இன்று நமது பள்ளியில் ரமலானின் வெள்ளி ஜும் ஆ உரை
மிகச்சிறப்பாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இன்றைய உரையின் சிறப்பம்சமாக நமது இமாம்,
ஜக்காத் என்றால் என்ன? அது எப்படி ?
யார் யார் கொடுக்கவேன்டும்? நகை இருந்தால் எப்படி?
பணமாக இருந்தால், சொத்தாக இருந்தால் எப்படி? என
ஜக்காத்தின் நிலைகளை விரிவாக பேசினார்.
இந்த சொற்பொழிவு நமது ஜமாத்தினருக்கு மிகவும் அவசியமானது.
இந்த உரையின் இறுதியில் ஜக்காத் வாங்க தகுதியான 8 நபர்களை
அல்லாஹ் வேதத்தில் சொல்கிறான் அல்லவா?
அந்த 8 பற்றி பேசினார். நல்ல ஒரு அழகான சொற்பொழிவு,
இன்றைய வெள்ளிக்கிழமை சென்றவாரம் போலவே பள்ளி நிரம்பியது.
ஜும் ஆ தொழுகைக்குப்பின் நாம் ஆரம்பித்து இருக்கும்
பைத்துல் மால் பற்றி மக்களிடம் தெரிவிக்கப்பட்டது.
ஜக்காத் கொடுக்க தகுதியானவர்கள்
தனது கடமையை சரியாக நிறைவேற்றி
இரு உலகிலும் நற்பாக்கியங்கள் பெற துவா செய்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக