அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த
நற்செயல்களைச் செய்யும்போது
ஏராளனமான நன்மைகளை அல்லாஹ்
பரிசாக வழங்குகின்றான். திருக்குர் ஆனை
ஓதுபவருக்கு அல்லாஹ் அள்ளி வழங்கும்
நன்மைகளை பார்க்கலாம்.
'உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச்சென்று மகத்துவமும் கண்ணியமும்
நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை ஓதவோ அல்லது
விளங்கவோ கூடாதா? அவ்வாறு சென்று இரண்டு வசனங்களை ஓதுவது
இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று
பெண் ஒட்டகங்களை விடச்சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை
விடச்சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை
விடச் சிறந்தது என்று சொன்னார்கள்.'
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர்(ரலி)
நூல் : முஸ்லிம்
( நீண்ட நபிமொழியின் சுருக்கம்)
ஓதுபவருக்கு உவமை
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர் ஆனை ஒதுகின்ற( நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும்.
அதன் சுவையும் நன்று! வாசனையும் நன்று! ( நல்லவராக இருந்து) குர் ஆன்
ஓதாமல் இருப்பவர் பேரீச்சம்பழத்தை போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாக இருந்து கொண்டு குர் ஆனை ஓதிவருகின்றவனின் நிலை
துளசிச்செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு!
தீமையும் செய்து கொண்டு குர் ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை
குமட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு,
அதற்கு வாசனையும் கிடையாது.
அறிவிப்பவர் : அபுமூஸல் அஷ் அரீ (ரலி)
நூல் : புகாரி (5020)
மலக்குகளுடன் சஞ்சரிப்பவர்
' குர் ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர்
இறைவனுக்கு கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத்தூதர்களுடன் இருக்கின்றார்.
சிரமம் மேற்கொண்டு தட்டுத்தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன
என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'
அறிவிப்பவர் : ஆய்ஷா (ரலி)
நூலகள் : முஸ்லிம் , திர்மிதி
பொறாமைப்படுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விசயங்களைத் தவிர வேற எதற்காகவும் பொறாமை கொள்ளக்கூடாது.
1) ஒரு மனிதனுக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர்
இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.
2)இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர்
அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
நூல் : புகாரி (5025)
எழுத்துக்கு பத்து நன்மை
அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு எழுத்தை ஓதுபவருக்கு
ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளை போன்றதாகும்.
அலிப், லாம், மீம்- என்பதை ஓர் எழுத்து என்று சொல்லமாட்டேன். மாறாக,
அலிப் ஒரு எழுத்து , லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் (ரலி)
நூல் : திர்மிதி
'அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் மக்கள் கூடி
அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில்
அதை ஓதிக்காட்டி, பாடம் படிக்கும் போது அமைதி
அவர்கள் மீது இறங்காமல் இருக்காது, அவர்களை
அருள் அரவணைத்துக் கொள்கின்றது. மலக்குகள்
அவர்களை சூழ்ந்து விடுகின்றனர். குர் ஆன் ஓதும்
அவர்களை அல்லாஹ் தன்னிடம் உள்ள மலக்குகளிடம்
நினைவு கூர்கின்றான். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.'
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்
இந்தச் செய்திகளின் அடிப்படையில்
குர் ஆனை அதிகமதிகம் ஓதி
நன்மையை அடைவோமாக!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொழுகை நேரங்கள்
தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...
-
நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் - நயீமா பர்வீன் அல்லாஹ்விடம் விருப்பமான அமல்களில் ஒன்று நோன்பு. நமக்கு நன்மையான காரியங்கள் நடக்கும...
-
இறைவனுடைய ஆலயத்தை தொழுகையால் அலங்கரிக்க மக்கள் துவங்கி விட்டார்கள். சில தினங்களாக தொழுகைக்காக பள்ளியை நோக்கி வர துவங்கிவிட்டார்கள். இன்று...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பதிலளிநீக்குநமது கென ஒரு இணையத்தளம் துவங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்களது பணி மேன்மேலும் சிறக்க வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பதிலளிநீக்குநமது MTCT கென ஒரு இணையத்தளம் துவங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்களது பணி மேன்மேலும் சிறக்க வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்
கருத்து சொன்னதற்கு நன்றிகள்
பதிலளிநீக்குஇன்னும் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் சொல்லலாம்.
உங்களுடைய எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ளலாம்.