுமாஜ்ஜா





பெருநாள்களில் பாங்கு இகாமத் சொல்லப்பட்டதில்லை

ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கூறினார்கள்: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. புகாரி


பெருநாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் எந்தத் தொழுகையும் இல்லை

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி
முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும்

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா

பெருநாள் தொழுகைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும்

வீட்டில் தனித்து இருக்கும் நாங்கள் மாதவிடாய் பெண்கள் முதற்கொண்டு இரு பெருநாள் தொழுகைக்கு வெளியே வர ஆணையிடப்பட்டோம். தொழுகையில் கலந்து கொள்ளவும், பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்திலிருந்து ஒதுங்கி இருக்க பணிக்கப்பட்டோம். அப்போது ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்காவது உடை இல்லையெனில் என்ன செய்வது என வினவினார். அதற்கு நபி அவர்கள் உங்களது தோழிகளிடமிருந்து ஓர் உடையை கடனாக வாங்கி உடுத்தி வாருங்கள் என பதில் கூறினர். அறிவிப்பவர் உம்மு அதிய்யா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயி, இப்னுமாஜ்ஜா




பருவமடைந்த மற்றும் மாதவிடாய் பெண்களையும் பெருநாள் தொழுகைக்கு வெளியே அனுப்புமாறு நபி (ஸல்)அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நற்பணிகளில் மற்றும் முஸ்லிம்களுடைய துஆவில் அவர்கள் பங்கு பெறுவதற்காக. ஆனால், மாத விலக்கான பெண்கள், தொழும் இடத்தின் ஓரப்பகுதியில் இருக்க வேண்டும். என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி) நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

9/17/2009

ஈத் பெரு நாள் தொழுகை

இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது
நோன்புப் பெருனாள் தொழுகையை நபி(ஸல்) தொழுவார்கள்.
அறிவிப்பாளர் : ஜுன் துப் (ரலி)
நூல் : அஹ்மது

அன்பானவர்களே!

இன்ஷால்லாஹ் இந்த வருடம் ஈத் பெரு நாள் தொழுகை
நமது பள்ளி வளாகத்தில் சரியாக காலை 7.30 மணிக்கு நடைபெறும்.
அனைவரும் காலதாமதம் இன்றி உரிய நேரத்தில் வந்து
தொழுகையில் கலந்துக் கொள்ளுமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

9/15/2009

கடமையான ஃபித்ரா

நபி அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி "தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி

முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமாணவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தார்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரித்தம் பழம் ஆகியவற்றை ''தர்மமாக" கொடுக்கும்படி நபி அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான தவறுகள் ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும், ஏழைகளுக்கு உணவாக இருக்கும் பொருட்டும் நபி அவர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவுத், இப்னுமாஜா


வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. நபித்தோழர் இப்னு உமர்(ரலி) தனது ஃபித்ரா தர்மத்தை பெருநாளைக்கு முன்பே அனுப்பி வைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் இதற்கு ஈதுல் ஃபித்ர் ஈகைப்பெருநாள் என பெயரானது.

اَللَّهُمَّ اِنَّكَ عَفُوٌّ ، تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி?உள்ளது.?அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது,
நபிصلى الله عليه وسلم அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும்.
எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான்.
நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை.?
அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி)
நூல்:முஸ்லிம்
-------------------------------------------------------------------------
லைலத்துல் கத்ர்

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!) அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூலகள்்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்


லைலத்துல் கத்ர் இரவு கடைசி பத்து நாட்களில் உள்ளது. அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்தி மூன்றாவது இரவிலோ உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி

லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி அவர்கள் லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும் இருபத்தேழாம் இரவிலும் இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)நூல்: புகாரி, முஸ்லிம்

ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.


''எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்


நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டீர்களா? என்று அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், ‘ஆம்’ நாங்கள் ரமலானின் நடுப்பத்து நாள்களில் நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப இருந்தோம். இருபதாம் நாள் காலையில் வெளியேறினோம். இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், ‘எனக்கு லைலத்துல் கத்ர் காட்டப்பட்டது. அதை நான் மறந்து விட்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களின் ஒற்றை இரவுகளில் தேடுங்கள். அன்று ஈரமான களிமண்ணில் நான் ஸஜ்தாச் செய்வது போல் கனவு கண்டேன். யார் அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாஃப் இருந்தாரோ அவர் பள்ளிக்குத் திரும்பட்டும்’ எனக் கூறினார்கள். மக்கள் பள்ளிக்குத் திரும்பினார்கள். அப்போது வானத்தில் சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் வந்து மழை பொழிந்தது. தொழுகைக்க இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களின் நெற்றியிலும் மூக்கிலும் களிமண்ணை கண்டேன்’ என்று விடையளித்தார்.
நூல்: புகாரி
நிச்சயமாக ஈமான் கொண்டு, நல்லறங்கள் புரிபவர்களுக்கு ஃபிர்தவ்ஸ் என்னும்
சொர்க்கங்கள் அவர்களின் தங்கு மிடமாகும். அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள். அதிலிருந்து மாறுவதை விரும்பமாட்டார்கள். (அல்குர்ஆன்:18:107-108)

எவர்கள் ஈமான் கொண்டு, நல்லறங்கள் புரிகின்றார்களோ
அவர்களே சொர்க்கத்திற்குரியவர்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள். (அல்குர்ஆன் : 2:82)

நிச்சயமாக எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் எனக் கூறி,
அதில் உறுதியாக நிலைத்து நிற்பவர்கள் மீது (அவர்களின் மரண வேளையில்) மலக்குமார்கள் இறங்கி, நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்!
உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கம் உள்ளது என்ற சுபச் செய்தியைப்
பெற்றுக் கொள்ளுங்கள்! என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் : 41:30)

இப்தார் வேளைகளில்...



தினமும் இப்தார் வேளைகளில்
வீன்பேச்சுக்கள் பேசாமல்
பாவமன்னிப்பு தேடலிலும், பிரார்த்தனைகளிலும்
அதே சமயம் மக்களை நல்வழிபடுத்தவும்
இறை சிந்தனைகள் கொடுப்பதுண்டு.
அந்த நேரங்களில் சுமார் ஐந்து நிமிடம்
நமது பள்ளி இமாம் ஒரு சிற்றுரை ஆற்றும்போது...

9/13/2009

அர் ரஹ்மான் செய்திகள்

அன்பானவர்களே!
நமது பள்ளியான அர் ரஹ்மான் இனிதே நடைபோடுகிறது.
அது மென்மேலும் கல்வியில் சிறந்து
நானிலத்தில் நல்ல ஒரு ஸ்தாபனமாக திகழ
புண்ணிய மாதமான இந்த ரமளானில் பிரார்த்தனை செய்யுங்கள்.



அர் ரஹ்மானின் விடுமுறை காலங்கள்

இன்ஷால்லாஹ் எதிர் வரும் நோன்பு பெருனாள் விடுமுறை மற்றும்
காலாண்டு தேர்வு விடுமுறைகள் இனைந்து நமது பள்ளியில்
LKG & UKG மாணவ செல்வங்களுக்கு SEP 18 முதல் OCT 3ம் தேதிவரை பள்ளி விடுமுறை.

1வது மற்றும் 2ம் வகுப்பு மாணவ செல்வங்களுக்கு
25ந்தேதி முதல் 3ம் தேதி வரை விடுமுறை.
இன்ஷால்லாஹ் வழக்கம் போல் அக்டோபர் 4ம் தேதி
பள்ளி விடுமுறைக்குப்பின் திறக்கப்படும்.

நோன்பாளிகளுக்காக சங்கையாக...



நோன்பாளிகளுக்கு..

பேரீட்சம் பழம், வடை, சமூசா,
நோன்பு கஞ்சி, கஞ்சிக்கு துவையல்
பால் சர்பத், பிரியானி, ஆப்பிள்..





நோன்பாளிகளிகளுக்காக நமது பள்ளியில்
சிறப்பாக இப்தார் விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
அதில் சில காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறோம்.
அன்றைய தினம் சிறப்பாக பால் சர்பத்துடன்
சுவையான பிரியானியும் நோன்பாளிகளுக்கு வழங்கப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே!








9/11/2009

செய்திகள்

அன்பான கொள்கை சகோதரர்களே

நேற்று இரவு முதல் கியாமுல் லைல் துவங்கியது
நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இரவுத்தொழுகைக்கு வந்திருந்தனர்.

இன்று ரமலானின் வெள்ளிக்கிழமை சிறப்பாக இருந்தது.
நமது பள்ளியின் இமாம் முனிர் ஸலாஹி அவர்கள் உரையாற்றினார்கள்,
இன்றைய ஜும் ஆ உரையில் கண்ணியமிக்க இரவு,
ஆயிரம் மாதங்களை விட சிறந்ததான அந்த ஓர் இரவைப்பற்றி
மிகச்சிறப்பாக உரையாற்றினார். நமது பிராத்தனைகளில்
அந்த ஓர் இரவை அடையும் பாக்யசாலிகளாக நாம் ஆகவேண்டும்
என துவா செய்யுமாறும் கூறினார்.



அதே போல ரமலானின் இறுதி பத்து நாட்களில்
நாயகம்(ஸல்) அவர்கள் காட்டித்தந்த இதிகாப் குறித்தும்
சொற்பொழிவாற்றினார். எல்லாவாரமும் போல
கூட்டம் அதிகமாகவே இருந்தது.
இன்று வெயிலின் தாக்கமும் இருந்தது.

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...