9/02/2009

தடை செய்யப்பட்ட நாட்கள் தொடர்-4

ரமலானுக்கு முந்திய இரண்டு நாட்கள்

ரமலான் பிறை தென்படுவதற்கு முந்திய இரண்டு நாட்களிலும்
குறிப்பாக நோன்பு நோற்கக்கூடாது. வழமையாக நோன்பு நோற்பராக இருந்தால்
அந் நாட்களில் நோன்பு நோற்கலாம்.
'ரமலானுக்கு ஒரு நாள், இரண்டு நாட்கள் முன்பாக நீங்கள்
நோன்பு நோற்காதீர்கள். உங்களில் ஒருவர் வழக்கமாக நோற்கும் நோன்பு
அந்த நாளில் அமைந்துவிட்டால் தவிர இவ்வாறு செய்யாதீர்கள்'.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ.

தொடர் நோன்பு நோற்றல்

அல்லாஹ்விற்கு விருப்பமான அமல்களில் ஒன்றாக நோன்பு இருந்தாலும்
தொடர்ந்து நோன்பு நோற்பதை அல்லாஹ் விரும்புவதில்லை அப்படி
விரும்பியவர்களையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே! காலமெல்லாம் நோன்பு நோற்றவரின் நிலை
எத்தகையது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு
நபி(ஸல்) அவர்கள் அத்தகையவர் நோன்பு வைக்கவில்லை. நோன்பு
துறக்கவுமில்லை என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)
நூலகள் : திர்மிதீ, நஸயீ

சந்தேகத்திற்குரிய நாட்கள்

ரமலான் பிறை பார்த்ததாக தெளிவான தகவல் கிடைக்காதபோது
ரமலான் நோன்பு நோற்பது கூடாது.
' நாங்கள் அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களிடம்
இருந்த போது பொறிச்ச கறி கொண்டு வரப்பட்டது. அவர்கள் எங்களை
சாப்பிடுங்கள் என்று கூறினார்கள். அவர்களில் சிலர் பின் வாங்கினார்கள்.
அப்போது நான் நோன்பாளி என்றேன். அதற்கு அம்மார் (ரலி)
அவர்கள் பிறை தெரிந்ததா? இல்லையா? என்று சந்தேகம் ஏற்படும் நாளில்
நோன்பு நோற்பவர் அபுல்காஸிம் நபி(ஸல்) அவர்களுக்கு மாற்றம் செய்துவிட்டார்
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸிலா இப்னு ஸுபர்
நூல்கள் : திர்மிதீ, அபூதாவூத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொழுகை நேரங்கள்

தொழுகையாளிகள் நமது பள்ளிவாசலுக்கு தினமும் பஜ்ர் தொழுகைக்கு அதிகமானோர் வருகின்றனர். இரன்டு வரிசை குறையாமல் மக்கள் வருகின்றனர். வாரந்தோ...